நீண்ட இடைவெளிக்கு பின், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் படம், மனிதனாக இரு. இப்படத்துக்காக, இன்றைய புதிய ஸ்டைலில் மொத்தம், 19 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் அவர். மேலும், இப்படத்தில், "உலகம் பிறந்தது எனக்காக' என்ற பாடலை, பிரபல பின்னணி பாடகரான, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பாட வைத்துள்ளார். — சினிமா பொன்னையா
கோலிவுட்டுக்கு வரும் தீஷா சேத்!
ராஜபாட்டை படத்தை அதிகமாக எதிர்பார்த்தவர் தீஷாசேத். ஆனால், படம் தோல்வி அடைந்து, பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதால், இப்போது கோலிவுட் பக்கம் தலைகாட்டவே பயப்படுகிறார். ஆனால், அப்பட நாயகன் விக்ரமோ, மீண்டும் தமிழுக்கு வருமாறு தீஷாவை அழைத்து வருவதோடு, சிபாரிசு செய்வதாகவும் கூறுகிறார். அதனால், தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் தீஷா சேத், விரைவில் கோலிவுட்டுக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல்! — எலீசா
பாடி லாங்குவேஜை மாற்றும் கவுதம்!
மணிரத்னத்தின், கடல் படத்தில் நடித்துள்ள கார்த்திக் மகன் கவுதமை வைத்து படம் இயக்க, பல இயக்குனர்கள் சுற்றி வந்தனர். ஆனால், கடல் வெளியான பிறகே, கதை கேட்பேன் என்று தட்டிக்கழித்து வந்த கார்த்திக், இப்போது சத்தமில்லாமல் பிரபு சாலமனிடம் கதை கேட்டு, அவர் படத்தை ஓ.கே., செய்து விட்டார். அதனால், கடல் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், அடுத்த படத்திற்கு தன் பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல் ஆகியவற்றை மாற்றிக் கொண்டிருக்கிறார் கவுதம். — சி.பொ.,
பாலிவுட்டில் துபாய் நடிகை!
அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் என, பல கான் நடிகர்கள் இருக்கும் இந்தி சினிமாவிற்குள், இன்னொரு கானும் களமிறங்கி உள்ளார். ஆனால், இவர் நடிகர் அல்ல; நடிகை. துபாய் நாட்டை சேர்ந்த சாய்ரா கான் தான் அவர். தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற இந்தி படத்தில் அறிமுகமாகும் இந்த சாய்ரா கானுக்கு, தென்னிந்திய சினிமாவிலும் நடிக்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளதாம். அதனால், அதற்கான முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளார். ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்! — எலீசா
இமேஜை உடைக்கும் சித்தார்த்!
பாய்ஸ் சித்தார்த், தற்போது தமிழில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருப்பவர், இந்த இரண்டு படங்களிலுமே, தனக்கு மெச்சூரிட்டியான வேடங்கள் என்கிறார். "தமிழைப் பொறுத்தவரை, இன்னமும் சாக்லேட் ஹீரோ இமேஜ்தான் எனக்கு உள்ளது. ஆனால், வர இருக்கிற புதிய படங்கள், அந்த இமேஜை உடைத்து, அடுத்தடுத்து ஆக்ஷன் கதைகளிலுமே நடிப்பதற்கு வழிவகுக்கும்...' என்கிறார். — சி.பொ.,
ஸ்ருதிஹாசன் படக்கூலி எகிறியது!
தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த, கப்பார்சிங் படம் வெற்றி பெற்றதையடுத்து, தன் படக்கூலியை, ஒரு கோடியாக உயர்த்தி விட்டார். ஆனால், 60 லட்சம் ரூபாய் மட்டுமே தருவதாக படாதிபதிகள் பிடிவாதம் செய்ததால், அதே தொகை தருவதாக தனக்கு அழைப்பு விடுத்த இந்தி படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்ட ஸ்ருதிஹாசன், இனி இந்தி படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளார். ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி! — எலீசா
தில்லான லட்சுமி மேனன்!
சுந்தர பாண்டியன் படத்தை தொடர்ந்து, குட்டிப்புலி படத்திலும் சசிகுமாருடன், லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்திருப்பதால், அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஆனால், லட்சுமி மேனனோ அதை பற்றி துளியும் கவலைப்படவில்லை. "என்னைப் பற்றி கிசுகிசு வருகிறது என்றால், நான் வளர்கிறேன் என்று அர்த்தம். அதனால், இன்னும் கிசுகிசுக்களை நான் எதிர்பார்க்கிறேன்...' என்று தில்லாக சொல்கிறார். அன்று கண்டதை அடுப்பில் போட்டு, ஆக்கின பானையைத் தோளில் போட்டுத் திரிகிறது போல! — எலீசா
மாணவியரை தத்தெடுத்த ஜீவா!
தன் சமீபத்திய பிறந்த நாளின்போது, 200 ஏழைப் பெண்களுக்கு, இலவச சேலை மற்றும் அரிசி வழங்கியுள்ளார் நடிகர் ஜீவா. இது போன்று, தொடர்ந்து சமூக சேவை செய்வதில் தனக்கு ஆர்வம் உள்ளதாக சொல்லும் ஜீவா, காஞ்சிபுரத்தில் இரண்டு ஏழை மாணவியரை தத்தெடுத்து படிக்க வைத்து வருவதாகவும் சொல்கிறார். — சி.பொ.,
தடாலடியாக மறுக்கும் சந்தானம்!
சந்தானம் இல்லாத கல்யாண வீடும் இல்லை. சந்தானம் இல்லாத தமிழ் சினிமாவும் இல்லை என்கிற அளவுக்கு, அனைத்து காமெடியன்களையும் ஓரங்கட்டி விட்டு, பெரும்பாலான முன்னணி ஹீரோக்களின் படங்களில் இடம் பெற்று வருகிறார் சந்தானம். இந்த நேரத்தில், அவரையும் முழுநேர ஹீரோவாக்கி விட வேண்டும் என்ற முயற்சிகளும் நடக்கிறது. ஆனால், சந்தானமோ, "கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தது போல், மூன்று ஹீரோ கதையில் என்றால் நடிப்பேன். ஆனால், சோலோ ஹீரோவாக ஒரு நாளும் நடிக்க மாட்டேன்...' என்று தடாலடியாக மறுத்து விட்டார். — சினிமா பொன்னையா
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.