அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

வீட்டிலேயே இருக்கு வைத்தியம்!

உடல் உஷ்ணம் அடைந்தால்: உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது. வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும்.
பெண்கள் செவ்வாய் (ம) வெள்ளியும், ஆண்கள் புதன் (ம) சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வரவும். எண்ணெய் தேய்த்துக் குளித்தபின், இஞ்சி கஷாயம் (அ) சீரககஷாயம் (அ) சுக்குப் பொடியை வெல்லமோ, நெய்யோ கலந்து சாப்பிடவும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் இதை கடைப்பிடித்தல் மிகவும் முக்கியம். இம்முறையினால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு வெளியேறி, நல்ல ஆரோக்கியம் இயற்கையாக கிடைக்கும்.
ரத்தத்தை சுத்தம் செய்ய: ரத்தம் சுத்தம் செய்வதற்குக் குங்குமப்பூ 5, கொஞ்-சம் குல்கந்தை எடுத்து பொடித்து தேனுடன் கலந்து சாப்பிடவும். இது நல்ல சக்தியைக் கொடுக்கும்.
இதயம் வலுவடைய: தினமும் இரவில் பாலுடன் சிறிதளவு கடுக்காய் பொடியைக் கலந்து குடிக்கவும். இது எல்லாவிதமான இதய நோயையும் தடுத்து நிறுத்தும். மாரடைப்பும் வராமல் தடுக்கும். இதயம் வலுவடையும்.
நல்ல தூக்கம் வேண்டுமா?: காய்ச்சிய பாலுடன் சிறிது கசகசாப் பொடியைக் கலந்து தூங்கச் செல்வதற்கு முன் குடிக்கவும். இது நல்ல தூக்கத்தையும், சுகாதாரமான உடல்நலத்தையும் கொடுக்கும். கசகசா பாயசமும் செய்து சாப்பிடலாம்.
ஆஸ்துமாவை கட்டுப்படுத்த: சிவப்புக் கரும்பின் சாறு 10 அவுன்சுடன் 1 அவுன்சு தேனை கலந்து ஆஸ்துமா ஆரம்பித்தவுடனேயே குடிக்கவும். ஒரு வாரத்திற்குத் தினமும் இரண்டு முறை குடித்து வரவும். சுத்தம் செய்த தூதுவளைக் கீரையின் பூக்களை எடுத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து, படுக்கப்போவதற்கு முன் குடிக்கவும்.

ஏஆர்பி என்னும் மாவு!

தானியங்களை முளை கட்டிப் பயன்படுத்துவது நமது முன்னோர்கள் தொன்று தொட்டு செய்து வரும் ஒரு முறைதான் என்றாலும், இதில் அறிவியல் ரீதியான பயனும் உள்ளது. சிறு குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்த பிறகுதான் திட உணவுகள் ஆரம்பிக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுரை. ஏன் அப்படி?
6 மாதத்திலிருந்துதான் வாயில் அமைலேஸ், டயாலின் போன்ற என்ஸைம்கள் நிறைய சுரக்க ஆரம்பிக்கின்றன. அப்போது தான் செரிமானம் ஆகும். முளை கட்டும்போது தானியங்களில் அமைலேஸ் அதிகம் உருவாகிறது. அவற்றை உணவில் பயன்படுத்துவது அதிக நன்மையைத் தரும்.

பயனுள்ள டிப்ஸ்!


* பித்தான்கள் வெகு நாட்கள் உதிர்ந்து போகாமல் இருக்கப்போதுமான நூலை மெழுகுவர்த்தியின் மீது தேய்த்து, அந்த நூலைக் கொண்டு பித்தான்களை தைக்க வேண்டும்.
* துணி தைக்கும் ஊசியை ஒரு சிறு கம்பளித்துண்டில் குத்தி வைத்தால் அது துருப்பிடிக்காமல் இருக்கும்.
* தபால் கவர்களின் மீது விலாசம் எழுதிய பின் அதன் மீது கொஞ்சம் மெழுகை தேய்த்து விட்டால், தண்ணீர் பட்டாலும் விலாசம் கிழிந்து போகாமல் இருக்கும்.
* பாத்திரங்கள் அலம்பும் நீரில் அவ்வப்போது வினிகரைக் கலந்து கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும், கைகளும் மென்மையாக இருக்கும்.
* அரிவாள் மனை, தேங்காய்த் துருவி, காய்கறி நறுக்க பயன்படும் கத்தி போன்றவைகளில் உள்ள துருவைப் போக்க அவற்றின் மீது ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் துரு போய்விடும்.
* வெந்நீரில் உப்பை கரைத்து மரச்சாமான்கள் மீது படிந்துள்ள கறை மீது தேய்த்தால் கறை அகன்று விடும்.

