அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
Advertisement
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:00

சில மாதத்துக்கு முன், மதுரையிலுள்ள பிரபல ஓட்டல்... நான், லென்ஸ் மாமா மற்றும் சில நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம்... இரவு மணி 10:00 இருக்கும்...
எங்கள் ரூமை ஒட்டிய ரூமில் இருந்து, "கசமுச' வென புரியாத ஒலிகள் சிறிது நேரமாகவே வந்து கொண்டிருந்தது... ஆனால், அது மற்றவரை இடைஞ்சல் செய்யும் அளவில் இருக்கவில்லை...
மதுரை மீனாட்சி பஜாரில் (அந்த ஊர் பர்மாபஜார்) கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவருக்கு போன் செய்து, டோர் டெலிவரியாக, தம் உ.பா.,வை பெற்றுக்கொண்ட லென்ஸ் மாமா, எங்களது பேச்சில் கலந்து கொள்ளாமல், "டிவி'யை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்...
ரூமில் அமர்ந்திருந்த நண்பர்களுள் ஒருவர், சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தார். அவரிடம், "ஏன் சாமி... மாலை போட்ட பலரும், கண்டிப்பான விரதங்களை இப்போதெல்லாம் கடைப்பிடிப்பதில்லை என சொல்கின்றனரே... இது ஏன்?' என ஆரம்பித்தேன்...
"உண்மைதான் மணி... மனிதனுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்... அதை, "டெவலப்' செய்ய இது போன்ற பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்பதற்காகவே, "விரதம்' என கடவுள் பெயரைச் சொல்லி ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர் முன்னோர்.
"காலப் போக்கில் இவை எல்லாம் மறைந்து வருகிறது... பிராந்திக் கடைகளில் கூட, சாமிகளுக்கு என, தனி டம்ளர்கள் வைக்கும் அளவிற்கு காலம் வந்து விட்டது.
"இப்போ சபரிமலை செல்வதென்பது, வருடம் ஒரு முறை, ஒரு வாரம் சுற்றுலா சென்று வருவது போன்ற, "ரிலாக்சேஷன்' ஆகி வருகிறது...' என்று நண்பர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, பக்கத்து ரூமில், "கசமுச'வென கேட்டுக் கொண்டிருந்த பேச்சு ஒலி அதிகரித்தது.
காங்கிரஸ் - தி.மு.க., கட்சியினர் போலும்... ஒருவரை ஒருவர் குறை கூறி சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்... லென்ஸ் மாமா சிறிது எரிச்சலானார்... ரூம் கதவைத் திறந்து, பக்கத்து அறையை எட்டிப் பார்த்து வந்தவர், "ரூம் வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு பேசிக்கிட்டு இருக்காங்கப்பா... துளி நாகரிகம் இல்லே...' என்றவர், மீண்டும், "டிவி' பார்க்கத் துவங்கினார்...
"சாமி' மீண்டும் பேச ஆரம்பித்தார்... "மகரஜோதி பார்க்கணுமுன்னு அன்றைய தினம் எக்கச்சக்க கூட்டம் கூடி விடுகிறது... இதைத் தவிர்க்க, மகர ஜோதியின் உண்மை நிலவரத்தை வெட்ட வெளிச்சமாக்கி விடலாம்...' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அடுத்த அறை வாசலில் உரத்த குரலில் ஆங்கில உரையாடல் கேட்டது... எல்லாருமே வெளியே வந்து எட்டிப் பார்த்தோம், லென்ஸ் மாமா தவிர...
ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி... சப்தம் வந்து கொண்டிருந்த ரூமின் அடுத்த ரூமில்... அதாவது, சப்தம் வந்த ரூமின் இந்த பக்கம் எங்கள் ரூம்... அந்த பக்கம் அந்தப் பெண்மணியின் ரூம்...
"ஏன் இந்த அகாலத்தில் இப்படி சப்தம் போடுகிறீர்கள்? மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள்... நாங்கள் சுற்றுலாப் பயணிகள்... தூங்க வேண்டாமா?' எனக் கேட்டார்... சப்தம் வந்த ரூம்காரர் ஒருவர், "சாரி மேடம்...' என மன்னிப்பு கேட்டு, ரூம் கதவை மூடிக் கொண்டார்...
விஷயத்தை அறிந்த மாமா, உடனே பிளேட்டை மாற்றி, "நம்ம கலாசாரமே சப்தம் போட்டுப் பேசுவது தான்... சோறு இல்லா விட்டால் கூட நாம் கவலைப்பட மாட்டோம்... ஆனா, பேசக்கூடாது என வாயைக் கட்டிப் போட்டா எப்படிப் பொறுப்போம்... அந்த ஆளு ஏன், "சாரி' கேட்கணும்? நம்ம ஆளுங்களுக்கு இன்னும் அடிமை புத்தி போகலே... வெள்ளக்காரன்னா உடனே பயந்து, பணிஞ்சு போகணுமா? வேணுமுன்னா அந்த லேடியை, வேற ஓட்டல் பாத்துக்கிட்டு போங்கன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே?' என்றார்.
