Advertisement
லூலூவா!
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
00:00

குங்ராஞ்சி என்ற கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு வாழ்ந்த கிராமவாசிகளில், லூலூவா என்றொரு பெண்ணிருந்தாள். அவள் மிகுந்த அழகுள்ளவள். ஒருநாள் லூலூவாவும், அவள் அம்மாவும் வயலுக்குச் சென்றனர். வயலில் அம்மா மிளகாய் செடி வளர்க்க விரும்பினார். எனவே, அதன் நாற்றுகளை நட்டு வைத்தார். லூலூவா வெள்ளரி விதைகளை விதைத்தாள். பிறகு அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். ஒரு மாதத்துக்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் வயலுக்கு வந்தனர். மிளகாய்ச் செடிகள் நன்றாய் வளரவில்லை. ஆனால், வெள்ளரி கொடி வீசி வளர்ந்து படர்ந்திருந்தது; பூவும் பிஞ்சும் வந்திருந்தது. அதைப் பார்த்து மகள் மகிழ்ந்தாள்.
சில நாட்களுக்குப் பிறகு மகள் மட்டும் வயலுக்கு வந்தாள். வெள்ளரிக் கொடிகள் செழித்து வளர்ந்திருந்தன. அதன் காய்கள் பச்சை நிறத்தில் இருந்தன. சில காய்கள் மஞ்சள் நிறத்திலும் இருந்தன.
அவள் வெள்ளரிக்காய் பறிக்க விரும்பினாள். அவள் வயலில் இறங்கியபோது, ""நீ வெள்ளரிக் காயைப் பறிக்க விரும்பினால், மஞ்சள் வண்ணக்காயைப் பறி. பச்சை நிறக் காயை பறிக்காதே,'' என்று குரல் கேட்டது.
அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே ஓர் ஆமை நின்று கொண்டிருந்தது. ஆமை பேசுவதைக் கேட்டு அவள் வியப்படைந்தாள். அது விலங்குகளைப் போல் இல்லாமல், மனிதர்கள் மொழியில் பேசியதால் மிகவும் ஆச்சரியப்பட்டாள்.
""ஆமையே, மஞ்சள் வெள்ளரியை மட்டும் பறிக்கச் சொல்லுகிறாயே... ஏன்?'' என்று அவள் கேட்டாள்.
""பெண்ணே, என்னிடம் வேறு எதுவும் கேட்காதே... ஆனால், என்னை நம்பு. நான் சொல்வதைச் செய். வீட்டுக்குச் சென்றதும் அந்த வெள்ளரிக்காயை வெட்டிப் பார்,'' என்றது ஆமை.
அவள் மஞ்சள் நிறக்காயை மட்டும் பறித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள். கத்தியால் காயை வெட்டினாள்; அது கடினமாய் இருந்தது; பிற வெள்ளரியைப் போல் மென்மையாய் இல்லை. அவள் அதைக் கையில் எடுத்து கவனித்துப் பார்த்தாள்; அது வெள்ளரிக்காய் அல்ல. காய் வடிவத்தில் இருந்த தங்கக் கட்டி! அவள் வியப்பு பன்மடங்கு பெருகியது.
மறுநாள் காலையில் அவள் மீண்டும் வயலுக்கு சென்றாள். அவளிடம் பேசிய ஆமையைத் தேடிப் பார்த்தாள். ஆனால், ஆமை அங்கு இல்லை.
வயலின் மூலையில் ஒரு வீடு இருந்தது. அவள் அந்த வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டின் வெளிப்புறம் ஆமை ஓடு கிடந்தது. அவள் அதைத் தொட்டுப் பார்த்தாள். அது உயிரில்லாத வெறும் ஓடு. அவள் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தாள். அங்கும் ஆமை ஓடு இல்லை. ஆனால், அழகிய ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான். அந்த ஆமை ஓர் இளைஞனாய் மாறி இருந்தது.
அந்தக் கிராமத்தில் ஓர் மன்னர் இருந்தார். அவர் இறந்த பின்னர் மறுபிறவியில் ஆமையாய் பிறந்திருந்தார். அந்த ஆமை தான் மீண்டும் அழகிய இளைஞனாய் உருவெடுத்திருந்தது.
""என்னை உனக்கு நினைவிருக்கிறதா? நீ முன் பிறப்பில் என்னை மிகவும் நேசித்தாய். நானும் உன்னை மணந்து கொள்ள விரும்பினேன். ஆனால், நான் போர்க்களத்தில் இறந்ததால், உன்னை மணக்கும் எண்ணம் அப்பிறப்பில் நிறைவேறவில்லை. நேற்று நான் சொல்லியபடி நீ நடந்ததால், நான் இன்று மனிதனாக மாறி விட்டேன்; உன்னை என் மனைவியாக்கிக் கொள்ள விரும்புகிறேன். உனக்கு சம்மதமா?'' இளவரசன் கேட்டான்.
லூலூவா சிந்தித்தாள்; பலமுறை சிந்தித்தாள். அதன் பின்னர் அவள் தனது சம்மதத்தை தெரிவித்தாள். ஆமை இளவரசன் மகிழ்ந்தான்.
அவள் ஆமை அரசனை மணக்க இருப்பதை அறிந்த அந்த நாட்டு இளவரசன் ஆமை இளவரசனிடம் சண்டைக்கு வந்தான். காரணம், அழகி லூலூவாவை அவன் திருமணம் செய்ய நினைத்திருந்தான்.
இருவருக்கும் சண்டை வந்தது. அந்தப் போரில் அந்நாட்டு இளவரசன் தோற்றான். வெற்றி பெற்ற ஆமை இளவரசன், லூலூவாவை திருமணம் செய்தான். அவர்கள் இருவரும் அந்தக் கிராமத்தை ஆட்சி செய்தனர். நாட்டில் வளம் பெருகியது. காலப் போக்கில் மக்களும் மனம் மாறினர்; அரசன் அரசியுடன் சேர்ந்து நாட்டை மிகவும் வளமான நாடாக்கினர்.
***

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.