அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜன
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

டபுள்ஸ் வில்லேஜ்!


கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் கொடிஞ்சி என்ற கிராமம் உள்ளது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த கிராமத்தில் 270க்கும் மேற்பட்ட இரட்டையர் கள் இருக்கின்றனர். இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 13 ஆயிரம் தான். இவர்களில் 270 பேர் இரட்டையர்கள். ஆயிரம் பேருக்கு 8 இரட்டையர்கள் என்பது இந்தியாவின் சராசரி.
கொடிஞ்சியில் இரட்டையர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட நான்கு மடங்கு அதிகம். இதற்கான காரணங்கள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இதற்கு இப்பகுதியின் சுற்றுச் சூழலை முக்கிய காரணமாக கூறுகின்றனர். இங்கு பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். இங்குள்ள குடும்பங்களில் பலர் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கின்றனர். ஒரு சிலருக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த கிராமத்தில் உள்ள இரட்டையர்களில் பாதிப்பேர் பெண்கள். 2002-ம் ஆண்டு, கொடிஞ்சி கிராமமும் அதன் இரட்டையர்களும் குறித்த தகவல்கள் வெளியே வந்தன. அதுமுதல், தேசிய, சர்வதேச ஊடகங்கள் இந்த கிராமத்திற்கு படையெடுக்கத் தொடங்கின. பள்ளி நேரத்தில் போட்டாவுக்கு போஸ் கொடுக்கச் சொல்வது பெரிய இடைஞ்சலாக மாறியது. இதையே வசூல் முறையாக மாற்றினர். படம் எடுக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றனர். ஒரு இரட்டை ஜோடியை படம் எடுக்க ஆயிரம் ரூபாய் வரை கேட்கின்றனர். இது ஒரு வியாபாரமாகவே அங்கு வளர்ந்துள்ளது. இந்த அளவிற்கு இரட்டையர்கள் இருப்பதற்கான காரணம் என்ன என்ற உண்மை தெரியவில்லை.

பார்வைகள்!


ஆதிமனிதனாக மனிதன் காட்டில் இருந்த காலம் முதல் இன்று வரை ஆண் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு; பெண் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. 10 ஆயிரம் வருடங்களில் டி.என். ஏ.வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. காட்டு மனிதனில் ஆண் என்றால் வேட்டையாடுதல் முக்கிய வேலையாக இருந்தது. பெண்ணுக்கு குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பது முக்கியமானதாக இருந்தது. வேட்டையாடும் போது வேட்டையாடும் விலங்கையும், அது இருக்கும் தூரத்தையும் கணக்கிட்டு, தப்பிக்கவிடாமல் வேட்டை யாடுவது போன்றவை குறித்து தெரிந்து கொள்ள ஆணுக்கு கூர்மையான பார்வை யும், குறி பார்த்து தாக்கும் தன்மையும் இருந்தன.
பெண்களுக்கு குழந்தையை பாதுகாக்கும் போது விலங்குகளால் எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதற்கு ஏற்றார்போல, பெண்களின் பார்வை ஆண்களின் பார்வை போல கூர்மையாக இல்லாமல், ஒரே பார்வையில் அதிகமான பரப்பை பாக்கும் திறன் பெற்றிருந்தனர். பெண்களில் சிலர் 180 டிகிரி கோணத்தில் பார்க்கும் திறன் பெற்றிருந்தனர். ஆண்கள் ஒரு பொருளை வார்த்தைகளை கொண்டு தேடுகின்றனர். அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் தடுமாறுவார்கள். ஆனால், பெண்கள் பார்வை சிக்கலான வடிவங்களை மூளையில் கொண்டு தேடுவதாகவும், அதற்கு ஆஸ்டோஜன் என்ற ஹார்மோன் காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். பெண்களால் பொருட்களை எங்கெங்கு இருக்கின்றன என்றும், ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்றும் ஒரே பார்வையில் அறிந்து கொள்ள முடியுமாம். ஆண்களைப் போன்று திரும்பத்திரும்ப பார்க்க வேண்டியதில்லை. ஆணின் கூர்மை யான பார்வையிலும், பெண்ணின் பரவலான பார்வையிலும் நம்மை-தீமை இரண்டுமே உள்ளன.
ஆண்கள் ஓட்டும் வாகனங்கள் பெரும் பாலும் நேருக்கு நேர் மோதுவது இல்லை. பக்க வாட்டிலேயே அதிகமான விபத்துக்கள் நடக்கும். பெண்களுக்கு பரவலான பார்வை இருப்பதால், பெண்களால் ஏற்படும் விபத்துக்கள் நேருக்கு நேர் மோது வதாகவே இருக்கும். சாலையில் இது பெண்ணுக்கு தீங்காக இருந்தாலும், வீட்டில் சீப்பு, சாவி போன்ற பொருட்களை கண்டுபிடிக்க பெண்களுக்கு உதவுகிறது. இயற்கையின் இந்த உண்மையை ஆண்களும், பெண்களும் அறிய வேண்டும். அவர்கள் தங்களின் இயலாமையை அறிந்து கொண்டு, மற்றவர்களை புரிந்துக்கொண்டால் சின்னச்சின்ன சச்சரவுகளை தவிர்க்கலாம். ஆண், பெண் இருவருக்கும் மனித இனத்தில் பிறந்ததை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை என்பதுதான் விஞ்ஞான வாதம்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!


