ஜனவரி-26, ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள். நாம் குடியரசான நாள்; வருடம் 1950. நம்மை நாமே ஆள மிக முக்கியமான தேவை சட்டங்கள் அல்லவா? அவற்றை வழிநடத்த அரசியல் நிர்ணய சபை அவசியமாகிறது.
இந்திய அரசியல் நிரண்ய சபை!:
இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை 1927-ல் எம்.என்.ராய் அவர்கள், முதன்முதலாக, தனது "இந்திய பேட்ரியாட்' என்ற நூலின் மூலம் வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து 1934, 1936, 1939 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும் இது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 1945-ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக, ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சியின் தலைவர் அட்லி ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பினார். இந்த அமைச்சரவை தூதுக்குழு, இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற ஒரு அமைப்பு தேவை என பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் மாகாண பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டது. இதில், 296 உறுப்பினர்கள் பிரிட்டிஷ் இந்தியாவி லிருந்தும், 93 உறுப்பினர்கள் சிற்றரசுகளி லிருந்தும் தேர்வு செய்யப்பட்டு, 389 பேர் அடங்கிய, இந்திய அரசியல் நிர்ணயசபை உருவாக்கப்பட்டது. இச்சபையின் முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் நாள் நடைபெற்றது. இதில், 211 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஏனெனில், இந்த நிர்ணய சபையை தனி நாடு கோரிக்கையை முன்னிறுத்தி, முஸ்லிம் லீக் முற்றிலுமாக நிராகரித்தது. இந்த நிர்ணய சபையை தலைமை ஏற்று நடத்தியவர், டாக்டர் சச்சிதானந்த சின்கா. ஆனால், அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இந்த அரசியல் நிர்ணய சபையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க 22 குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 10 குழுக்கள் நடைமுறை பற்றி ஆராய்ந்தன. 12 குழுக்கள் அரசியலமைப்பு குறித்து ஆராய்ந்தன. கண்காணிப்பு குழுவின் தலைவராக, கே.என். முன்ஷியும், கொடிக்குழுவின் தலைவராக ஜே.பி.கிருபாளினியும், மத்திய அரசின் அதிகாரம் குறித்த குழுவின் தலைவராக ஜவஹர்லால் நேருவும், மாகாண அரசியலமைப்பு குழுவின் தலைவராக சர்தார் வல்லபாய் படேலும், வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்காரும் செயல் பட்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை நேருவால் உருவாக்கப் பட்டது. தேசிய ஒருமைப்பாடு என்ற கருத்தை கொண்டு வந்தவர் நந்தலால் போஸ். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகள் 11 மாதம் 10 நாட்கள் எடுத்து கொள்ளப்பட்டன. இறுதி செய்யப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், நிர்ணய சபையின் 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் 26.11.1949ல் ஏற்று கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் 14.1.1950 அன்று பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அரசியலமைப்பு சட்டம் 26.1.1950 அன்றே நடைமுறைக்கு வந்தது.
இஸ்ரேல் பாடத்தில் இந்திய ராணுவம்!:
இஸ்ரேல் பாடப்புத்தகங்களில் அந்த நாட்டின் ஹைபா நகரத்துக்கு விடுதலை பெற்றுத்தந்த இந்திய ராணுவத்தின் வீர சாகசங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்ரேலில் உள்ள ஹைபா, சுமார் 402 ஆண்டுகள் துருக்கியர்கள் வசம் இருந்தது. 1918-ம் ஆண்டு முதல் உலகப்போரில் நேசநாட்டு படைகள் சார்பாக, இந்திய படைகள் போரிட்டன. அப்போது ஹைபா நகரத்தை இந்திய குதிரைப்படைப் பிரிவினர் தீரத்துடன் போரிட்டு மீட்டனர். இந்த போரில் உயிர் நீத்த 900-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் கல்லறைகள் இஸ்ரேலில் உள்ளன. இந்திய ராணுவ கேப்டன் அமன் சிங் பகதூர், கேப்டன் அனூப் சிங், தப்தார் ஜோர் சிங், 2-ம் லெப்டினன் ரகத் சிங் ஆகியோர் போரில் சிறப்பாக செயல் பட்டமைக்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். மேஜர் தல்பத் சிங், "ஹைபா வீரர்' (ஹீரோ ஆப் ஹைபா) என சிறப்பிக்கப் பட்டு உள்ளார். ஹைபா நகர மக்களுக்கு இந்த வரலாற்று செய்திகள் தெரியும் என்ற போதும், இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற் காக, பள்ளி பாடப்புத்தகங்களில் இந்த தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹைபா நகர துணை மேயர் "ஹெத்லா அல்மோக் இதுக்குறித்து கூறியது... ஹைபாவின் வரலாறு, புராதனத்தை காக்க இம்முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன' என்கிறார். அதேபோல, ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதி இந்திய ராணுவத்தினரால், ஹைபா தினமாக கொண்டாடப்படுகிறது.
கேட்வே ஆப் இந்தியா!:
நமது குடியரசின் பெருமைமிகு சின்னங்களில் குறிப்பிடத்தக்கது கேட்வே ஆப் இந்தியா. மும்பை காம்தேவி பகுதியில் பழைய கட்டடங்கள் நிறைந்த இடத்தில் ஒரு கட்டடத்தை ஒட்டினால்போல், "கேட்கவே ஆப் இந்தியா' வின் ஒரிஜினல் மினியேச்சர் ஒன்று இடம் பெற்று இருப்பதை இன்றும் காணலாம். அதை அங்கு அமைத்தவர் ராவ்பகதூர் யஷ்வந்த்ராவ் தேசாய். இவர் பொதுப்பணித்துறையில் கிரேடு ஒன் ஓவர்சியராக கன்சல்டிங் ஆர்கிடெக்காக பணியாற்றிய போது இவரது மேற்பார்வையில் தான், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ், ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் பிளாக், ஓல்டு கஸ்டம்ஸ் ஹவுஸ், ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், தி கேட்வே ஆப் இந்தியா ஆகியவை உருவாயின. இவை அனைத்திலும், "கேட்வே ஆப் இந்தியா' இவருக்கு தனி கவுரவத்தையும், பெருமையையும் தேடி தந்தது. 1923-ஆம் ஆண்டு, "கேட்வே ஆப் இந்தியா' கட்டி முடிக்கப்பட்டவுடன் அதே போன்று மினியேச்சர் ஒன்றை தயாரித்து பொது பணித்துறை அலுவலக வளாகத்திற்குள் வைத்தார். தேகாயின் திறமையைப் பாராட்டி, "ராவ் பகதூர்' பட்டமும் வழங்கப்பட்டது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.