பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
00:00

வீட்டில் இருந்தபடி நமக்குத் தேவையான பொருட்களை இணையம் வழி வாங்குவது நம் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தும். இந்த வழியில் வாங்கினால், சற்று விலை குறைவு என்றால், அனைவரும் பயன்படுத்துவார்கள். அமெரிக்கா இந்த வழியைத்தான் பயன்படுத்தி, மக்களிடம் நற்பெயரைப் பெற்றது.
சி.குமரேசன், சென்னை.

கூகுள் மெயில் தேடல்கள் அனைத்தையும் செயல்படுத்திப் பார்த்தேன். மிகச் சிறப்பாகவும் சரியாகவும் இயங்கின. புதிய வழிகளைத் தருவதில் கூகுள் இணைய தளமும், அவற்றை எங்களுக்கு தருவதில் தினமலரும் இயங்குவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
பேரா. எ. ஸ்ரீதர் ராஜா, மதுரை.

கம்ப்யூட்டருக்கான மின் சக்தி பாதுகாப்பு குறித்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பயனுள்ள வாகவும், தெளிவாக நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று காட்டுகிறது. எழுதியவருக்கு வணக்கங்கள்.
எஸ். ஹேமலதா, செங்கல்பட்டு.

மின்சக்தி எங்கே அய்யா கிடைக்கிறது? என்று புலம்பினாலும், நம் கம்ப்யூட்டரை அதன் திருவிளையாடல்களிலிருந்து காப்பாற்றுவது முக்கியம். நல்ல கட்டுரை. விளக்கப் படம் கூடுதல் சிறப்பு.
ஆ. சிவகணேசன், சிதம்பரம்.

நீங்கள் குறிப்பிட்டபடி 10 ஜிபிக்கும் சற்றுக் குறைவாக பைலினை ஜி ட்ரைவ் வழி அனுப்பினேன். எவ்வளவு எளிதாக, கூகுள் வழிகளை அமைத்துத் தருகிறது. மக்களுக்கு தொடர்ந்து சேவைசெய்திடும் கூகுள் நிறுவனத்திற்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்.
எஸ். ரிச்சர்ட் தேவ குமார், பெரிய பாளையம்.

பல வாரங்களாக விண்டோஸ் 8 டிப்ஸ் எதிர்பார்த்தேன். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தரும் விளக்கம் போல எங்கும் கிடைப்பதில்லை.
எஸ். சுகந்தி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

இன்டர்நெட் வேகம் குறித்த கேள்விக்கான பதிலைப் படித்து, அந்த இணைய தளம் சென்று, என் இணைய வேகத்தினை அளந்தேன். சேவை தரும் நிறுவனம் கூறும் அளவிற்கு வேகம் கிடைக்கவில்லை என்பதனை அறிந்தேன். வேகம் அளந்து கூறும் இணைய தளம் மிகத் துல்லிதமாக முடிவுகளைத் தருவது வேடிக்கையாக உள்ளது.
என். கஸ்தூரி, மதுரை.

வாசகர்களின் கேள்வி சிக்கலாக இருந்தாலும், எளிதாக இருந்தாலும், அதே பொறுப்புணர்ச்சியுடன் பதில்களை விளக்கமாகவும். தேவைப்படும் போது படங்களுடன் தரும் தங்கள் பணிக்கு என் நன்றி, பாராட்டுக்கள்.
கே. கண்ணபிரான், ஹோசூர்.

நம் நாடு மிகவும் பிற்போக்கான கொள்கைகளைக் கொண்டது. இணைய வர்த்தகம் மேற்கொள்ள தயங்குவார்கள். உங்கள் கட்டுரை அவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது.
டாக்டர் சி.எஸ். ராமமூர்த்தி, சென்னை.

பைல் சுருக்க வழிகள், அதற்கெனப் பயன்படுத்தும் புரோகிராம்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு காட்டியதும், பயன்களையும் இணைத்துத் தந்திருப்பதுவும் மிகவும் அருமை.
சி.ஆர். இராமமூர்த்தி, புதுச்சேரி.

கணினியின் அடிப்படை நூலினை நான் ஏற்கனவே வாங்கிப் படித்துப் பயன் பெற்றேன். தங்கள் நூல் குறிப்புரை படித்தபின், மீண்டும் விட்டுப் போனதைப் படித்தேன். நூலை எழுதியவருக்கும், குறிப்புகள் சுட்டிக் காட்டிய கம்ப்யூட்டர் மலருக்கும் நன்றி.
எஸ். சிக்கந்தர், காரைக்கால்.

தேடல் என்று வந்துவிட்டால், இணையத்தில் கூகுள் தான். எத்தனை வழிகள்! அப்பப்பா!! உலகின் அறிவுத் தேடல் வளர்ச்சியில் நிச்சயம் கூகுள் நிறுவனத்திற்கு ஓர் இடம் உண்டு.
டி.கே. சுந்தர், காட்டுப்பாக்கம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.