கலாம் காலம்!

ஜனாதிபதி ஆனபிறகுதான் இந்தி கற்று கொண்டார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா ஓரளவுக்கு புரியும். இசை ஆர்வலரான அப்துல் கலாம் நன்றாக வீணை வாசிப்பார். எப்போதும் அவரது அறையில் வீணை ஒன்று இருக்கும்!

தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும்!


நம்பிக்கைகள் முழுமையாக இருக்க வேண்டும். அரைகுறை நம்பிக்கைகள் ஆபத்தானவை. கடவுள் நம்பிக்கை கூட பலருக்கு அரைகுறைதான். உங்களைச் சுற்றி ஊழிக்கால இருள் படர்ந்திருந்தாலும் பரவாயில்லை. உங்கள் உள்ளத்தில் மட்டும் நம்பிக்கையின் சிறு ஒளி கீற்றாக இருந்தால் போதும். நீங்கள் என்றாவது ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீருவீர்கள். சக்தி நிலையில் தன்னம்பிக்கையும், முக்தி நிலையில் கடவுள் நம்பிக்கையும் கை கொடுக்கும் என்கிற சின்ன சூட்சமத்தைப் புரிந்து கொண்டால் குழப்பம் இல்லை.
இறைவனை வேண்டும் போது பிரச்னைகள் வராமல் காப்பாற்று என்று வேண்டாதீர்கள். பிரச்னைகளைளச் சந்திக்கும் பலத்தையும் ஜெயிக்கும் அறிவையும் அடையாளம் காட்டும்படி வேண்டுங்கள்.

கொசுவுக்கு வெங்காயம்!


கொசுத்தொல்லை அதிகமிருந்தால், ஒரு பெரிய வெங்காயத்தை நாலாக வெட்டி, கையால் லேசாக நசுக்கி அறையில் ஆங்காங்கே வையுங்கள். சின்ன வெங்காயம் நாலைந்து நசுக்கியும் வைக்கலாம். வெங்காய வாடையைத் தாங்குவதில் ஆட்சேபனை இல்லையென்றால் சாறு பிழிந்தும் தெளிக்கலாம். கொசுக்கள் வருவது குறைந்துவிடும்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!


இது "கிரவுண்ட்நட் கட்லி' செய்முறை நேரம்.
தேவையானவை: வேர்க்கடலை, சர்க்கரை தலா-ஒரு கப், தண்ணீர்-ஒரு கரண்டி, ஏலக்காய்த்தூள்- ஒரு டீஸ்பூன், நெய்-2 டீஸ்பூன் (தேவைப்பட்டால் சில துளி எஸன்ஸ் சேர்க்கலாம்.)
செய்முறை: வேர்க்கடலையை வறுத்து தோலை எடுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கம்பிப்பதத்தில் பாகு காய்ச்சவும். வேர்க்கடலைப் பொடியை சிறிது சிறிதாகப் பாகில் சேர்த்துக் கிளறிக் கொண்டே வரவும். சிறிது நுரைத்து கொப்பளித்து வரும்போது ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கவும். ( விருப்பப் பட்டால் எஸன்ஸ் சேர்க்கலாம்) ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய கலவையைக் கொட்டி சமப்படுத்தவும். சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும். பிறகு, கத்தியில் டைமன் அல்லது சதுர துண்டுகள் போடவும். இதே பேல முந்திரி, பாதாம் பருப்பிலும் செய்யலாம்.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.