இந்தியாவை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் ஆசை ஆங்கிலேயர்களுக்கு எப்படி, வந்தது தெரியுமா?
ஐரோப்பியர் வாஸ்கோட காமா, கடற்பயணமாக புறப்பட்டு 1498ம் ஆண்டு, மே 20ம் நாள் இந்தியாவின் கள்ளிக்கோட்டை பகுதியை வந்தடைந்தார்.
அன்று முதல் ஐரோப்பியர்கள் இந்தியாவில் வணிகம் செய்ய தொடங்கினர். இங்குள்ள ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை பொருட்கள் அவர்களை கவர போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள் பெரும் வணிகத்தலமாக இந்தியாவை பயன்படுத்தி கொண்டனர்.
அவர்கள் கொள்ளை லாபம் ஈட்டியதை கண்ட ஆங்கிலேயர்களுக்கும் இந்தியாவின் மீது ஆசை வந்தது.
220 ஆங்கில வணிகர்கள் சேர்ந்து, "கிழக்கு இந்திய குழுமம்' நிறுவி எலிசபெத் ராணியிடம் இந்தியாவில் வணிகம் தொடங்க அனுமதி பெற்றனர்.
அப்போது டெல்லியை ஆண்ட ஜகாங்கீர் மாமன்னரிடம் உத்தரவு பெற்று 1612-ல் சூரத்தில் ஆங்கிலேயர்கள் வணிகத்தை தொடங்கினர். இங்கிருந்த ஜாதி சமயப் பிரிவுகள் நம்மை எளிதாக பிரித்தாள வழி செய்தது.ஆயுத பலக் குறைவும் ஆங்கிலேயர் களுக்கு ஆசையை அதிகமாக்கியது. அந்த ஆசையே பேராசையாகி அடிமைப்படுத்த துணிந்தனர்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.