மொபைல் சாதனங்கள் வழியாக இன்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் வேகமாகப் பரவி வருவதால், இவ்வகை பயனாளர்களின் எண்ணிக்கை 16 கோடியே 50 லட்சமாக உயரும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்டர்நெட் மொபைல் அசோஷியேசன் ஆப் இந்தியா மேற்கொண்ட இந்த ஆய்வில், நடந்து முடிந்த ஆண்டில், மொபைல் இன்டர்நெட் பழக்கம் வழக்கத்திற்கு மாறான அளவில் உயர்ந்ததனையும் கண்டறியப்பட்டுள்ளது. 35 நகரங்களில், 21 ஆயிரம் வீடுகளில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 2012 டிசம்பரில், மொபைல் இன்டர்நெட் பயன்படுத்தியவர்கள் 8 கோடியே 71 லட்சமாக இருந்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்னர், இது 7 கோடியே 87 லட்சமாக இருந்தது. நடப்பு 2013 ஆண்டின் முடிவில் இந்த எண்ணிக்கை 9 கோடியே 29 லட்சமாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது 16 கோடியே 48 லட்சமாகவும் உயரும் வாய்ப்பு உள்ளது. 2009 ஆம் ஆண்டில் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 41 லட்சமாக மட்டுமே இருந்தது.
மொபைல் வழி இன்டர்நெட் பயன்படுத்தும் ஒருவர், சராசரியாக மாதம் ரூ. 450 செலவழிக்கிறார். இதில் 60% பணமான ரூ.198, இன்டர்நெட் சார்ந்த தேவைகளுக்கும், 40% பணம் பேச்சு சார்ந்த செயல்பாடுகளுக்கும் செலவழிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயமாகும். மொத்த செலவில் 60%க்கும் மேலாக, இன்டர்நெட் சார்ந்த வேலைகளுக்கு மக்கள் செலவழிக்கத் தயாராக உள்ளதையே காட்டுகிறது.
மொபைல் வழி இன்டர்நெட் பயன்பாட்டில், 83% இமெயில் தொடர்பிலும், 77% சமூக இணையதள தொடர்பிலும் மேற்கொள்ளப் படுகின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.