E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
திருநெல்வேலி!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:00

ஜன., 21 - நெல்லுக்கு வேலி கட்டிய விழா

திருநெல்வேலி-தென்தமிழகத்தின் பெருநகரம். வற்றாத தாமிரபரணி, இங்கேயே தோன்றி இங்கேயே மறைந்து விடுகிறது. அதனால், எந்த பிரச்னைக்கும் ஆளானதில்லை இந்த நதி. சுருக்கமாக,"நெல்லை' என்று இவ்வூரை அழைப்பர். நெல்லுக்கும், இந்த ஊருக்கும் சம்பந்தம் உள்ளதால், "திருநெல்வேலி' என்ற பெயர் அமைந்தது.
முழுதும் கண்ட ராமன் என்ற மன்னன், திருநெல்வேலியை ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில், 12 ஆண்டுகள் மழை இல்லை. வற்றாத தாமிரபரணி கூட, வறட்சியின் பிடியில் சிக்கியது. மக்களுக்கு எப்படி உணவிடுவது என்று மன்னன் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.
வேதசன்மா என்பவர், தினமும் நெல்லை வந்து, நெல்லையப்பரை வணங்குவார். உணவுக்கு என்ன தான் பஞ்சமாக இருந்தாலும், தங்களை வாழவைக்கும் நெல்லையப்பரை மட்டும் பட்டினி போட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக, தினமும் அரிசி எடுத்து வந்து, இறைவனுக்கு நைவேத்யம் படைத்து வந்தார். பக்தர்களை சோதிப்பதில் சிவனுக்கு நிகரானவர் யாருமில்லை! அவர் வேதசன்மாவுக்கு சோதனை வைத்தார்.
அவரது சொத்துகளை படிப்படியாகக் கரையச் செய்தார். மிஞ்சியது ஒரு மூடை நெல் மட்டுமே! அது தீர்வதற்குள், மழை பெய்து வயல்கள் விளைந்தாக வேண்டும். "பெருமானே... நான் பட்டினி கிடந்தேனும், உனக்கு தினமும் அமுது படைப்பேன். இந்த நெல் தீர்வதற்குள் மழை பொழிந்து, உன் பங்கையாவது பெற்றுக் கொள்...' என்று வேண்டினார்.
சிவன் அவரது கோரிக்கையை ஏற்றார். ஆனால், அதி<லும் ஒரு சோதனை. ஒருநாள், வேதசன்மா நைவேத்யத்திற்குரிய நெல்லை, திறந்த வெளியில் காயப்போட்டு விட்டு, தாமிரபரணிக்கு நீராடச் சென்றார். அப்போது பெருமழை பிடித்துக் கொண்டது. வேதசன்மா மகிழ்ந்த அதே வேளையில், "ஐயையோ... நெல்லை வெட்ட வெளியில் காயப்போட்டு வந்தோமே... அது நனைந்து விட்டால், இன்றைய நைவேத்யத்திற்கு நெல்லுக்கு எங்கே போவது?' என வேகமாய் வீடு திரும்பினார்.
என்ன அதிசயம்... நெல்லைச் சுற்றி மழை பெய்ததே தவிர, நெல் மீது சொட்டு தண்ணீர் விழவில்லை. மழை நீர் வேலி போல் சுற்றி நின்று, உள்ளிருந்த நெல்லைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வேதசன்மா பரவசமடைந்தார். "நெல்லுக்கு வேலியிட்ட நாதா' என்று விழுந்து வணங்கினார்.
சிவன் நிகழ்த்திய இந்த திருவிளையாடல் காரணமாகவே, அதுவரை, "வேணுவனம்' என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, "நெல்வேலி' ஆனது. பின், மரியாதை கருதி, "திரு' என்ற அடைமொழி சேர்ந்து, "திருநெல்வேலி' என மாறியது. சிவன், "நெல்லையப்பர்' எனும் சிறப்புப்பெயர் பெற்றார். அந்த பெயரே நிலைத்து விட்டது. தைப்பூசத் திருவிழாவின் நான்காம் நாள், "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்ச்சி, நெல்லையப்பர் கோவிலில் நடத்தப்படும்.
தாமிரபரணியில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு, நெல்லையப்பர் கோவிலின் அமைப்பே காரணம் என்கின்றனர். எல்லாக் கோவில்களிலும் சுவாமி அபிஷேக தீர்த்தம், வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கு நோக்கி இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருண பகவான், எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், மூன்று மூலவர்கள் உள்ளனர். "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவரே, "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னிதி முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னிதியும் இருக்கிறது. இவரே, இக்கோவிலின் முதல் லிங்கம் என்பதால், இவருக்கு முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராக வணங்கப்படுகின்றனர். பரணியில் நீராடி, பாவங்களைத் தொலைத்து புண்ணியத்தைப் பெற்றுச் செல்ல, நெல்லை நோக்கி பயணியுங்கள்.
***

தி. செல்லப்பா

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELVA - nellai,இந்தியா
26-ஜன-201315:31:35 IST Report Abuse
SELVA தெய்வீக திருத்தலம் திருநெல்வேலி..நானும் திருநெல்வேலி தான் என்பதில் பெருமை அடைகிறேன்...
Rate this:
0 members
0 members
0 members
Cancel
subha - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜன-201313:06:21 IST Report Abuse
subha என்னுடைய native place பெருமையை இன்று அறிந்தேன்
Rate this:
0 members
0 members
5 members
Cancel
nagiah - Bangalore-47,இந்தியா
21-ஜன-201303:14:32 IST Report Abuse
nagiah லாஜிக் இல்லையே? தண்ணீர் இல்லாமல் நதி வன்றண்டது. ஓகே பட் எப்படி குளிக்க போனார்?
Rate this:
14 members
1 members
8 members
Kalakkal Mano - Chennai,இந்தியா
22-ஜன-201315:56:54 IST Report Abuse
Kalakkal Manoதிரு நாகையா அவர்களே... தாமிரபரணி வறட்சியின் பிடியில் சிக்கியது என்றால் வயல்களுக்கு போதிய அளவு நீர் இல்லை என்று அர்த்தம். குளிக்கும் அளவு தண்ணீர் இருக்கும்.. தவிர, இது போன்ற ஆன்மீக விஷயங்களில் concept மட்டும் பார்க்கவும்.. லாஜிக் பார்க்க வேண்டாம். ஏதேதோ சினிமாக்களில் லாஜிக் இல்லாத விஷயங்களை ரசிக்கிறோம்.. இது போன்ற முக்கியமான விஷயங்களில் லாஜிக் இல்லையே என்கிறோம்......
Rate this:
1 members
0 members
12 members
Cancel
muthukrish018 - Nellai,இந்தியா
20-ஜன-201319:35:27 IST Report Abuse
muthukrish018 ஓம் நாம சிவாய நாளைக்கு கோயில்ல பார்போம்
Rate this:
1 members
0 members
59 members
Cancel
Govind Muralidharan Rathish - Jubail,சவுதி அரேபியா
20-ஜன-201318:17:21 IST Report Abuse
Govind Muralidharan Rathish Superb & true article about Tirunelveli.
Rate this:
1 members
0 members
10 members
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
20-ஜன-201315:10:43 IST Report Abuse
anandhaprasadh ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....
Rate this:
2 members
0 members
8 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.