அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:00

அன்புள்ள அம்மாவிற்கு —
நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். ஒரு பெண் குழந்தை உண்டு. என் கணவர் முற்போக்கு சிந்தனையுள்ளவர். என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தில் அவருக்கு ஒரு பெண் நண்பி உண்டு. அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவள் தன் தம்பியுடன் தனியே வீடு எடுத்து தங்கியுள்ளாள். நட்பு முறையில் அவள் எங்கள் வீட்டிற்கு வருவாள்; நாங்களும் அவள் வீட்டிற்கு செல்வோம்.
நான் ஒரு மாதம் என் ஊரில் தங்கியிருந்தேன். அப்போது அவள் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து இரவு தங்கியுள்ளாள். அதை, என் கணவரும், என்னிடம் கூறினார். நான் திரும்பி வந்ததும் அக்கம் பக்கம் இருப்பவர்கள் என்னை திட்டினர். நான் அவரிடம் அதை கேட்டபோது, "நான் நாலு பேருக்காக என்னை மாத்திக்க முடியாது. நான் நானாகத்தான் இருப்பேன்... இதில் என்ன தவறு?' என்று கூறினார். நானும் பிரச்னை செய்ய வேண்டாம் என இருந்து விட்டேன்.
நான் ஊரில் இல்லாதபோது அவள்தான் அவருக்கு உணவு செய்து வருவாள். நான் இதுவரை எதுபற்றியும் அவளிடம் கேட்டதில்லை. எங்களிருவருக்குமிடையே ஏதாவது பிரச்னை வந்தால், எனக்கு சப்போர்ட் செய்து பேசுவாள். ஆனால், என்னால் நட்பு அடிப்படையில் அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம், நான் ஹவுஸ்-வைப். என் சிந்தனை எப்போதும் என் கணவரைப் பற்றிதான்.
முன்பெல்லாம் எங்கு போனாலும் சொல்லிவிட்டு செல்வார்; இப்போது, நிலைமை தலைகீழ். அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பதை அந்த பெண்ணிடம் கேட்டுத் தெரிந்து கொள் கிறேன். அவள் முன் என்னை மட்டம் தட்டிப் பேசுவார். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என்னதான் நட்பாக இருந்தாலும், அது கலாசாரத்தை மீறியதாக இருக்கக் கூடாது எனத் தோன்றுகிறது.
நான் இதுபற்றி கேட்டால், "இஷ்டமிருந்தால் இரு... இல்லாவிட்டால் போய்விடு. என் இஷ்டப்படித்தான் நான் இருப்பேன்...' என்று கூறுகிறார். தாங்கள் தான் எனக்கு நல்ல ஆலோசனை தர வேண்டும். மேலும், மாதர் சங்கம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இல்லம் ஆகியவற்றின் முகவரி, போன் நம்பர்கள்
எனக்கு தரவும்.
அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கண்டேன்.
தும்பை விட்டு விட்டு, வாலைப் பிடிக்க முயற்சி செய்கிறாய். என்ன தான் அவள், உன் கணவரின் அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்றாலும், ஆண்- பெண் நட்பு ஆரோக்கியமானதுதான் என்றாலும், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது கண்ணம்மா...
உன் கணவர், "நட்பு' என்ற பெயரில் செய்வது பச்சைத் துரோகம். "நாலுபேருக்காகத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாது... நான், நானாகத்தான் இருப்பேன்...' என்பவரிடம் - "அதே போல, நானும் என் இஷ்டப்படி இருக்கட்டுமா?'— என்று கேள்!
