பாண்டிய அரசரின் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக நடந்தது. அவரை வாழ்த்துவதற்காக நிறைய புலவர்கள் வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் அவ்வையாரும் இருந்தார்.
அரசரை வாழ்த்த புலவர் ஒருவர் மேடை அருகே சென்றார்.
""அரசே! எல்லா வளமும், நலமும் பெற்றுப் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க,'' என்று வாழ்த்தினார்.
அடுத்த புலவர், ""என்றுமுள தென்தமிழ் போல இளமை குன்றாமல் நிலைத்து வாழ்க,'' என்று வாழ்த்தினார்.
இப்படியே, ஒவ்வொரு புலவராக அரசரை வாழ்த்தினர்.
அவ்வையாரும் மேடை அருகே சென்றார்.
""வரப்பு உயர...'' என்று அரசரை வாழ்த்தினார்.
அங்கிருந்த புலவர்கள் அவர் வாழ்த்தியதன் பொருள் புரியவில்லை.
தெளிவு பெற நினைத்த அவர்கள், ""அவ்வையாரே! "வரப்பு உயர' என்று அரசரை வாழ்த்தினீர்களே... அதன் பொருள் என்ன?'' என்று கேட்டனர்.
""புலவர்களே! வரப்பு உயர்ந்தால், தண்ணீர் உயரும்; தண்ணீர் உயர்ந்தால், நெல் விளைச்சல் உயரும்; நெல் விளைச்சல் உயர்ந்தால், மக்கள் வளமாக வாழ்வார்கள். மக்கள் வளமாக வாழ்ந்தால் அரசர் பெருமை பெறுவார். அதனால்தான் அப்படி வாழ்த்தினேன்,'' என்று விளக்கம் தந்தார்.
இதைக் கேட்ட அவர்கள் அவ்வையாரின் புலமைத் திறத்தைப் பாராட்டினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.