நன்றி கெட்டவன்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜன
2013
00:00

""ஒரு பெரிய நோய் என்னைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. மந்திரப் பறவையைச் சமைத்துத் தின்றால், அந்த நோய் குணமாகி விடுமென்று வைத்தியர் சொல்லுகிறார். உனக்கு மந்திரப் பறவை இருக்குமிடம் தெரியுமா? தெரிந்தால், அதைப் பிடித்துக் கொடுத்தால், என் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு வெகுமதியாகத் தருகிறேன்!'' என்றார் அரசர்.
""அரசே! அந்த மந்திரப் பறவை தினமும் நள்ளிரவில் என் வீட்டுக்கு வரும்!'' என்றான் செம்படவன்.
அரசர், மகிழ்ச்சியோடு, ""அப்படியென்றால் நீ அதை எனக்குப் பிடித்துக் கொடு!'' என்றார்.
""அரசே! மந்திரப் பறவை மிகவும் பெரியது. மிக்க பலமுடையது. அதை என்னால் பிடிக்க முடியாது. நூறு வீரர்கள் சேர்ந்தால்தான் அதைப் பிடிக்க முடியும்!'' என்றார் செம்படவன்.
""என் படை வீரர்கள் ஐந்நூறு பேரை நான் உன்னோடு அனுப்பி வைக்கிறேன். மந்திரப் பறவை உட்காரும் மரத்தின் கீழே அவர்களை மறைத்து வை. அது வந்தவுடன், அவர்கள் அதைப் பிடித்து விடுவர்!'' என்றார் அரசர்.
""இல்லையில்லை. பலத்தைக் காட்டி அந்தப் பறவையைப் பிடிக்க முடியாது. தந்திரத்தினால் மாத்திரமே அதைப் பிடிக்க முடியும். அது என் வீட்டுக்கு வரும்போது, அதனுடன் பேச்சுக் கொடுத்து, அது என்னோடு விருந்துண்ணும்படி செய்கிறேன். அப்போது நாம் அதைப் பிடித்து விடலாம்!'' என்றான் செம்படவன்.
""நீ பெரிய அறிவாளி!'' என்று அரசர் அவனைப் பாராட்டினார்.
ஐந்நூறு வீரர்களை அவனுடன் அனுப்பி வைத்தார்.
வீரர்கள் செம்படவனின் தோட்டத்தில் ஒளிந்து கொண்டனர். செம்படவன் ஒரு பெரிய கம்பளத்தைத் தோட்டத்தின் மத்தியில் விரித்தான். அவனுடைய மனைவி தயாரித்துக் கொடுத்த விதவிதமான சுவையுள்ள உணவுகளைத் தட்டின் மேல் வரிசையாக அடுக்கினான்.
நள்ளிரவாயிற்று... சிறகுகளைப் படபட வென்று அடித்துக் கொண்டு, மந்திரப் பறவை வந்தது.
அந்த நேரத்தில் எப்போதும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் செம்படவன் விழித்துக் கொண்டு, பல வகைப்பட்ட உணவுப் பொருட் களோடு ஒரு விருந்துக்குத் தயாராக தோட்டத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும், அதற்கு ஆச்சரியமாக இருந்தது.
""நண்பனே! குறித்த நேரம் தவறாதவனே! இன்றைக்கு நீ என்னோடு விருந்துண்ண வேண்டும். நீ எனக்காக இதுவரை எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறாய். நான்தான் உனக்கு எதுவும் கொடுத்த தில்லை. இன்று அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது!'' என்றான் செம்படவன்.
முதலில் மந்திரப் பறவை தயங்கியது. செம்படவனின் மேல் அது கொண்டிருந்த நம்பிக்கையினாலும், அவனுடைய ஜாலப் பேச்சினாலும் அது மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து, ஓர் உணவுத் தட்டின் முன்னால் உட்கார்ந்தது.
செம்படவன் சட்டென்று அதன் காலை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, ""வாருங்கள்! உடனே வாருங்கள்! மந்திரப் பறவையைப் பிடித்து விட்டேன்!'' என்று கத்தினான்.
ஒளிந்திருந்த இடத்திலிருந்து வீரர்கள் திமுதிமுவென்று ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் மந்திரப் பறவை தன் அகன்ற சிறகுகளை விரித்துக் கொண்டு, வானத்தை நோக்கி எம்பி விட்டது. செம்படவன் இன்னும் அதன் காலைப் பிடித்துக் கொண்டிருந்தான். வீரர்களில் ஒருவன் பாய்ந்து சென்று, அதனுடைய காலைப் பிடித்து இழுத்தான். ஆனால், அவனையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு மந்திரப் பறவை உயரத்தில் பறந்தது.
மற்றவர்கள் அதைத் தொடர்ந்து ஓடினர். மந்திரப் பறவை மேகங்களின் ஊடே பறந்து போய் கொண்டிருந்தது. அதனுடைய காலைப் பிடித்துக் கொண்டிருந்த செம்படவன் கீழே பார்த்தான். எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அவன் தலை சுற்றியது. அவனுடைய கைகள் சோர்ந்தன. அவன் பிடி தளர்ந்தது. தலை குப்புறக் கீழே விழுந்து இறந்தான். அவனுடைய காலைப் பிடித்துக் கொண்டிருந்த வீரனையும் இழுத்துக் கொண்டு பாறையில் மோதி துண்டு துண்டாக அவன் உடல் சிதற, அப்போது தெறித்த ரத்தம் பாறையைச் செந்நிற மாக்கியது.
மந்திரப் பறவை மேக மண்டலத்திலிருந்த தன் ராஜ்ஜியத்துக்குப் பறந்தது. அதை மறுபடி எவரும் பார்க்கவில்லை.
முற்றும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.