சில வாரங்களுக்கு முன்னர், உலகை இணைக்கும் நட்புப் பாலம் என ஆண்ட்ராய்ட் சாதனங்களில் கிடைக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் புரோகிராம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டது. சென்ற புத்தாண்டு தொடக்கத்தின் போது இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மட்டும் இந்த அப்ளிகேஷன் வழியாக அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்திகள் 1,800 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தான், இந்த சாதனையின் முன்னோடியாக 1,100 கோடி மெசேஜ் அனுப்பப்பட்டன.
இதே போல ஆப்பிள் நிறுவனமும் தன் ஐமெசேஜ் டெக்ஸ்ட் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட செய்திகளின் எண்ணிக்கையை அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முழுவதும், இதனைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட செய்திகள் 30,000 கோடி. ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு சராசரியாக நூறு கோடி செய்திகள் அனுப்பப்பட்டன. வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனை வழங்கும் நிறுவனம் 2009ல் தான் தொடங்கப்பட்டது. ஆண்ட்ராய்ட், பிளாக் பெரி, ஐ ஓ எஸ், சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய கட்டமைப்பில் மெசேஜ், இமேஜ், ஆடியோ, வீடியோ ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ள அப்ளிகேஷன்களை வடிவமைத்து வழங்கியுள்ளது. இந்த வசதியினைப் பயன்படுத்த கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.