இது "வெஜிடபிள் கிரீன் கோப்தா பிரியாணி' செய்முறை நேரம்.
தேவையானவை: பிரியாணி அரிசி-250 கிராம். பீன்ஸ், பட்டாணி வெட்டியது-100 கிராம். காரட், பெரிய வெங்காயம் வெட்டியது -1. தக்காளி - 3. புதினா, கொத்த மல்லி- சிறிது, கரம் மசாலாத் தூள்-1 ஸ்பூன். பச்சை மிளகாய், பூண்டு , இஞ்சி அரைத்தது-1 டீஸ்பூன். மிளகாய்த் தூள் - 1/4 ஸ்பூன், முந்திரி பருப்பு -5, நெய்-50 கிராம், தேங்காய்ப்பால் -2 டம்ளர். உப்பு தேவையான அளவு.
கோப்தா செய்வதற்கு:- வெண்ணெய்-100 கிராம், மைதா 100 கிராம், சீஸ் துருவியது- 100 கிராம், தண்ணீர் 100 மி.லி. அரைக்கீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கன்னிக் கீரை சுத்தம் செய்யப்பட்டவை-1 கப், உப்பு-தேவையான அளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-1.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி, அது கொதித்தவுடன், அதில் மைதா போட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டியானவுடன், கீரைகள், பச்சைமிளகாய், உப்பு, துருவிய சீஸ் ஆகியவற்றைப் போட்டு, நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். காப்பர் பாட்டம் குக்கர் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்தவுடன், அதில் அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளி போட்டு அதையும் வதக்கி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் பேஸ்ட் போட்டு வதக்கி, கரம் மசாலா, மிளகாய்த் தூள் போட்டு அத்துடன் காய்கறிகளையும் போட்டு நன்கு கலந்து உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். பின் தேங்காய்ப் பால், தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கொதித்தவுடன் ஊற வைத்து, தண்ணீர் வடித்த அரிசி போட்டு நன்கு வேகவிடவும். தண்ணீர் குறைந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் மூடி வேக விடவும். பின் திறந்து கொத்த மல்லி, புதினா, நெய்யில் வறுத்த முந்திரி, கிரீன் கோப்தா ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்து விட்டுப் பரிமாறலாம். இதில் கீரை, காய்கறி இருப்பதால் சிஸ் மணத்துடன் அதிக சுவையுடனும் இருக்கும். இதில் எல்லாம் அரைத்துச் சேர்த்து இருப்பதால் சாதத்தில் இருந்து எதையும் எடுத்து வைக்காமல் சாப்பிட வசதியாக இருக்கும்.
குறிப்பு: வெந்தயக்கீரை, பசலை என நமக்குத் தேவையான கீரைகளையும் போட்டுக் கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.