அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:00

* கே.நடராஜன், விளாங்குடி: யாரைக் கண்டால் உங்களுக்கு பயம்?
என் நேரத்தை விரயம் செய்யும் ரம்பத்துடன் வருபவரை கண்டால்; சில நேரங்களில், இவர்கள் தவிர்க்க இயலாதவர்களாகவும் இருந்து விடுகின்றனர்.
***

* ஆர்.தங்கமணி, சென்னை : அரசு மதுக்கடைகளில் விற்கப்படும், "உற்சாக பானங்களின்' சுவை, மணம், தரம் எப்படி உள்ளது? லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லவும்!
அவரிடம் கேட்பதில், "நோ-யூஸ்' - பயன் இல்லை. அவர் ஸ்காட்லாந்து, "சரக்கான' ஜானிவாக்கர் - பிளாக் லேபில் பிரியர்... அதைத் தவிர, மற்ற உ.பா.,களைத் தொடுவதில்லை. நம்மூர் சரக்கு நன்றாகவே இருப்பதாக, "குடிமகன்'கள் சொல்கின்றனர்!
***

** ஆர்.ஜெகந்நாதன், திருவாரூர்: மன அமைதியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்; மன அமைதிக்கு வழி கூறுங்களேன்...
உங்களது கையெழுத்தையும், படிப்பையும் பார்க்கும் போது, பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் என்று தோன்றுகிறது. பணிபுரியும் போது, "ஹாபி' எதையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளாததே, இன்றைய இந்த நிலைக்குக் காரணம்! போகட்டும்... சுற்றி நடப்பவை பற்றி மறந்து விடுங்கள்! இறை நம்பிக்கை உடையவர் என்றால், ஷேத்திராடனம், கோவில், குளம், உபன்யாசம் என மனதைத் திருப்புங்கள் அல்லது இலவச, "டியூஷன்' எடுங்கள் அல்லது நூலகமே கதி என மாற்றிக் கொள்ளுங்கள்... மன அமைதி கிடைக்கும்!
***

*க.நிர்மலா, அஸ்தினாபுரம்: வீட்டு செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, உம்மணா மூஞ்சியாக சில ஆண்கள் இருக்கின்றனரே...
குடும்பத்தைத் தவிர, தம்பதியருக்குள் காமன் சப்ஜெக்ட் ஏதும் இல்லாமல் போவதுதான் இதற்கு காரணம். இப்படி இருக்கும் கணவனையோ, மனைவியையோ, ஆன்மிகம், சினிமா, பத்திரிகை என ஏதாவது ஒரு சப்ஜெக்டுக்கு இழுத்து, பேச, விவாதிக்க ஆரம்பித்தால், இக்குறை தீர்ந்து விடும்.
***

** பி.கோபாலகிருஷ்ணன், திருவண்ணாமலை: பணம் தண்ணீராக செலவழிகிறது; சேமிக்க முடியவில்லை. சேமிக்க நல்ல யோசனை கூறுங்களேன்...
சம்பள கவர் கைக்கு வந்ததும், குறிப்பிட்ட சதவீதத்தை வங்கியில் போட்டு விடுங்கள். ஆடம்பர, மிக மிக அவசியம் என்றில்லாத பொருட்களை, 20ம் தேதிக்கு பின் வாங்கிக் கொள்ளலாம் என தீர்மானித்துக் கொள்ளுங்கள். (20ம் தேதிக்கு பிறகு கையில் காசு இருக்காது.) வெளியில் செல்லும் போது, பஸ் செலவுக்கு மட்டும் பர்சில் காசை வைத்துக் கொள்ளுங்கள்! சேவிங்க்ஸ் அக்கவுன்ட், "செக் புக்' வங்கியில் தந்தால், எல்லா லீப்களிலும் "கேன்சல்ட்' என, இரட்டை கோடு போட்டு எழுதி விடுங்கள். வங்கியில் பணம் செலுத்தச் செல்லும் போது, "வித்ட்ராயல் சிலிப்' இருக்கும் பக்கம் திரும்பியே பார்க்காதீர்கள்.
- இரண்டு மாதம் முயன்று, பலனை எழுதுங்களேன்!
***

* த.செல்வகுமாரி, தாம்பரம் : திருமணமான என் நண்பர் ஒருவர், தன்னை நிறைய பெண்கள் விரும்பினார்கள் என்று என்னிடம் அடிக்கடி கூறி வருகிறார். இது எதற்கு?
பார்ட்டி படியுமா, படியாதா என, உங்களிடம் நூல் விட்டுப் பார்க்கிறார் மேடம்; ஜாக்கிரதையாக இருங்கள் அந்த ஆளிடம். அவரை, நண்பராக இனியும் கருத வேண்டுமா என நன்கு யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள்!
***

** அ.சுதர்சன்பாபு, திருவல்லிக்கேணி: சுய தொழில் மூலம் போதுமான அளவு சம்பாதிக்கிறேன். கை நிறைய சம்பளமும், பதவியும் தருவதாக தனியார் நிறுவனம் ஒன்றில் அழைக்கின்றனர்... போகலாமா?
வேண்டாம்! இப்போதே போதுமான அளவு சம்பாதிப்பதாக கூறுகிறீர்கள்! "கை நிறைய' வேண்டும் என்பதற்காக, தங்க முட்டை போடத் தயாராகி வரும் "பொன் வாத்தை' இன்றே கொன்று விடாதீர்கள்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.