மணிலா சாகுபடியில் மகத்தான வெற்றி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2013
00:00

ரகங்கள்:


செடி அமைப்பைப் பொருத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கொத்து, அடர்கொத்து, கொடி என உள்ளது. பொதுவாக கொத்து ரகங்கள்தான் விவசாயிகளால் விரும்பப்படுகிறது. இவை 90 நாட்கள் முதல் 105 நாட்கள் வயது வரை உள்ளதாகும். பரவலாக கொடி கொட்டை என்பது திருவண்ணாமலை பகுதியில் மட்டும் சாகுபடியில் உள்ளது. நிலத்திற்கு அதற்கு ஏற்ப பவுடர் போல் நிலத்தில் உழவு அமைய வேண்டும். நிலக்கடலையில் மகசூல் அதிகரிக்க நிலத்தை தங்கம்போல் பராமரிக்க வேண்டும். இயற்கை உரங்கள் அவசியம் தேவை. அனுபவத்தில் நிலக்கடலை விதைப்பிற்கு 30 நாட்களுக்கு முன்னர் நாட்டு கம்பினை ஏக்கருக்கு 10 கிலோ விதைப்பு செய்து இரண்டு அடி உயரம் இருக்கும் போது மடக்கி உழவு செய்து மணிலா சாகுபடி செய்தால் போதும். விவசாயிகள் நிச்சயம் 70 மூடைகள் மகசூல் எடுத்துள்ளனர். கம்பில் வேர் முண்டுகள் அதிகம் இருப்பதால் மணிச்சத்து இயற்கை சத்து பூமிக்கு கிடைப்பதால் நிலக்கடலை மகசூல் கூடுகின்றது. இது நுகர்வோருக்கு பச்சைக்கொட்டை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக பயிர் செய்யப்படுகிறது. எண்ணெய்ச்சத்து குறைவாக இருக்கும். டி.எம்.வி.2, டி.எம்.வி.12 அதிகமாக புழக்கத்தில் உள்ளது. ஜே.எல்.24 குறைவான பரப்பளவு மட்டும் சாகுபடியில் உள்ளது.

பட்டம்:


சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், கார்த்திகைப்பட்டம் என்று உள்ளது. இதில் பரவலாக மார்கழிப் பட்டம்தான் அதிக அளவில் சாகுபடியில் உள்ளது.
மார்கழிப்பட்டத்தில் விதைப்பிற்கு ஒரு ஏக்கருக்கு 55 கிலோ விதை பருப்பு தேவை. விதைக்கு விதைநேர்த்தி, கார்பன்டாசிம் இரண்டு கிராம் ஒரு கிலோவிற்கு என்ற அளவில் இரண்டு நாட்களுக்கு முன்னால் கலந்து வைத்து விதைப்பு செய்வதால் பூச்சிநோய் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

பயிர் எண்ணிக்கை:


ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் அவசியம் இருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1,32,000 செடிகள் அவசியம் இருக்க வேண்டும். மகசூல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணியாகும். மணிலாவில் ஒரு பூவிற்கு ஐந்து காய்கள் கணக்காகும். 22 முதல் 30 நாள் வரை பூ எடுக்கும். பூ எடுக்கும்போது அதிகம் ஈரப்பதம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். நவீன முறையில் டிஏபி + பிளானோபிக்ஸ் தெளிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நிலக்கடலை பூஸ்டர் சப்ளை செய்கின்றனர்.

உரம்:


7.14.21 என்பிகே அளிப்பது சிறந்தது. இதைத்தவிர பேரூட்ட சத்துக்களும் அவசியம் அளிக்க வேண்டும். அப்போதுதான் காய்கள் திரட்சியாக இருக்கும். ஜிப்சம் இரண்டு முறை அவசியம் அளிக்க வேண்டும். அடியுரம் போடும்போது 100 கிலோவும் இரண்டாவது களை எடுக்கும்போதும் அவசியம் ஜிப்சம் போடவேண்டும். ஜிப்சம் சிறிது செலவுதான் ஆனால் கீர்த்தி பெரிதாகும்.

பயிர் பாதுகாப்பு:


நிலக்கடலையில் சுருள் பூச்சி மற்றும் புரூடினியாதான் அதிகம் தாக்குகின்றது. சுருள் பூச்சியை குறைப்பதற்கு விதை விதைப்பின்போதே எட்டு வரிசைக்கு ஓர் வரிசை கம்பு விதைப்பு செய்து வைத்திருந்தால் பூச்சி குறையும். புரூடினியாவை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு சாகுபடி செய்வது சிறந்தது. மேலும் பூச்சி நிர்வாகம் வேளாண் துறை வல்லுனர்கள் பரிந்துரைப்படி செய்வது சிறந்தது. தற்போது நிலக்கடலை டிராக்டர் கொண்டு விதைப்பு செய்யப்படுகிறது. விலை ஆறு மாதமாக ரூ.6,000 (75 கிலோ மூடை) விலை போகின்றது. விவசாயிகள் இந்த விலையால் மகிழ்ச்சியாக அதிகப் பரப்பளவு சாகுபடியை துவக்கி உள்ளனர்.
விதை, உழவு, களை, பூச்சி, உரம் என மொத்த செலவு ரூ.35,000 பிடிக்கின்றது. நிச்சயம் 800 கிலோ மகசூல் என்றாலும் ரூ.64,000 நிகர லாபம் கிடைக்கின்றது. மகிழ்ச்சியான வேளாண்மை, அதிகம் வேலை ஆட்கள் தேவையில்லாத வேளாண்மை. மேலும் விபரங்களுக்கு உடனடியாக வேளாண் வல்லுனர் ஆர்.பாண்டியனை அணுகவும்.

முகவரி:


131-132, செஞ்சி ரோடு, திண்டிவனம்-604 001.
போன்: 94432 43075.
-எஸ்.எஸ்.நாகராஜன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.