Advertisement
ஜோசியம் பலித்தது ஆனால்...!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
00:00

ராஜபுதனத்து மன்னர் பீமர், அவரது ராணி ஒரே பிரசவத்தில், ஆறு குழந்தைகளைப் பெற்றாள். இயற்கைக்கு மாறான இந்நிகழ்ச்சி, மன்னரைக் கவலைக்குள்ளாக்கியது. குழந்தைகள் பிறந்த வேளையில், வானத்தில் வால்நட்சத்திரம் வேறு தோன்றியது. இந்நிகழ்ச்சிகளை அபசகுணமாகக் கருதினார் மன்னர். நாட்டுக்குத் தீங்கு நேரப்போகிறதென்றே முடிவுக்கு வந்தார். குழந்தைகளை கொலை செய்ய நினைத்தார். இதை அறிந்த அரண்மனை ஜோதிடர் ஓடோடி வந்தார்.
"குழந்தைகளைக் கொல்ல வேண்டாம். அவர்கள் ஜாதகப்படி ஆறு குழந்தைகளுக்கும் முடிசூட்டிக் கொள்ளும் பாக்கியம் உள்ளது' என்றார். மன்னர் பீமரும் தன்முடிவை, மாற்றிக் கொண்டார். குழந்தைகளை வளர்த்து வந்தார்.
ஜோதிடர் கூறியது, பின்னாட்களில் பலித்தது. 1525ல் மன்னர் பீமர் காலமானதும், முறைப்படி அவரது மகன்கள் கிர்ஸியா, சான்ரா, மொகர், சுந்திரா, சேத்ரா, யோப் அரியணை ஏறினர். ஆனால், ஒவ்வொருவரின் முடிவும் அவர்கள் கையாலேயே, ஏற்பட்டது. கடைசி மகன் யோப் சிங்காசனம் ஏறி முடிசூடிக் கொண்டதும், 1528-இல் தற்கொலை செய்து கொண்டு மாண்டான். காரணம், இந்தியக் கண்டத்தை வெற்றிக் கண்ட மொகலாய வம்சத்தை ஸ்தாபித்த சாஹிருத்தீன் முகம்மதுவிடம், தோல்வி கண்ட அவமானம் தாங்காமல்தான்.
இந்த சாஹிருத்தீன் முகம்மது யார் தெரியுமா? அவர்தான் பாபர்!

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.