அவரை சட்டை செய்யாமல், எங்கள் பேச்சைத் தொடர்ந்தோம்...
"சபரிமலை கோவிலில் இது போல குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடை திறக்கும் வழக்கம் இருப்பதால் தான் கூட்டம் ஒரே நேரத்தில் அலை மோதுகிறது... "டிமாண்ட்' அதிகம் இருப்பதால் வாகன கட்டணங்களும், மற்ற செலவுகளும் பல மடங்காக உயர்கிறது... பலரும் ஒரே நேரத்தில் ஒரே திசையை நோக்கிச் செல்வதால் விபத்துகளும், உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன... "இதை எல்லாம் தடுக்க, தவிர்க்க வேண்டுமானால், வருடம் முழுவதும் கோவிலைத் திறந்து வைக்க வேண்டும்... இதற்கான முயற்சிகளை, தொடர்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும்...' என, "சாமி' சொல்லிக் கொண்டிருக்கும் போதே... மீண்டும் பக்கத்து ரூமில் வெள்ளைக்கார பெண்மணியின் குரல்...
இப்போது, "புல்மப்பில்' இருந்த பக்கத்து ரூம் ஆசாமிகள், வெள்ளைக்காரப் பெண்மணியை எகிறிக் கொண்டிருந்தனர் சொல்லால்... லென்ஸ் மாமா கூறிய அதே வார்த்தைகள்...
பயந்து போன பெண்மணி, ஓடிப்போய் தன் ரூமில் புகுந்து, கதவைத் தாளிட்டார்... இங்கே, பக்கத்து ரூம் ஆசாமிகள் முகத்தில் ஆனந்த தாண்டவம்...
"மப்ழே... தெய்ரிமா வெழ்ழக்காழிய எழுத்துப்புழ்ழே... நீல்லாம் சூழந்திழத்துக்கு முன்னே பொழந்து இருந்தா எப்பவோ வெழ்ழக்காழன் ஓடி இருப்பான்...' என்றபடியே, ஆங்காங்கே சரிந்தனர்... சிலர், "உவ்வே' செய்தனர்!
தலையில் அடித்துக் கொண்டு ரூமிற்கு திரும்பினோம்...
பின்னர் என்னுள் எழுந்த கேள்விகள்...
1) சோறு இல்லாவிட்டாலும், பேச்சு அவசியம் என்று கருதும் இனம் நாம் என்று லென்ஸ் மாமா கூறியதில் நிஜம் எவ்வளவு?
2) பக்கத்து ரூம் ஆசாமி, முதலில், "சாரி' கேட்டது பயத்தினாலா, நாகரிகம் கருதியா? பின்னர் அவரே, அப்பெண்மணியை மற்றவர்களுடன் சேர்ந்து ஏசியது ஏன்?
3) லென்ஸ் மாமா கூறியது போல, நம்மை விட்டு, இன்னும் அடிமை உணர்வு அகலவில்லையா?
இப்படி இன்னும் பல கேள்விகள்... விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.
***

பத்திரிகை ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லா நீர் பிரவாகம், எவ்விதம் கிராமப் புறங்களை எல்லாம் மூழ்கடித்து, பயிர்களையும் நாசமாக்கி விடுமோ, அதேபோல, கட்டுத் திட்டத்திற்கு உட்படாத பேனாவும், நாச வேலைக்குத் தான் பயன்படும். கட்டுத் திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத் திட்ட மில்லாததைவிட, அது, அதிக விஷமான தாகும்.
கட்டுத் திட்டம் உள்ளுக்குள் இருந்தே வருவதாக இருந்தால் தான் லாபம் உண்டு. இந்த நியாயம் சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்த சோதனையில் தேறும்? பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவர்?
பொதுவாக, நல்லதையும், தீயதையும் போல, பயனுள்ளவையும், பயனில்லாதவையும் கலந்து இருந்து கொண்டு தான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்!'
— மகாத்மா காந்தியின் சுய சரிதை; மதுரை காந்தி மியூசியம் வெளியீடு!
— காந்தி காலத்திலும், பத்திரிகைகள், இந்த லட்சணத்தில் தான் இருந்திருக்கின்றன என்பதை நினைக்கும்போது, கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
23-ஜன-201302:53:05 IST Report Abuse
Subramaniam மற்றவர்களுக்கு இடையுறு இன்றி வாழ பழகிக்கொள்ள வேண்டும். பேசுபவருக்கு மட்டும் கேட்கும் படி மெதுவாக பேச வேண்டும். இந்த ஒழுக்கம் தமிழருக்கு அறவே இல்லை.
Rate this:
5 members
0 members
63 members
Share this comment
Cancel
Mahesh Kumar - chennai,இந்தியா
22-ஜன-201312:42:16 IST Report Abuse
Mahesh Kumar அந்துமணி சார் எனக்கு ஒரு டவுட்டு... லென்ஸ் மாமா நா , பெரிய லென்ஸ் வெச்ச கண்ணாடி போட்டிருப்பாரா அல்லது லென்ஸ் வெச்சு ஆராச்சி பண்ணுவாரா ?
