ஏழு லட்சத்து 70 ஆயிரம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், பதிந்துள்ள பயனாளர்கள் 50 கோடி, இதுவரை 4 ஆயிரம் கோடி டவுண்லோட், 2012ல் மட்டும் 2 ஆயிரம் கோடி டவுண்லோட் என, உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கிடங்காக, ஆப்பிள் ஸ்டோர் இன்று உருவெடுத்துள்ளது.
2008ல் தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் கடையிலிருந்து பெறப்பட்ட புரோகிராம்களின் எண்ணிக்கை அனைவரையும் வியக்க வைக்கிறது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை உருவாக்கும் சாப்ட்வேர் வல்லுநர்களுக்கும் இது வருமானத்தைத் தந்து வருகிறது. இதுவரை 700 கோடி டாலர் அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஸ்டோரின் வளர்ச்சி கடந்த ஓர் ஆண்டில் தான் மிக வேகமாக இருந்துள்ளது. இந்த வேகம் இந்த ஆண்டில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பருக்குள், 100 கோடி மொபைல் புரோகிராம்கள் தரவிறக்கம் செய்யப்படும் என இதனை ஆய்வு செய்திட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.