பிரிட்டன் தலைநகரான லண்டனில், ஒரு புதுமையான, பிசினசை துவக்கியுள்ளனர். "வாங்க... கட்டிப் பிடிக்கலாம்!'என்ற தலைப்பில், மாதத்துக்கு இரண்டு முறை, ஞாயிற்று கிழமைகளில், ஒரு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முகாமும், நான்கு மணி நேரம் நடக்கும். இதில் பங்கேற்க நபர் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முழுமையாக குளிரூட்டப்பட்ட அறையில், படுக்கைகள், குஷன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். முகாமில் பங்கேற்கும் அனைவரும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியபடி, நான்கு மணி நேரம் படுத்திருக்க வேண்டியது தான்.
இந்த முகாமில் பங்கேற்பதற்கு, சில நிபந்தனைகளும் உள்ளன. பங்கேற்கும் அனைவரும், கட்டாயமாக உடை அணிந்திருக்க வேண்டும்; எந்த காரணத்தை கொண்டும், முத்தம் கொடுப்பது, சில்மிஷம் செய்வது என, எல்லை மீறக் கூடாது.
இதையும் மீறி, சேட்டை செய்தால், காலில் லாடம் கட்டி, மாமியார் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவர். "தொடர்ச்சியான பணிச் சுமைகளால், மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவோருக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில், ஒரு சமூக சேவையாகத்தான், இந்த முகாம் களை நடத்துகிறோம்...' என்கின்றனர், நிர்வாகிகள்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.