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
22-ஜன-201303:32:02 IST Report Abuse
sulochana kannan இதனாலெல்லாம் மொத்தமாக இந்தியர்களே. நாகரிகம் அற்றவர்கள் என்று வெளிநாட்டவர் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. யாராக இருந்தாலும் தூக்கம் கெடுவது, கெடுப்பது வருந்ததக்கது தானே. டூரிச்ம் நமக்கு வருமானம் தருவது , சுற்றுலா பயணிகளிடம் நாகரிகமாக நடப்பது நம் கடமை. ஜப்பான் சீனா போன்ற நாடுகள் வெற்றி பெறுவது இதைப்போன்ற பன்புகளால்தான்.
Rate this:
1 members
0 members
20 members
Share this comment
Cancel
Kalakkal Mano - Chennai,இந்தியா
21-ஜன-201316:11:12 IST Report Abuse
Kalakkal Mano எங்கேயா இருந்தாலும் கத்தி பேசுவது அநாகரிகமே.. இதில் அடிமை, சுதந்திரம் இதெல்லாம் எங்கிருந்து வந்தது.. இந்த லென்ஸ் மாமா வுக்கு வேற வேலை எதுனா குடுங்க பா...
Rate this:
1 members
0 members
25 members
Share this comment
Cancel
Kanal - Chennai,இந்தியா
21-ஜன-201310:37:55 IST Report Abuse
Kanal "காங்கிரஸ் - தி.மு.க., கட்சியினர் போலும்... ஒருவரை ஒருவர் குறை கூறி சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்" நல்ல காது கொடுத்து கேட்டீர்களா? கண்டிப்பாக திமுக காங்கிரஸ் கட்சியினராக இருக்காது. அவர் நனி நாகரீகம் உணர்ந்தவர்கள். வேண்டுமென்றால் அவர்கள் அதிமுக கட்சியினராக இருக்கலாம்.
Rate this:
27 members
0 members
25 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
23-ஜன-201316:37:17 IST Report Abuse
LAXஇங்கேயும் கட்சி சண்டையா? ஏ.... யப்பா.......
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
tulasidas - Tirupur,இந்தியா
20-ஜன-201318:37:06 IST Report Abuse
tulasidas வெளிநாட்டவர் ஆனாலும் இந்தியர்கள் ஆனாலும் தவறு செய்பவரை தட்டிக்கேட்கும் தைரியம் மனிதனுக்கு வேண்டும் . தைரியம் இல்லாதவர்கள் சுதந்திர நாட்டில் வாழ அருகதை இல்லாதவர்கள் . அநியாயங்கள் பெருகிக்கொண்டே போகும். தட்டிக்கேட்பவருக்கு பணிந்து போகாதது மற்றும் தட்டிக்கேட்பவருக்கு ஆதரவாக மற்றவர்கள் பேசாதது அடிப்படை மனித உரிமையை இழக்க ஏதுவாகும்.
Rate this:
1 members
0 members
46 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
23-ஜன-201316:36:41 IST Report Abuse
LAXஉண்மைதான்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
20-ஜன-201314:55:29 IST Report Abuse
anandhaprasadh உண்மைதான் skv... விடுதி என்பது ஒரு பொது இடம்... அங்கு கத்திப்பேசகூடாது என்பது நாம் கடைப்பிடிக்கவேண்டிய பண்பாடு... இதில் போய் ஏன் அந்துமணி அவர்கள் அடிமைத்தனம் பற்றியெல்லாம் பேசுகிறார் என்று புரியவில்லை.... சரி.. வெள்ளைக்காரப் பெண்மணிக்கு பதில் நம் நாட்டவரே தங்கி இருந்து அவர் வந்து "சத்தம் போடாதீர்கள்" என்று சொன்னால் மட்டும் திருந்திவிடப் போகிறார்களா உ.பா.பிரியர்கள்...?
Rate this:
0 members
0 members
53 members
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
20-ஜன-201313:11:16 IST Report Abuse
Natarajan Iyer சத்தமாக பேசுவது நாகரீகமில்லாத அசிங்கமான பழக்கம். நம் ஊரில் செல்போனில்கூட பொது இடம் என்றுகூட பார்க்காமல் சத்தமாகத்தான் பேசுகிறார்கள்.
Rate this:
0 members
1 members
41 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
20-ஜன-201303:41:44 IST Report Abuse
Skv ஆமாம் நாம் எவ்ளோ தொல்லைதந்தாலும் எவரும் தட்டியே கெக்ககூடது அப்படித்தானே அய்யாஇவுக இஷ்டத்துக்கு தண்ணி அடிச்சு கத்தி பேசுறது அனாகரீஹம்னுகூடவ தெரியலே/நானும் நெறைய வெளிநாட்டவர்களை பார்க்குறேன் எவருமே நம்பள போல கத்திகதறி உரக்க பேசுவதே இல்லே .நம்மௌஉர்கலில்தான் லபலபன்னு கத்தி பேசி கன்றாவியா பிஹெவ் பன்றோம்
Rate this:
4 members
2 members
151 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.