விஷ்ணுவை பூஜியுங்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:00

மனிதர்கள், சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு, மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய, பல மார்க்கங்களை கூறியுள்ளனர் மகான்கள். இதில் தெய்வ பக்தி, வழிபாடு, புராணங்களை படிப்பது, கேட்பது போன்றவைகளும் அடங்கும். இதெல்லாம் மோட்சத்துக்கு சுகமான பாதைகள். இதில், விஷ்ணு பக்தி வழிபாடுகளின் விசேஷங்களை பற்றி நாரதர் கூறுகிறார்:
பக்தியுடன் விஷ்ணு கோவிலுக்குள் புகுபவன், மீண்டும் ஒரு தாயின் வயிறு என்ற சிறைக்குள் புக மாட்டான். எப்போது ஒருவன் துளசி தளத்தையோ, கொஞ்சம் தீர்த்தத்தையோ விஷ்ணுவுக்கு அளிக்கிறானோ, அப்போதே சந்தோஷத்தால் மயங்கி, தன்னையே கொடுத்து விடுகிறார் அந்த ஹரி.
எவன் நல்ல ஜோதியுள்ள தீபத்தை ஏற்றி, ஒளியை காண்பிக்கிறானோ, அவனுடைய பாவத்தையும், அஞ்ஞானத்தையும் போக்கி, ஞானமென்ற ஐஸ்வர்யத்தை கொடுக்கிறான் இறைவன். பிரகாசமான நீராஞ்சனம் செய்யும் பக்தன், தன் அஞ் ஞான இருளைப் போக்கிக் கொள்வதுடன், ஜனன, மரண அவஸ்தைகளினின்றும் விடுபடுகிறான்.
பக்தி ரசத்தில் நனைந்து, ஏதாவதொரு அல்ப நைவேத்யத்தைக் கொடுத்தாலும், அந்த லட்சுமிகாந்தன் சீக்கிரம் ஆத்மானந்தத்தை அனுபவிக்கச் செய்கிறான். ஆத்மானந்தம் என்பது உள்ளுக்குள்ளே ஏற்படும் பரமானந்த நிலை; சரீர ஆனந்தமல்ல!
விஷ்ணுவின் பிரதிமையை சுற்றி சுற்றி வருபவன், அவர் அருகிலேயே தான், சுற்றி சுற்றி வருவான். மறுபடியும் சம்சார சக்கரத்தில் அகப்பட்டு,
சுற்றி சுற்றி வருவதில்லை! விஷ்ணுவிற்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதால், செய்தவனின் பாவங்கள் முழுவதுமாக கீழே விழுந்து விடுகிறது; அவை, மீண்டும் மேலே கிளம்புவதில்லை. நர்த்தனம் செய்வதால் அவனிடமுள்ள பாவங்கள் பொல பொலவென உதிர்ந்து போகிறது. விஷ்ணுவை நன்றாக அலங்கரித்து அர்ச்சிக்கும் பக்தன், விஷ்ணு லோகத்தில் நன்கு அலங்கரிக் கப்பட்டு, உபசரிக்கப்பட்டு, தேவர்களால் கொண்டாடப்படுகிறான். நாராயணனை மனமாற துதிப்பவன், பிரம்மாதி தேவர்களுக்கும் கிடைக்காத கருணையை பெறுகிறான். துதிப்பவன் எப்படி துதித்தாலும், அவன் சந்தோஷப் படுகிறான்.
அவனது நாமாக்களையோ, அவனது லீலைகளையோ, அவனது சரித்திரத்தையோ சொல்பவர்களை அவன் காத்து ரட்சிக்கிறான்; இதில், சந்தேகமில்லை. எவன் ஹரி கீர்த்தனம் செய்கிறானோ, அவனது பாவத்தையெல்லாம் நெருப்பு, குப்பையை அழிப்பது போல் அழித்து விடுகிறான் அந்த ஹரி. ஹரி கீர்த்தனம் செய்யும் நாக்கு அவனை காக்கிறது என்பதல்ல; அதை கேட்கும் மற்றெல்லாரையும் காக்கிறது. பகவானுடைய அவதாரங்களைப் பாடி, பக்தன் விடும் ஆனந்தக் கண்ணீர், ஊரெங்கும், நாடெங்கும் பிரவகித்து, சுபிட்சம் ஏற்படுத்துகிறது.
சாலக்ராமத்தில் சந்நித்யம் கொண்ட விஷ்ணுவுக்கு, நைவேத்யம் செய்ததை புசிப்பது, ஸ்ரீபாத தீர்த்தத்தை குடிப்பது, நிர்மால்யத்தை தரிசிப்பது, இவை ஒவ்வொன்றும் தனித்தனியே பக்தனின் பாவங்களைப் போக்கி விடுகிறது. விஷ்ணுவின் பாத தீர்த்தம் அவ்வளவு மகிமை வாய்ந்தது. ஏதாவதொரு விதத்தில் நாம், அவனது அருளைப் பெற்று, நலம் பெற வேண்டும். ***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!


* பண்பாடு என்றால் என்ன?
அது ஒரு பகாப்பதம் என்றே நான் கருதுகிறேன். பகுத்துப் பார்க்கலாம். ஒழுங்காகப் பாடப்படுவது, "பண்'; ஒழுங்கு முறை தவறாமல் இருப்பது, "பண்பாடு!'
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.