உன்னிடமும் தவறு இருக்கிறது. நீ ஊருக்குப் போயிருக்கும் போது, அவள் எதற்காக உன் கணவருக்கு சமைத்து எடுத்து வர வேண்டும்? ஊரில் ஓட்டலா இல்லை? அட, அப்படியே ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்றால், அறிந்தவர்கள் - சொந்தக்காரர்களிடம் சொல்ல வேண்டியது தானே! இல்லாவிட்டால், ஒரு குக்கர் வைத்துக் கொள்ள உன் கணவருக்குச் சொல்லிக் கொடுத்து, பொடி, புளிக்காய்ச்சல் இப்படி எதையாவது செய்து வைத்து விட்டுப் போக வேண்டியதுதானே!
"நான் ஊரில் இல்லாதபோது அவள்தான் அவருக்கு உணவு கொண்டு வருவாள்; நான் இதுவரை எது பற்றியும் அவளிடம் கேட்டதில்லை...' என்று எழுதியிருக்கிறாயே...
ஏன்... அவளிடம் பயமா, தாட்சண்யமா அல்லது இப்படிக் கேட்பது அநாகரிகம் என்று நினைக்கிறாயா?
இதோ பார்... எதில் நாம் தாட்சண்யம், நாகரிகம் பார்க்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதேபோல, எதற்குப் பயப்பட வேண்டும் என்றும் இருக்கிறது... அநாவசியத்துக்குப் பயப்பட்டால், ஏமாளிப் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்!
அந்த பெண்ணை தனியே அழைத்துப் பேசு:
"நீ இப்படி என் கணவருடன் நட்பு என்கிற பெயரில் அத்துமீறிப் பழகிக் கொண்டிருக்கிறாயே... அதே போல, உன் கணவரிடம் எவளாவது பழகினால் சகித்துக் கொள்வாயா?' என்று கேள்...
"தன் மனைவி மிகவும் நம்பிக்கைக்குரியவள்' என்று நம்பி, உன் கணவர் துபாயில் உழைத்துக் கொண்டிருக்கிறாரே... அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் எப்படி இருக்கும்?' என்று கேள்.
இப்படிக் கேட்பதால், உன் கணவருக்கும், அவளுக்கும் இடையில் இருக்கும் அந்தப் புனிதமான நட்பின் தன்மையை நீ புரிந்து கொள்ளவில்லை என அவர்கள் நினைத்தால் நினைக்கட்டும்!
அதே சமயத்தில், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பதையும் புரிந்து கொள். உன் கணவர் சபலிஸ்ட் என்பது தெரிந்திருந்தும், நீ அடிக்கடி அவரைப் பிரிந்து ஊருக்குப் போவது நல்லதல்ல. தவறுகள் நடப்பதற்கு சந்தர்ப்பங்களை நாமே ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, அப்புறம் "அய்யோ அப்பா' என்று அலறுவதில் பிரயோஜனமே இல்லை.
"அவள் எதிரில் என்னை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்!' என்று ஒரு முறை சொல். அதை உன் கணவர் கேட்கவில்லை என்றால், மறுமுறை அவர் அப்படிப் பேசும்போது - நேரே அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்து இப்படிச் சொல்...
"இது எங்கள் குடும்ப விஷயம். நடுவில் நீ இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை... வெளியே போ!'
இதற்கு உன் கணவர் ஆட்சேபனை தெரிவித்தால் - போர்க்கொடியை உயர்த்து. என்றைக்கும் உன் இடத்தை விட்டுக் கொடுக்காதே. குடும்பத்துக்குள் கலகத்தை உண்டு பண்ணுகிறவர்களை கலாசாரம், பண்பாடு என்று பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் அனுமதிக்காதே. முடிந்தால் அவள் வீட்டில் இது பற்றிச் சொல்வேன் என்று சொல்.
"உன்னை வீட்டை விட்டுப் போ' — என்று உன் கணவர் விரட்டினால், "நான் ஏன் போக வேண்டும்!' என்று எதிர்த்துக் கேள். அதையெல்லாம் விட்டு, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இல்லம், மாதர் சங்கம் என்று எடுத்த எடுப்பில் அழுது கொண்டு கிளம்பாதே; அது கையாலாகாத்தனம்... புரிகிறதா?
