கேள்வி பதில்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
00:00

கேள்வி: பிரைவேட் பிரவுசிங் என்ற வழி நமக்குத் தேவையா? இதனால், நாம் ஏற்கனவே பார்த்த இணைய தளங்கள் நமக்கு எளிதாகக் கிடைப்பதில்லையே? வேறு ஏதேனும் நன்மை இதில் உள்ளதா?
ஆர். கண்ணகி, மதுரை.
பதில்
: பிரைவேட் பிரவுசிங் எதற்காக என்று புரிந்து கொண்டால், இந்த சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்காது. இணையம் வழியாக, இப்போதெல்லாம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடிகிறது. ட்ரெயின், பஸ் டிக்கட் வாங்குவது, எலக்ட்ரிசிட்டி, டெலிபோன் பில் கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்த தளங்களுக்குச் செல்கையில் பிரவுசர்கள் நீங்கள் எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டு வைத்துக் கொண்டு பின் நாளில் அந்த தளத்தின் முதல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கினாலே தளத்தின் முகவரியைத் தந்துவிடும். முழுமையான முகவரியை டைப் செய்திடாமலேயே நமக்குத் தள முகவரி கிடைக்கும்.
இதில் என்ன ஆபத்து எனில் அந்த கம்ப்யூட்டரைக் கையாளும் மற்றவர்களுக்கும் இந்த பட்டியல் கிடைக்கும். நீங்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டுமா என்ன? எனவே தான் நாம் பிரைவேட் பிரவுசிங் பயன்படுத்துகிறோம். இந்த முறையில், நாம் பார்த்த தளங்களின் பெயர்கள் நம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட மாட்டாது. இதனால், இணைய தள முகவரியின் முதல் சில எழுத்துக்களை டைப் செய்தவுடன், அதன் முழு முகவரியும் நமக்குக் கிடைக்காது. ஆனால், மற்றவர்களுக்கும் அது கிடைக்காது என்பது நமக்குப் பாதுகாப்பு தானே.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி என்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பிரவுசராகப் பயன்படுத்துகிறேன். ஆனால், இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்கையில், பிரவுசரை அப்டேட் செய்திடவும் என்ற செய்தி பாப் அப் ஆகிறது. இது எதனால்? ஏன் இந்த பிரவுசரை அப்டேட் செய்யப்பட்ட பிரவுசராக ஏற்றுக் கொள்வதில்லை?
எஸ்.தில்லைநாயகம், சென்னை
பதில்
: விண்டோஸ் எக்ஸ்பி, 2001ல் வெளியானது. வரும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன், அதற்கான சப்போர்ட் நிறுத்தப்படும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 னை, எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும் வகையில் வெளியிடவில்லை. எனவே தான், மூன்று ஆண்டு பழமையான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 னைப் பயன்படுத்துகிறீர்கள். எனவே தான் இந்த பாப் அப் செய்தி கிடைக்கிறது.
இதற்கு ஒரே தீர்வு, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்துவதுதான். குரோம் மற்றும் பயர்பாக்ஸ் இந்த வகையில் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இரண்டு பிரவுசர்களும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐக் காட்டிலும், அனைத்து வகைகளிலும் சிறந்த இணைய பிரவுசராக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இவை இரண்டுமே, அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு பாதுகாப்பானதாக மாற்றப்பட்டு வரப்படும் பிரவுசர்களாகும். விண்டோஸ் எக்ஸ்பியில் இவை செயல்படும் வகையிலேயே தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.

