Advertisement
2012ல் மொபைல் உலகம்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
00:00

சென்ற ஆண்டில் பல வியத்தகு மாற்றங்கள், மொபைல் உலகில் ஏற்பட்டன. ஆண்ட்ராய்ட் இயக்கமும் சாம்சங் நிறுவனமும் மக்களிடையே பிரபலமாயின. ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையும், அதற்கான சாதனங்களைத் தயாரித்த கூட்டாளியான சாம்சங் நிறுவனமும், ஆப்பிள் மற்றும் ஐபோனை, அடுத்த நிலைக்குத் தள்ளின. மொபைல் உலகில், மைக்ரோசாப்ட்,நோக்கியா மற்றும் ரிசர்ச் இன் மோஷன் ஆகிய நிறுவனங்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் உறுதியான விற்பனைச் சந்தையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்த நிகழ்வுகளுக்கான கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.

1. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை முழுமையாக வென்ற ஆண்ட்ராய்ட்:






ஸ்மார்ட் போன் இயக்கத்தில், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிலையான இடம் பிடிக்கும் என்ற சந்தேகம், 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது. இந்த சந்தேகங்களை உடைத்தெறிந்து, ஆண்ட்ராய்ட் தன்னை முதல் இடத்தில் மட்டுமில்லாமல், பெரும்பான்மையான ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இடம் பிடித்தது. 2012 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், உலக அளவில் 75% ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டமே இடம் பெற்றிருந்தது. அமெரிக்காவில் ஐபோன் பயன்பாடு பெரிய அளவில் இருந்தாலும், உலக நாடுகளை மொத்தமாகப் பார்க்கையில், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கொண்ட போன்கள் 14.9 சதவிகிதமே இருந்தன.
2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மிக வேகமாக முன்னேறி, ஆண்ட்ராய்ட் முதல் இடத்தைப் பிடித்தது. பன்னாட்டளவில், ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் உள்ளது சீனாவில்தான். 78 கோடியே 60 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் இங்கு பயன்படுத்தப் படுகின்றன. அமெரிக்காவில் மட்டும்தான் ஆப்பிள் இதற்குச் சரியான போட்டியை இன்னும் தந்து கொண்டுள்ளது.

2. விண்டோஸ் மொபைல்:






மைக்ரோசாப்ட், மொபைல் உலகிலும் தன் பங்கினைப் பெரிய அளவில் பெற்றிட திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இந்தப் பிரிவில் இதுவரை பெற முடியாமல் போனதை, விண்டோஸ் போன் 8 பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறது. விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நவம்பரில் வெளியானது. கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கான விண்டோஸ் 8 வெளியாகி சில நாட்களில் இது வெளியானது. என்றாவது ஒரு நாள், மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இணைந்த சிஸ்டமாக உருவாகும். எச்.டி.சி., நோக்கியா, சாம்சங் ஆகியவை விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் போன்களை உருவாக்கித் தருவதால், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தினை மைக்ரோசாப்ட் விரைவில் பிடிக்க இயலும்.

3. நோக்கியாவைத் தள்ளிய சாம்சங்:






ஏற்கனவே ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்த சாம்சங், தற்போது மொபைல் போன் விற்பனையிலும் நோக்கியாவை இரண்டாவது இடத்திற்கு ஒதுக்கி, முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏறத்தாழ 14 ஆண்டுகள், இந்த வகையில் முதல் இடத்தை நோக்கியா கொண்டிருந்தது. இப்போது உலக அளவில் சாம்சங் நிறுவன போன்கள் அதிகம் விற்பனையாகிறது.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathiabalan - pondicherry,இந்தியா
20-ஜன-201308:25:07 IST Report Abuse
sathiabalan Sony mobile mathiri tharam irukuma samsungil
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.