அந்த வீட்டை விட்டு, உன் கணவரை விட்டு நீ பிரிய வேண்டாம். வேண்டுமானால் அவர்
கோர்ட்டுக்குப் போகட்டும். தற்சமயம் நீ எந்தக் காகிதத்திலும் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டாம். நிமிர்ந்து நில்.
அழாதே... அது பலவீனம்! எதிர்த்து போரிடு. வெற்றி நிச்சயம் உண்டுதான்!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (37)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venku - T.N,இந்தியா
26-ஜன-201305:54:33 IST Report Abuse
Venku நட்புக்கும் எல்லை உண்டு ..புரிந்துகொண்டால் தொல்லையில்லை.
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
25-ஜன-201311:23:57 IST Report Abuse
JALRA JAYRAMAN கணவனின் விருப்பத்தை தன் விருப்பம் ஆக்குவது தான் வழி. வேறு வழி உள்ளது அது தன்னுடிய விருப்பதை கணவன் மேல் திணிப்பது. சுயமாக சம்பாதிக்க எதாவது வேளைக்கு போகலாம் அது தங்களுடிய நம்பிகையை வளர்க்கும். காலபோக்கில் பிரச்சினை திரும் அதற்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலை செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
24-ஜன-201320:49:08 IST Report Abuse
saravanan அந்த பெண்ணோட தம்பி வீட்டுல சும்மாதான இருக்காரு..... உங்க கணவர் ஊருக்கு போகும்போது அந்த தம்பியை உங்க கூட தங்க வெச்சிக்கலாமான்னு கணவர்கிட்ட கேளுங்க..... எல்லாம் சரியாயிடும்....
Rate this:
Share this comment
Cancel
venkata jalapathi - chennai,இந்தியா
23-ஜன-201315:31:31 IST Report Abuse
venkata jalapathi தேவையா இது
Rate this:
Share this comment
Cancel
meenavan - New Jersey,யூ.எஸ்.ஏ
23-ஜன-201311:05:43 IST Report Abuse
meenavan இன்னும் சில எண்ணங்கள். இப்படியும் பார்ப்போமே.அந்தப் பெண்ணின் கணவன் வெளி நாட்டில் சம்பாதிக்கிறார்..மனைவி இங்கே சம்பாதிக்கிறார்.இங்கு எழுதிய பெண்ணின் கணவனும் சம்பாதிக்கிறார். மனைவி ஊரில் இல்லாத போது வேறு ஒரு பெண் வந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரியும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படி ஒரு தவறான உறவில் இருந்திருந்தால் ஓரிரவு தங்க வேறு இடமா கிடைக்காது அவர்களுக்கு? சரி, ஒரு அலுவலகத்தில் வேலைசெய்யும் தனது கணவனுக்கு ஒரு மனைவி போன் செய்து அவர் கிடைக்கவில்லை என்றால் அவரது உடன் வேலை பார்க்கும் நண்பரிடம் கேட்பார். நண்பர் சொல்லுவார் அவர் இங்கே இருக்கிறார் இன்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று.அந்த நண்பர் ஆணாக இருக்கும்போது பிரச்னையில்லை. அது ஒரு பெண்ணாக இருக்கும்போது மனைவிகளால் அதைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.இது அப்படியும் தெரிகிறது. அந்தப் பெண் ஒரு இரவில் இன்னொருவரின் கணவருடன் வந்து தங்கியது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறிதான்.குறிப்பாக இந்தப் பெண்ணின் மன நிலை பற்றி தெரியாமல். அதை மனைவியை புரியவைக்க முயலாத கணவனின் தவறும் உள்ளது. பொதுவாக ஒரு மனைவிக்கு ஒரு பெண்ணை எப்போது பிடிக்காமல் போகும் என்றால் அந்தப் பெண் தன்னைவிட தனது கணவனிடம் அதிகம் நட்பு பாராட்டும்போது. ஒரு நண்பி போன் செய்து போனை எடுக்கும் மனைவியிடம் உங்கள் கணவன் இருந்தால் பேசச் சொல்லுங்களேன் என்றாலே போதும் அந்தப் பெண்ணிற்கு இந்த வீட்டில் இடம் கிடையாது நட்பாகக்கூட. போனை எடுக்கும் மனைவியிடம் கொஞ்சம் வம்பளந்துவிட்டு அதன் பின் அவரது கணவனிடம் பேசினாலோ இல்லை பேச வேண்டிய விஷயத்தை மட்டும் அவரிடம் பேசிவிட்டு மற்றக் கதைகளை அவரின் மனைவியிடம் பேசினாலோ நட்பு பலப்படும். இது ஒரு நம்பிக்கை பிறக்கும் வரைதான். ஒன்று கணவன் மேல் நம்பிக்கை வேண்டும். இல்லை நண்பி மேல் நம்பிக்கை வேண்டும். இல்லாவிட்டால் நிம்மதி என்பது ஒரு கேள்விக்குறியாகிவிடும்..