உயிருள்ள மீன்களை பிடிக்கும் தூண்டில் கயிறு ஒன்று இருக்கிறது. இது ஒரு வகைப் புழு. இதற்கு "நெமர்டினியா' என்று விஞ்ஞானப் பெயர். மண் புழுவைப் போல, கடற்கரைகளில், ஈரமான பாறைகளுக்கு அடியில், இத்தகைய புழுக்களைக் காணலாம். இது 90 அடி நீளம் வரை வளரக் கூடியது. இது சுருண்டு ஒன்று கூடி இருப்பதைப் பார்த்தால், மாமிசத் துண்டு போல இருக்கும். இதை எடுத்து தொட்டில் நீரில் போட்டால், நெளிந்து, நெளிந்து அசைவது உங்கள் வீட்டில் அக்வேரியம் வைத்துள்ளது போல இருக்கும். இந்தப் புழுவை மீன்கள் தீண்டுவதில்லை. மீன்களைச் சாப்பிட இந்தப் புழு தேடிச் செல்கிறது. நீண்ட கயிறு போன்ற இது, தன் வாயினால் மீனின் உடலில் ஒட்டிக் கொண்டு, சுற்றிக் கொள்ளுகிறது. இதனிடமிருந்து விடுபட முயற்சி செய்து முடியாமல் சோர்ந்து போய்விட்ட மீனை, பிறகு உணவாக உட்கொள்ளுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.