குரு அருள் கிடைக்க...
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:00

"குரு பிரம்மா, குரு விஷ்ணு; குரு தேவோ மகேஸ்வர...' என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மற்ற தெய்வங்களைவிட, குருவுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். இதில், குருவுக்கு மூன்றாவது இடம் உள்ளது. காரணம், ஒருவனது பிறவிக்கு மாதா, பிதாக்களே காரணம் என்பதால் இவர்களுக்கு முதலிடம்.
ஆரம்பத்தில் உள்ள வாக்கியத்தில் குருவுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. மனிதன் பிறந்த பின், அவனது அறிவுக் கண்களை திறந்து விடுபவர் ஆசான் அல்லது குரு. குருவுக்கு நிறைய பெருமைகள் சொல்லப்பட்டுள்ளன. "குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்!' என்றுள்ளது. அதனால், பிறவி எடுத்தவர்கள் ஒரு சத்குருவை அடைந்து, கல்வி, வேத சாஸ்திரங்கள் பயின்று, தன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். குரு பக்தி, மிகவும் முக்கியமானது.
ஒரு நல்ல குரு கிடைப்பதற்காக தேடி அலைய வேண்டும் சீடன். ஒரு நல்ல சீடன் கிடைக்க வேண்டுமென்று, குரு தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். யார் கிடைத்தாலும் அவர் குரு என்றோ, அவன் சீடன் என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது. குருவுக்குப் பணிவிடை செய்து, அவரை திருப்திப்படுத்தினால், கற்ற வித்தைகள் நல்ல பலன் தரும்; குருவை அவமதித்தால் குரு சாபம் ஏற்படும்.
குரு சாபத்தை போக்கவோ, மாற்றவோ பகவானால் கூட முடியாது. அதனால், குரு என்றால் பக்தி, விசுவாசத்துடன் இருந்து பணிவிடை செய்து அவர் சந்தோஷப்பட்டால், அவர் ஆசீர்வதிப்பார். பல சீடர்களுக்கு, "நீ படிக்காமலே சகல வேத சாஸ்திரங்களும் உனக்கு சித்தியாகும்' என்று, குரு ஆசீர்வதித்ததாகவும், அதே போல, அந்த சீடர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்கினர் என்றும் பல சரித்திரங்கள் உள்ளன.
கீதையை உபதேசிக்க விரும்பினான் கண்ணன். யாருக்கு உபதேசம் செய்வது என்று யோசித்தான். அந்தத் தகுதி பெற்றவன் அர்ஜுனன் தான் என்று தீர்மானித்தான். அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தான். கீதை, உயர்ந்த போதனை, தத்துவங்கள் கொண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த விஷயத்தை, உயர்ந்த இடத்தில் தானே வைக்க வேண்டும்! ஏன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தான் என்பதற்கான காரணங்கள், பகவத் கீதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளன.
நல்ல பாலை, தங்கம் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் வைப்பது தான் உயர்வு. அதை தாமிரப் பாத்திரத்திலோ, சுரைக் குடுவையிலோ வைப்பரா? தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தால் தான் பாலுக்குப் பெருமை. வைரத்தோடை நகைப்பெட்டியில் வைத்து, அலமாரியில் வைப்பரா அல்லது சமையலறை அஞ்சறைப் பெட்டியில் கடுகு, உளுத்தம் பருப்போடு போட்டு வைப்பரா?
பொருளின் உயர்வுக்குத் தகுந்தபடி இடம் தேடி வைப்பர். அதுபோல், ஒரு குருவானவர் உயர்ந்த உபதேசங்களை, தகுதி உள்ள மாணவர், சீடர்களுக்கு தான் உபதேசிப்பார். மாணவனின் அறிவு, பணிவு இவைகளை கணக்கிட்டு, அதற்கு தக்கபடி ஆசிர்வதிப்பார். அப்படி அவர் ஆசிர்வதித்து விட்டால், அந்த சீடனும் சீரும் சிறப்புமாக வாழ்வான்; குருவுக்கும் பெருமை சேர்ப்பான். நான் இன்னாருடைய சீடன் என்று பெருமையாகப் பேசுவான். அது, குருவுக்குப் பெருமை.
அப்படியில்லாமல், "குருவா... அவரா... அவருக்கு என்ன சார் தெரியும்? ஏதோ பெயர்தான் குரு! அவர் என்ன சொல்லிக் கொடுத்தார்? எல்லாம் நானே கற்றுக் கொண்டேன்...' என்று சொல்லும் சீடர்களும் உண்டு. அதனால், விவரம் தெரிந்த குரு, ஆரம்பத்திலேயே நல்ல சீடனை தேர்ந்தெடுக்க வேண்டும். தன்னிடம் பயில்பவனின் நலன் கருதும் குருவை, சீடனும் அடைய வேண்டும். இரண்டும் நன்றாக அமைந்து விட்டால், இருவருக்குமே பெருமை தான்!
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!


* "எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்றெல்லாம் கூறுகின்றனரே, அப்படியென்றால், தீயசெயல்கள் செய்பவனின் கைகள் யாரால் இயங்குகின்றன?
எல்லாம் இறைவனே! மழையை வெள்ளமாக்குபவனும் அவனே, பாலைவனத்தை வறட்சியாக்குவதும் அவனே! ஒவ்வொரு தீமையிலும், "தான்' உணரப்பட வேண்டும் என்பதே இறைவனின் நோக்கம். அவனை உணர்த்துவதே மதங்களின் சாரம்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sadhanandan palani - Sharjah,கனடா
22-ஜன-201308:27:43 IST Report Abuse
sadhanandan palani என்ன ஒரு கஷ்டம் என்றால் அர்த்தம் எழுதியவரின் மகள் மதம் மாறியவர்
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
20-ஜன-201311:36:24 IST Report Abuse
mrsethuraman  குரு என்பவர் மனித ரூபத்தில் இருக்கும் இறைவனே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.