அழகான கருத்துகள் கணபதி கண்ணன். அந்தப் பெண்ணிடம் பேசவேண்டும் என்ற நான் மறந்துவிட்ட ஒரு முக்கியமான கருத்தையும் குறிப்பிட்டுவிட்டீர்கள்.அருமை...
Rate this:
Share this comment
Cancel
Arun kumar - washington D.C,யூ.எஸ்.ஏ
23-ஜன-201301:26:48 IST Report Abuse
Arun kumar We can sense the insecurity of this woman from the way she mentions "house wife" comparing her husband's fri. why can't she question her husband's fri about providing lunch to him in her absense and mention about nosey neighbours? If her husband is an affair with his fri, why would he ly tell his wife about her stay in their house and providing lunch. Something is fishy in the story or she isn't giving the full details. People here are just commenting on assumptions,one sided story.
Rate this:
Share this comment
Cancel
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
22-ஜன-201316:10:46 IST Report Abuse
praven.dr@gmail.com Both men and women have formed innocent friships that eventually developed into affairs. So, to prevent an affair from developing, it is important that people are aware of this possibility and disconnect from (or put distance in) such relationships early on. They would also do well to think about whether there is something missing from their main relationship that leaves them vulnerable to looking elsewhere — and then to work on remedying that situation. Unfortunately, there is no absolutely sure way to prevent affairs or to ensure that someone you love won’t hurt you. But maintaining good communication and proactively protecting your relationship are two very good ways to nurture a happy, monogamous relationship.
Rate this:
Share this comment
Cancel
prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
22-ஜன-201310:21:08 IST Report Abuse
prabu.usa@gmail.com வப்பாட்டி வச்சிகிரதிலும் ஒரு கிக் இருக்கும்னு நினைக்குறேன்...
Rate this:
Share this comment
Cancel
Stay Hungry. Stay Foolish. - La Jolla,யூ.எஸ்.ஏ
22-ஜன-201302:09:07 IST Report Abuse
Stay Hungry. Stay Foolish. இந்த சம்பவம் ஓர் எச்சரிக்கை.....ஏன் கணவனும் மனைவியும் தனித்தனியே வாழ கூடாதென்று. மனைவியை தன் கூட வைத்து வெளிநாட்டில் வைத்து கொள்ள முடியாதவர்கள் திருமணத்தையே தவிர்ப்பது நலம்.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
21-ஜன-201319:38:22 IST Report Abuse
Venkatesh R Venkatesh வேறொரு பெண்ணுடன் இரவு தங்குகின்ற முற்போக்கு சிந்தனையுடைய கணவனின் முற்போக்கான நடவடிக்கைகள் அந்த அபலைப்பெண்ணுக்கு இன்னுமா புரியவில்லை? இந்தப்பெண்ணின் வெகுளித்தனத்தை முதலாக்கப்பார்கிறான் கணவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.