கேள்வி: கட் (Cut) டெலீட் (Delete) ஆகிய இரண்டு கட்டளைகளும் ஒரே பணியைத் தானே மேற்கொள்கின்றன. இதில் வேறுபாடு உள்ளதா?
சா. சிவகணேசன், விருதுநகர்.
பதில்:
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை டெலீட் என்பது நீக்கப்படுதல்; கட் என்பது, ஒன்றின் இடத்தை மாற்றி அமைத்தல். இவை இரண்டும் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைக் கட்டளைகள். ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள டேட்டா, பைல், போல்டர் ஆகியவற்றின் மீது செயல்படுகையில், இரண்டும் வேறுபாட்டுடன் தான் செயல்படுகின்றன. எடுத்துக் காட்டு ஒன்று தருகிறேன். வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட் ஒன்றை இரண்டாவது பத்தியிலிருந்து நீக்கி, முதல் பத்தியில் அமைக்க வேண்டியுள்ளது. இதனை டெலீட் செய்தால், முதல் பத்தியில் மீண்டும் டைப் செய்திட வேண்டும். கட் செய்தால், முதல் பத்தியில் அமைக்க வேண்டிய இடத்தில் கர்சரை அமைத்து, பேஸ்ட் கட்டளை கொடுத்தால் போதும். இதே போல பைல் ஒன்றை டி ட்ரைவில் இருந்து சி ட்ரைவிற்கு மாற்ற வேண்டும் எனில், டி ட்ரைவில் பைலைத் தேர்ந்தெடுத்து, டெலீட் செய்திடாமல், கட் செய்திட வேண்டும். பின் சி ட்ரைவ் சென்று பேஸ்ட் செய்தால் போதும். பைல் சி ட்ரைவில் அமர்ந்துவிடும்.
இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். கட் கட்டளை கொடுக்கையில், அந்த டெக்ஸ்ட் அல்லது பைல் கிளிப் போர்டில் அமர்ந்து கொள்கிறது. பின்னர், பேஸ்ட் கட்டளை கொடுக்கையில் அங்கு பேஸ்ட் செய்யப்படுகிறது. டெலீட் செய்கையில், அந்த பைல் ரீசைக்கிள் பின்னில் அமர்கிறது. அதனைத் தேர்ந்தெடுத்து ரெஸ்டோர் (“Restore”) கட்டளை கொடுத்தால், பைல் பழைய இடத்திற்குச் செல்கிறது. ரீசைக்கிள் பின்னில் உள்ள அனைத்து பைல்களையும் நீக்கக் கட்டளை கொடுத்தாலோ, அல்லது குறிப்பிட்ட அந்த பைலை நீக்கக் கட்டளை கொடுத்தாலோ, முற்றிலுமாக அந்த பைல் நீக்கப்படும்.

கேள்வி: ஓராண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கிவிட்டது. ஓராண்டு எனக் கணக்கிடாமல், சென்ற சில ஆண்டுகளில், மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் பயன் தந்த 20 கண்டுபிடிப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், எவற்றைப் பட்டியலிடுவீர்கள்?
கே. பிரதிக்ஷா, கோவை.
பதில்:
மிக அருமையான கேள்வி. அறிவியலின் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வைத் தொடர்ந்து வளமும், செழுமையும், வேகமும் உடையதாக மாற்றிக் கொண்டிருப்பதால், அவை என்ன என்ன என்று எண்ணக்கூட நமக்கு நேரம் இல்லை. சற்று நின்று திரும்பிப் பார்க்கச் சொல்லும் இந்தக் கேள்வியை வரவேற்கிறேன். தனிமனிதனுக்கு அதிகப் பயன்தந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தேர்வினை நாம் மேற்கொள்ளலாம். எலக்ட்ரிக் கார் போல பல லட்சம் பேர் பயனடைந்தாலும், தனிப்பட்ட மனிதனுக்கு பயன் தந்தவற்றை இங்கு பார்க்கலாம். அதே போல, அனைவருக்கும் ஒரு சாதனம் கிடைக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும். நான் எண்ணிய வகையில் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறேன்.
1. இன்டர்நெட், இணையத் தேடல்: இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையோடு பிணைந்துவிட்டவை இவை.
2. மின்னஞ்சல்: 30 ஆண்டுகளைக் கடந்த டிஜிட்டல் மாயம். ஆனால், 1990க்குப் பின்னர் தான், அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கத் தொடங்கியது. இந்தியாவில் இன்னும் சற்று தாமதமாகவே வந்தது.
3. மொபைல், ஸ்மார்ட்போன்: இவையும் தாமதமாகவே பொதுமக்கள் சாதனமாகமாறின.
4. டிஜிட்டல் கேமரா: பிலிம் போட்டு புகைப்படம் எடுத்ததனை அடியோடு மாற்றி, யாரும் போட்டோ எடுக்க முடியும் என்பதையும், அதனை உடனடியாக உலக அளவில் பகிர்ந்து கொள்ள முடியும் எனக் கொண்டு வந்த சாதனம்.
5.லேப்டாப் மற்றும் வைபி: 1998க்குப் பின்னர் தான் லேப்டாப் பொதுமக்கள் சாதனமாக மாறியது. தொடர்ந்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாறிய போது, வயர் தொடர்பின்றி, இணையம் பெற, வைபி கிடைக்கப் பெற்று, லேப் டாப் கம்ப்யூட்டரை அனைவரும் முதுகில் எடுத்துச் செல்லும் ஒரு சாதனமாக மாறியது. இன்னும் விளக்கமில்லாமல் பட்டியலிட்டால், ஜி.பி.எஸ்., சோஷியல் தளங்கள், விக்கி பீடியா, யுட்யூப், இசையைக் கேட்டு ரசிக்கும் வழிகளை மாற்றிய ஐபாட், ஐட்யூன், டேப்ளட் பிசிக்கள் ஆகியவை இந்த வரிசையில் இடம் பெறும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.