வாழும் இன்னொரு அன்னை தெரசா!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:00

பெங்களூரு புறநகர் ரயில் நிலையம் — நிலையத்தின் படிக்கட்டை ஒட்டி, நிரம்பி வழிந்த நிலையில், ஒரு குப்பைத்தொட்டி. அதனருகே சாப்பிட்டு, பல நாளானதன் காரணமாக, ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்தபடி, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு, உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.
இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள், "உச்' கொட்டி பரிதாபப்பட்டதோடு சரி, யாரும் பக்கத்தில் போகவில்லை. முதல் காரணம், அவசரம். முக்கிய காரணம், இளைஞனின் உடம்பை உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு.
இந்த நேரம், ரயிலில் இருந்து இறங்கிய முதுமையான தோற்றம் கொண்ட கிறித்தவ சகோதரி ஒருவர், இளைஞனை பார்த்த மாத்திரத்தில், தன் வயதையும் பொருட்படுத்தாமல், ஓடோடிப்போய், "மை சன்' என்று தூக்கி, தன் மடியில் கிடத்திக் கொண்டார். பிறகு பையில் இருந்த உணவை ஊட்டிவிட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, தலையைக் கோதியபடி, "யாரப்பா நீ?' என்று விசாரித்தார்.
கர்நாடக மாநிலம், மதுரகிரியில் பிறந்த, தன் பெயர் ரமேஷ் பாபு என்பதும், தனக்கு தொழுநோய் என்று தெரிந்த உடன், பெற்றோரே வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் அழுது கொண்டே தெரிவித்தார்.
இவருக்கு வீட்டில் துவங்கிய துரத்தல், எல்லா பக்கமும் தொடர்ந்தது; தொழுநோயும் வளர்ந்தது.
ஒரு கட்டத்தில், நடமாட முடியாத நிலையில், இந்த ரயில் நிலையத்தின் மூலையில் தற்போது தஞ்சம் அடைந்துள்ள ரமேஷ்பாபு, பெற்ற தாய் கூட தொடத் தயங்கி, துரத்திவிட்ட தன்னை, தூக்கி மடியில் கிடத்தி, உணவு ஊட்டிய கருணை தெய்வத்தின் கைகளை பிடித்து கதறி அழுதார்.
"நான் வந்துட்டேன்ல, இனி அழக்கூடாது...' என்று கூறிய சகோதரி, உடனே எங்கேயோ போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாகனம் வர, இருவரும் அதில் பயணப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு பிறகு...
இப்போது ரமேஷ் பாபு பெங்களூரு மாநகராட்சியில், சுறுசுறுப்பாக பணியாற்றும் உதவியாளர். "ரமேஷ்... ரமேஷ்' என்று அலுவலகமே கூப்பிடுகிறது; கொஞ்சுகிறது.
"ஒரு காலத்தில், எனக்கு தொழுநோய் இருந்தது என்பதை இப்போது என்னாலயே நம்ப முடியவில்லை. தொழு நோய் முற்றிலும் குணமாகி, மனைவி குழந்தைகள், சொந்த வீடு என்று சந்தோஷமாக இருக்கிறேன்...' என்கிறார் ரமேஷ்.
இந்த அதிசயம் எப்படி நடந்தது?
பெங்களூரு பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளி; இங்கு அரசின் வேண்டுகோளுக்கிணங்க, தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறித்தவ தொண்டு நிறுவனத்தால், 77ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழு நோய் இல்லம் தயாராகி விட்டது. தொழு நோயாளிகளும் வந்து விட்டனர். ஆனால், அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான சகோதரி தேவைப்பட்டார். மாநிலம் முழுவதும் உள்ள சகோதரிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடப்பட்டது.
அப்போது சிக்மகளூரில் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும், இந்த வேண்டுகோள் கடிதம் கிடைத்தது. அடுத்த நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு, இந்த தொழுநோய் இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்தார். இல்லையில்லை அர்ப்பணித்துக் கொண்டார் .
அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட, 36 வருடங்களாக இந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி.
இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளை, சரியான மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்துவதும், குணமான அவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர் களுக்கு சிறு கடைகள் அமைத்து கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார். பின், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விடுகிறார்.
இப்போது ஐநூறு பேர், பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கின்றனர், அந்த 500 பேரில், ஒருவர்தான் ரமேஷ் பாபு, 800 பேர் வரை முழுமை யாக குணமாகி, அரசு கொடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அத்தனை பேர் வீட்டு பூஜை அறைகளிலும், தவறாமல் சிஸ்டர் மேரியின் படம் இடம் பெற்றிருக்கிறது.
இப்போது, 75 வயதாகும் மேரிக்கு, பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக் கொண்டன. அவரை பொறுத்தவரை, "அம்மா, நான் இப்ப நல்லா இருக்கேம்மா...' என்று கைபிடித்து பேசும் முன்னாள் தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது.
பெங்களூரில் வாழும் அன்னை தெரசாவாக வலம்வரும் சகோதரி மேரியை, வாழ்த்த வயதும், தகுதியும் இல்லாததால் வணங்குவோம்.
***

எல். அற்புதராஜ்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இலக்ஷ்மணகுமார் r - Delhi,இந்தியா
02-பிப்-201312:51:12 IST Report Abuse
இலக்ஷ்மணகுமார் r அன்பர்களே... எனக்கும் இதுபோல சேவைகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக உள்ளது. பணி சுமை & நேரமின்மை காரணமாக இயலவில்லை. நான் டெல்லியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.. உங்களுக்கு தெரிந்த சேவை இல்லம் இங்கு எதாவது இருந்தால் தெரியபடுத்துங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Ramu Gopalakrishnan - Chennai,இந்தியா
30-ஜன-201312:33:02 IST Report Abuse
Ramu Gopalakrishnan சகோதரி மேரியை நினைக்கும்போழ்து கண்ணில் கண்ணீர் வருகிறது. அவர்களது தொண்டுக்கு நான் தலை வணங்குகிறேன் .
Rate this:
Share this comment
Cancel
Ajanthaa rani - Coimbatore,இந்தியா
30-ஜன-201311:48:43 IST Report Abuse
Ajanthaa rani தங்களைப் பாராட்டும் வயதும் தகுதியும் எனக்கில்லை அம்மா தெய்வ வடிவில் மனித உருவம் பல்லாண்டு நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
28-ஜன-201312:59:32 IST Report Abuse
anandhaprasadh தங்களைப் பாராட்டும் வயதும் தகுதியும் எனக்கில்லை அம்மா... இருகரம் கூப்பி வாழும் தெய்வம் உங்களை வணங்குகிறேன்... ஆண்டவன் கட்டளை படத்தில் வரும் "ஆறு மனமே ஆறு" என்ற அற்புதப்பாடலின் இரு வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன... "ஆசை கோபம் களவு கொள்பவன் மனித வடிவில் மிருகம்... அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்"... நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்...
Rate this:
Share this comment
Cancel
Poornima - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-201308:52:32 IST Report Abuse
Poornima மனது உருகி விட்டது. கண்களும் கலங்கி விட்டது. மேரி என்னும் பெயர் கொண்ட இந்த தெய்வத்திற்கு தாழ்மையான வணக்கங்கள்
Rate this:
Share this comment
Cancel
Murugavel G - Coimbatore,இந்தியா
27-ஜன-201314:24:40 IST Report Abuse
Murugavel G நன்றி அம்மா
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
27-ஜன-201303:19:28 IST Report Abuse
GOWSALYA வாழ்த்து சொல்லும் தகுதி எங்களுக்கு இல்லை. சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.நன்றி அம்மா.....
Rate this:
Share this comment
Cancel
Edwin Xavier - Palembang,ஐஸ்லாந்து
27-ஜன-201302:55:21 IST Report Abuse
Edwin Xavier It is good news. Thank you sister. God sent you for serve this poors. Edwin, Indonesia
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.