நன்றி கெட்டவன்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
00:00

ஒரு ஊரில் வயது முதிர்ந்த செம்படவன் ஒருவன் இருந்தான். அவன் நாள் முழுவதும் வலை வீசி விட்டுக் காத்திருந்தாலும் நான்கைந்து மீன்கள்தான் கிடைக்கும். அவற்றை விற்று, அதனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், அவனும் அவனுடைய மனைவியும் கஷ்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். பெரும் பாலான நாட்களில், அவர்கள் இரவில் சாப்பிடாமலேயே படுத்துக் கொண்டனர்.
ஒருநாள் செம்படவன், ஆற்றங்கரையில் வழக்கமாக மீன் பிடிக்கும் இடத்தில், ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். அப்-போது படபடவென்று சத்தம் கேட்டது. செம்படவன் சட்டென்று திரும்பினான்.
வானத்தில் பறந்து கொண்டிருந்த அழகான ஒரு பறவை, பளபளப்பான சிறகுகளை அடித்துக் கொண்டு, கீழே பறந்து வந்து ஒரு மரத்தின் தாழ்ந்த கிளைகளில் அமர்ந்தது. அது சாதாரணப் பறவையல்ல... என்பதை அவன் கண்டு கொண்டான்.
மந்திர சக்தி படைத்த ஒரு பறவையைப் பற்றி மக்கள் அடிக்கடி பேசிக் கொள்வது அவனுக்குத் தெரியும். துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு அது உதவி செய்யுமென்று அவர்கள் சொல்லியிருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் சொன்ன அங்க அடையாளங்களை வைத்துப் பார்த்தால், இது அந்த மந்திரப் பறவைதான் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.
அது சற்று நேரத்தில் பறந்து போய் விடவுமில்லை; அவனிடத்தில் பேசவுமில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. வலையில் மீன்கள் சிக்கியிருக்கலாமென்று நினைத்த செம்படவன் வலையை இழுத்தான். ஒரேயொரு சின்ன மீன் மட்டுமிருந்தது. அதை அவன் தன்னுடைய வாளியில் போட்டுக் கொண்டான்.
மரத்தின் கிளையிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரப் பறவை, ""இந்தச் சின்ன மீனை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள் தாத்தா?'' என்று கேட்டது.
""இதைக் கடைத் தெருவுக்குக் கொண்டு போய் விற்பேன். அதில், கிடைக்கும் பணத்திலிருந்து ஒரு ரொட்டி வாங்கி, நானும், என் மனைவியும் சாப்பிடுவோம்!'' என்றான் செம்படவன்.
அதைக் கேட்ட பறவையின் நெஞ்சம் உருகியது.
""தாத்தா! உங்களுடைய கஷ்ட காலம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இன்று முதல் <உங்களுக்கு நான் ஒரு பெரிய பை நிறைய மீன்களைக் கொண்டு வந்து கொடுப்பேன். அதை நல்ல விலைக்கு விற்று, நீங்களும், உங்கள் மனைவியும் வயிறாரச் சாப்பிடுங்கள். நீங்கள் இப்படிக் கடுமையாக உழைக்கவும் தேவையில்லை!'' என்றது.
முதியவனுக்கு உணர்ச்சிப் பெருக்கினால் பேச முடியவில்லை. அவன் இதயம் தழுதழுத்தது.
"நன்றி!' என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னான்.
மீண்டும் படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு, மந்திரப் பறவை பறந்து சென்றது.
அன்றிரவு செம்படவனும், அவனுடைய மனைவியும் மந்திரப் பறவையின் வரவுக்காக ஆவலோடு காத்திருந்தனர். நள்ளிரவாகியபோது ஒரு பெரிய பையைச் சுமந்து கொண்டு வந்தது. அந்தப் பையைச் செம்படவனுடைய முற்றத்தில் போட்டு விட்டுத் திரும்பிப் பாராமல் சென்றது.
செம்படவனும், மனைவியும் முற்றத்திற்கு ஓடினர். பையை எடுத்துப் பிரித்தனர். உள்ளே ஏராளமான மீன்கள் இருந்தன.
காலையில் செம்படவன் அந்த மீன்களை நல்ல விலைக்கு விற்று விட்டு, வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வந்தான். கணவனும், மனைவியும் சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டபோது, மந்திரப் பறவையை மனமார வாழ்த்தினர்.
அடுத்த நாளும், மந்திரப் பறவை ஒரு பை நிறைய மீன்களைக் கொண்டு வந்தது. அடுத்த நாளும்... அடுத்த நாளும்... மந்திரப் பறவையின் இந்த உதவி பல மாதங்களாக செம்படவனுக்குக் கிடைத்தது. மீன் விற்று விற்று, அவனும்,மனைவியும் வசதியாக வாழ்க்கை நடத்தியதோடு, ஏராளமான பணத்தையும் அவன் சேர்த்து விட்டான். ஆகவே, பழைய குடிசையை விட்டு விட்டு ஒரு பெரிய வீட்டை வாங்கி, அதில் குடியேறினான். வீட்டுக்குப் பின்புறம் ஒரு தோட்டமும் போட்டான்.
பறவை இன்னும் நள்ளிரவில் மீன் பையுடன் வந்து கொண்டிருந்தது.
ஒருநாள் செம்படவன் மீன்களை விற்றுக் கொண்டிருந்தபோது, அந்நாட்டு அரசனுடைய பறையறிவிப்பவன், கடைத் தெருவில் நின்றபடி, ""நம்முடைய அரசர் ஒரு மந்திரப் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைப் பார்க்க மிக்க ஆவலாக இருக்கிறார். அந்த மந்திரப் பறவையைப் பிடித்துக் கொண்டு வந்து அரசரிடம் கொடுப்பவருக்கு, ராஜ்ஜியத்தில் பாதி வெகுமதியாக வழங்கப்படும்!'' என்று அறிவித்தான்.
இந்த அறிவிப்பைக் கேட்ட செம்படவனின் உள்ளத்தில் சலனமும், சபலமும் ஏற்பட்டது. அவனுக்கு மந்திரப் பறவையை நன்றாகத் தெரியும். அதை அரசரிடம் பிடித்துக் கொடுத்தால், அவனுக்கு பாதிராஜ்ஜியம் கிடைக்கும். அந்த நாட்டுக்கும் அவன் அரசனாவான்.
ஆனால், இத்தனை காலம் அவனுக்கு உதவிய, இன்றைக்கும் உதவி செய்து கொண்டிருக்கிற மந்திரப் பறவைக்குத் துரோகம் செய்வதா? அதைக் காட்டிக் கொடுப்பதா? அதை விட இழிவு, பாவம் வேறென்ன இருக்கிறது?
ஆனால், ஆசை அரசனாக வேண்டுமென்ற பேராசை அவனைத் துரோகத்திற்குத் தூண்டியது. இந்த நல்ல வாய்ப்பை அவன் நழுவவிட்டால், ஒரு செம்படவனால் அரசனாக முடியுமா? அது ஜென்மத்துக்கும் முடியாது. இறுதியில் அவனுடைய கெட்ட குணமே அவனை வென்றது.
பறையறிவிப்பவனிடம், ""மந்திரப் பறவையைப் பிடிப்பதற்கு அரசருக்கு நான் துணை செய்கிறேன்,'' என்றான்.
பறையறிவிப்பவன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
-1 தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.