E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இந்த வார டவுண்லோட் - தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
00:00

பல நேரங்களில், நாம் இணைய தளங்களிலிருந்து கோப்புகளை, படங்களை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்க கோப்புகளை டவுண்லோட் செய்கிறோம். தரவிறக்கம் செய்திடும் முன் அதன் அளவு என்ன என்பது நமக்குக் காட்டப்படுவதில்லை. இறக்கிக் கொள்ள கட்டளை கொடுத்த பின்னரே, இந்த தகவல்கள் கிடைக்கின்றன. பைல் அளவு, நொடிக்கு எத்தனை பைட்ஸ், முழுவதுமாக இறங்க எவ்வளவு நேரம் ஆகும் என்ற குறிப்புகள் கிடைக்கும். ஆனால், இவை இறக்கிக் கொள்ள கட்டளை கொடுக்கும் முன்னரே கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதன் அடிப்படையில் அது தேவையா எனக் கூட நாம் முடிவெடுக்கலாம். இதனை புரோகிராம் ஒன்று நமக்குத் தருகிறது. இந்த புரோகிராமினை இலவசமாக தரவிறக்கம் செய்து,இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.
அந்த புரோகிராம் பெயர் Get File Size. இந்த புரோகிராமினை http://www.unhsolutions.net /GetFileSize/index.html என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். செய்தபின், நீங்கள் டவுண்லோட் செய்திட வேண்டிய பைலின் லிங்க் சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். அப்போது கிடைக்கும் மெனுவில் “Get File Size” என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்தால் அந்த பைலின் அளவு மட்டுமின்றி, அந்த பைல் எப்போது அப்லோட் செய்யப்பட்டது, டவுண்லோட் ஆனால் அதன் அளவு எவ்வளவு இருக்கும், எவ்வளவு நேரம் ஆகும் என்ற தகவல்கள் கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் டவுண்லோட் மேனேஜர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் கவலைப் பட வேண்டாம். இந்த புரோகிராம் அதற்கு மாற்று கிடையாது.
இந்த புரோகிராமில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே செயல்படுகிறது. இதன் தளத்தில் இந்த புரோகிராம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் வரை உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் பின்னர் வந்த விண்டோஸ் சிஸ்டங்களில் இது இயங்காது.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.