புகழ்ப்பெற்ற குரு ஒருவர், சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது அவர், ""உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் கேட்கலாம்,'' என்றார்.
மூத்த சீடர்களில் ஒருவன் குருவிடம், ""குருவே ஞானத்தில் உயர்ந்தவர்களை ஞானப்பழம் என்கிறோம். அதே சமயம் பழங்களில் ஞானப்பழம் உண்டா?'' என்று கேட்டான்.
""உண்டு!'' என்றார் குரு.
""அது எந்தபழம்? அது எப்படி ஞானப் பழமாகிறது?'' என்று சீடன் கேட்டான்.
""அந்தப் பழம் பலாப்பழம்!'' என்றார் குரு.
""அந்த பழம் எப்படி ஞானப்பழம் ஆக முடியும்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை தெளிவாக கூறுங்கள்,'' என்றான் சீடன்.
""பலாப்பழத்தின் வெளித் தோற்றத்தைப் பார்த்தால், முள், முள்ளாக கையில் தொடவே கரடுமுரடாக இருக்கும். இது கரடுமுரடான மனித வாழ்க்கையைக் குறிக்கிறது. அதன் தோலைக் கிழித்து உள்ளே போனால், சடைசடையாகப் பின்னிப் பிணைந்து நார்கள் இருக்கும். இது... கரடு முரடான வாழ்க்கையைத் தாண்டி உள்ளே போனாலும் குடும்பத்திலும் மேலும், சிக்கல்கள் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
""நார்களைப் பிரித்து உள்ளே போனால், உருண்டு திரண்ட சதைப்பற்றுள்ள இனிப்பான சுளைகள் இருக்கும். இது... குடும்பச் சிக்கல்களை நிதானமாக அவிழ்த்துவிட்டு உள்ளே போனால் மட்டுமே, சுகமான வாழ்க்கையை அடைய முடியும் என்பதைக் குறிக்கிறது.
அந்த இனிப்பான சுளைகளுக்குள் மெல்லிய தோல் மூடிய கடினமான கொட்டைகள் இருக்கும். இவை... வாழ்க்கை இனிமையாக இருந்தாலும் அதில் மீண்டும் கரடுமுரடான வாழ்க்கை அமைவதற்கு சாத்தியக்கூறு இருக்கிறது. ஆகவே, வாழ்க்கையில் இனிமை கிடைத்துவிட்டது. இதற்குமேல் கஷ்டம் ஒன்றும் அதில் வராது என்று முடிவு செய்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருங்கள், என்ற பக்குவத்தை உணர்த்துகிறது. ஆகவே, பழங்களில் மனித வாழ்க்கையோடு ஒன்றியது பலாப்பழம் மட்டுமே. அதனால்தான் அதை ஞானப்பழம் என்கிறோம்,'' என்றார் குரு.
குருவின் ஞான விளக்கத்தைக் கேட்ட சீடர்களுக்கு தெளிவு பிறந்தது.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.