நாம் பிற நாட்டு அதிசயங்களை வியந்து பார்த்து போற்றுகிறோம். ஆனால், நம் நாட்டிலேயே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள் நிறைய உள்ளன. அப்படி உங்களில் பலர் அறிந்திராத ஒரு அதிசயத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்!
நம் நாட்டில் அகமதாபாத் நகரிலுள்ள அதிசய ஆடும் கோபுரங்கள்தான் அவை. அது என்ன ஆடும் கோபுரங்கள்? என்று யோசிக்கிறீர்களா பட்டூஸ்!
15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "சித்திபஷீர்' மசூதியின் இரண்டு கோபுரங்கள்தான் அவை. இந்த இரண்டு கோபுரங்களையும் ஒரு சமதளமான மாடி இணைக்கிறது.
ஒவ்வொரு கோபுரமும் 20 மீட்டர் உயரமும், மூன்று அடுக்குகளும் கொண்டவை. இந்த அடுக்குகளில் கல்லால் செதுக்கப்பட்ட வேலைபாடுகள் அமைந்த பால்கனிகள் உண்டு. இதில், ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்த இரண்டு கோபுரங்களில், ஒரு கோபுரத்தின் உச்சி பகுதியைக் குலுக்கினால் அந்த அதிர்வு, அந்த கோபுரத்தின் வெற்று வழியே சென்று, மற்றொரு கோபுரத்தை அடைந்து, அதையும் ஆட வைக்கிறது.
இதை பார்க்க வரும் பார்வையாளர்கள் படிகள் வழியே கோபுரத்தின் உச்சியை அடைந்து ஒரு கோபுரத்தை ஆட்டி, மற்றொன்று ஆடுவதை கண்டு வியப்படைகின்றனர். இந்த ஆட்டம் நானூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.