டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் 51 புள்ளியியல் உதவி இயக்குனர்களுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதிகள்:
18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். புள்ளியியல் பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொருளாதாரம், ஆபரேஷன்ஸ் ரிசர்ச், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், மேதமெடிக்கல் எகனாமிக்ஸ், எகனாமெட்ரிக்ஸ் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்து, இப்படிப்பில் புள்ளியியலை துணைப் பாடமாக முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். புள்ளியியல் தவிர்த்த மேற்கண்ட பிற பாடங்களில் முடித்தவர்களுக்கு புள்ளியியல் சார்ந்த முக்கிய பகுதிகளில் நல்ல திறன் இருக்க வேண்டும். இது குறித்த முழுத் தேவைகள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதர விபரங்கள்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 600 முதல் ரூ.39 ஆயிரத்து 100 வரை ஊதியம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே ஒரே தவணை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி தற்போது விலக்கு பெற விரும்புபவர்கள் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்தை வங்கிகள் மூலமாகவோ அல்லது தேர்ந்து எடுக்கப்பட்ட தபால் நிலையங்கள் மூலமாகவோ செலுத்தலாம். கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு நிலைகளில் இந்தத் தேர்வுக்கான தேர்ச்சி முறை இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திரு நெல்வேலி ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் எதிர்கொள்ளலாம். இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து, பின்னர் விண்ணப்பிக்கவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.