அம்மா வந்திருக்கேன்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
00:00

""அம்மா! கொடிய ஓநாய் ஒன்று வந்தது. அண்ணன்கள் ஆறு பேரையும் அது விழுங்கி விட்டது. இங்கே ஒளிந்த நான் மட்டும் எப்படியோ தப்பித்தேன்,'' என்று அழுது கொண்டே சொன்னது.
இதைக் கேட்டுக் கோபத்தால் துடித்த தாய் ஆடு, ""எங்கே இருந்தாலும் அந்த ஓநாயைக் கண்டுபிடிப்பேன். பழிக்குப் பழி வாங்குவேன்,'' என்று வெளியே ஓடியது.
கடிகாரத்திற்குள் இருந்த குட்டி ஆடும் கீழே குதித்து அதைப் பின்தொடர்ந்தது.
அங்கே ஒரு மரத்தின் நிழலில் ஓநாய் படுத்திருந்தது. அதன் அருகே சென்றது தாய் ஆடு.
ஓநாயோ நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது. ஆட்டுக் குட்டிகளை விழுங்கிய அதன் வயிறு பெரிதாக இருந்தது.
அந்த வயிற்றுக்குள் ஏதோ அசைவதைப் பார்த்தது தாய் ஆடு. பரபரப்புடன் அது தன் வீட்டிற்கு ஓடி வந்தது. ரம்பத்தையும், ஊசி நூலையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டது.
ஓநாய் இருந்த இடத்திற்கு வந்த ஆடு ஓநாயை பார்த்தது. ஓநாயோ பயங்கரமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது.
ரம்பத்தால் ஓநாயின் வயிற்றைச் சிறிது அறுத்தது. உள்ளே ஆட்டுக் குட்டியின் தலை அசைவது தெரிந்தது.
ஓநாயின் வயிற்றை மேலும், அறுத்தது ஆடு. உயிருடன் இருந்த அந்த ஆட்டுக் குட்டி வெளியே குதித்தது. மகிழ்ச்சி அடைந்த ஆடு அந்த ஓநாயின் வயிற்றை மேலும் அறுத்தது. ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து ஆட்டுக் குட்டிகளும் வெளியே குதித்தன.
"இந்த ஓநாய் என் குழந்தைகளை அப்படியே விழுங்கி உள்ளது. அதனால்தான் எல்லாரும் உயிருடன் இருந்திருக்-கின்-ற-னர். எப்படியோ என் குழந்தைகள் பிழைத்தன' என்று மகிழ்ந்தது ஆடு.
ஆறு குட்டி ஆடுகளும் தாயை மகிழ்ச்சியுடன் சூழ்ந்து கொண்டன.
""குழந்தைகளே! ஓநாய் விழித்துக் கொண்டால் நமக்கு ஆபத்து. நீங்கள் தப்பித்தது அதற்குத் தெரியக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் எடையளவு கற்களைக் கொண்டு வாருங்கள்,'' என்றது ஆடு.
""அப்படியே செய்கிறோம்,'' என்ற ஆட்டுக் குட்டிகள் அருகில் கிடந்த பெரிய பெரிய கற்களை தூக்கி வந்தன.
அந்தக் கற்களை ஒவ்வொன்றாக வாங்கியது தாய் ஆடு. அவற்றை ஓநாயின் வயிற்றுக்குள் வைத்தது.
தான் வைத்திருந்த ஊசி நூலால் ஓநாயின் வயிற்றைத் தைத்து முடித்தது.
நடந்தது எதையும் ஓநாய் அறியவில்லை. குறட்டை விட்டபடியே தூங்கிக் கொண்டிருந்தது.
""குழந்தைகளே! நீங்கள் தப்பித்தது, ஓநாய்க்குத் தெரியாது. நாம் அனைவரும் அந்தப் புதரில் ஒளிந்து கொள்வோம். ஓநாய் என்ன செய்கிறது என்று பார்ப்போம்,'' என்றது தாய் ஆடு.
அருகிலிருந்த புதரில் ஆடும், குட்டிகளும் ஒளிந்து கொண்டன.
நீண்ட நேரத்திற்குப் பின் ஓநாய் கண் விழித்தது. அசைந்து, அசைந்து மெல்ல எழுந்தது.
அதற்குத் தாகம் ஏற்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அருகிலிருந்த ஏரியை நோக்கி மெல்ல நடந்தது.
அதன் வயிற்றிலிருந்த கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி, ணங் ணங்கென்று பெரிதாக ஓசை கேட்டது.
""ஏ! ஆட்டுக் குட்டிகளே! ஏன் பாறைகள் மோதுவது போல மோதுகிறீர்கள்? என் வயிறு வலிக்கிறது. மெதுவாக மோதுங்கள்,'' என்றபடி நடந்தது.
ஏரிக் கரையை அடைந்த அது, தண்ணீர் குடிப்பதற்காகக் குனிந்தது.
அதன் வயிற்றிலிருந்த கற்கள் எல்லாம் முன்னால் புரண்டு வந்தன. இதனால் நிலையாக நிற்க முடியாமல் முன்னால் சாய்ந்தது ஓநாய். சமாளித்து நிற்க முயன்றது. அதனால் முடியவில்லை.
அப்படியே தலை கீழாக ஏரி நீருக்குள் விழுந்தது.
நீச்சல் அடிக்க முயற்சி செய்தது. அதன் வயிற்றுக்குள் இருந்த கற்கள் அதைத் தண்ணீருக்குள் இழுத்தன. உயிருக்குப் போராடியது.
கற்களின் எடை மிகுதியாக இருந்ததால், அது தண்ணீருக்குள் மூழ்கியது. மூச்சுத் திணறி இறந்தது. இதைத் தாய் ஆடும், குட்டி ஆடுகளும் பார்த்தன.
""கொடிய ஓநாய் இறந்து விட்டது. இனி நமக்கு எந்த ஆபத்தும் இல்லை,'' என்றது தாய் ஆடு. இதைக் கேட்ட குட்டி ஆடுகள் மகிழ்ச்சியால் ஆடிப் பாடின.
- முற்றும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.