வாழ்ந்து காட்டுவதே காதல்!
* அன்பை
ஆராதிக்கிற காதல்
ஒரு போதும்
உயிர் பலியை
கேட்பதும் இல்லை
ஏற்பதும் இல்லை!
* அகிம்சையை
நேசிக்கிற காதல்
மரணத்தையா
ருசிக்கக் கேட்கிறது!
* துயரத்தில் ஆழ்த்தி
நெஞ்சத்தை
கனக்கச் செய்கிற
அவ்வப்போது நிகழும்
காதல் தற்கொலைகள்!
* வாழ்க்கையை
வாழாமல்
சாகும் கோழைகளை
காதலே
சபிக்கும்!
* காதல் மட்டும்தான்
வாழ்க்கையா?
காதல் முடிந்து போனால்
வாழ்க்கையே
முடிந்து போகிறதா?
* சாவதில் இல்லை...
சவால்களையும்
எதிர்ப்புகளையும் மீறி
வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது
காதலின் பெருமை!
* ஒவ்வொரு
காதல் தற்கொலைகளின் போதும்
தலைகுனிகிறது
காதல்!
* காதல்
உயர்வானதுதான்
பெருமைக்குரியதும்
புனிதமானதும்தான் -
வாழ்ந்து காட்டுகிற போது!
— செந்தலை நெப்போலியன், மண்ணூர்பேட்டை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காதல்,உயர்வானதுதான்,பெருமைக்குரியதும்,புனிதமானதும்தான்-வாழ்ந்து காட்டுகிற போது
காதலித்தவருடன் வாழ்ந்து காட்டுகிற போதா ? இல்லை யாருடனேனும், எப்படியேனும் , வாழ்ந்து காட்டுகிற போதா ? அதற்காகக் காதலில் தோல்வி கண்டவர்கள் வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்ளக் கூடாது என்று நான்
சொல்லவில்லை .அது தான் காதலுக்குப் பெருமை என்று சொல்லுவதைத் தான் ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் .காதலின் புனிதத்திற்குத் தாங்கள் தகுதியுடையவர்கள் இல்லை என்று ஒப்புக்கொண்டு வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்கிறேன் .அவ்வாறு ஒப்புக்கொள்ளுவதில் கௌரவக் குறைவு ஏதுமில்லை. இந்த உலகில் எல்லோருக்கும் அவரவர்கள் மனம் விரும்பும் எல்லாவற்றுக்கும் தகுதியுடையவர்களாக ஆகி விட முடிவதில்லை இதை ஒப்புக்கொள்ளுவதில் கௌரவக் குறைச்சல் ஏதும் இல்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.