வயிறு உப்பி, "தொளதொள'வென இருப்பது, கோளாறு அல்ல!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:00

மாதக்கணக்கில், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு சத்தால் தொப்பை ஏற்படுகிறது. இதை, சில மணி நேரத்திலேயே கரைக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி போன்றவற்றால், சிறிது சிறிதாக தொப்பையை கரைப்பதே நல்லது.

ஒருவருக்கு, வயிற்றில் புண் இருந்தால் தான், அடிக்கடி வாய்ப்புண் வருமா? வாய் துர்நாற்றம் வீசுவதற்கு, வயிறு கோளாறு காரணமா?
ஒருவருக்கு, வாய்ப்புண் வருவதற்கு, விட்டமின், "பி' பற்றாக்குறை தான் முக்கிய காரணம். வாய்ப்புண்ணுடன், வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, எடைக் குறைவுபோன்ற பிரச்னைகள் இருந்தால், அவருக்கு, வயிற்றில் புண் இருக்கலாம். வயிற்றில் புண் இருந்தால் தான், வாய்ப்புண் வரும் என்பது தவறு. பல், ஈறுகளில் ஏற்படும் தொற்றினால், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

"சிசேரியன்' மூலம் குழந்தை பெறும் பெண்களில் சிலருக்கு, பிரசவத்திற்கு பின், வயிற்றுக்குள் நீர் சேர்ந்தது போல், வயிறு உப்பி, "தொளதொள'வென இருக்க என்ன காரணம்?
"சிசேரியன்' பிரசவத்திற்கும், வயிறு உப்புவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில பெண்களுக்கு, இயற்கையாகவே, வயிற்றின் சுவர் பகுதி, பலவீனமாக இருக்கலாம். இக்குறை பெரும்பாலும், பிரசவத்திற்கு பின் வெளிப்படுவதால், இவ்வாறு எண்ண தோன்றுகிறது. பெண்கள், பிரசவத்திற்கு பிந்தைய உடற்பயிற்சிகளை முறையாக மேற்கொள்வதால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம். இதற்கென, அறுவை சிகிச்சைகளும் உள்ளன.

திருமணம் செய்த புதிதில், சில ஆண்களுக்கு, திடீரென தொப்பை விழுகிறதே?
அளவிற்கு அதிகமாக உணவு உட்கொண்டு, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பதாலோ அல்லது குறைவான உடற்பயிற்சி செய்வதாலோ தொப்பை விழுகிறது. திருமணம் ஆன புதிதில், உறவினர்கள் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதுடன், ருசியான வீட்டு சாப்பாடு கிடைப்பதால், ஆண்கள், வழக்கத்தை விட சற்று அதிகம் உண்பது இயல்பே. அதற்கேற்ப உடற்பயிற்சிகளை
மேற்கொண்டால், "புதுமாப்பிள்ளை'கள் தொப்பை பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.

சில மணி நேரத்திலேயே, தொப்பையை கரைப்பதாக விளம்பரம் செய்யப்படும், நவீன உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தலாமா?
மாதக்கணக்கில், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு சத்தால் தொப்பை ஏற்படுகிறது. இதை, சில மணி நேரத்திலேயே கரைக்க வேண்டிய அவசியம் இல்லை. முறையான, உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி போன்றவற்றால், சிறிது சிறிதாக தொப்பையை கரைப்பதே நல்லது.

சிலருக்கு, ஒவ்வொரு முறை உணவு அருந்தியதும், மலம் செல்லும் பிரச்னை உள்ளதே?
பெருங்குடலில் ஏற்படும் தொற்றால், "அமீபியாசிஸ்' எனும் நோய் உண்டாகிறது. இதுவே, மல பிரச்னைக்கு முக்கிய காரணம். மல பரிசோதனையில், இந்நோயை உறுதி செய்து, உரிய சிகிச்சை மேற்கொண்டால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

இரைப்பை புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன?
தமிழகத்தில், புற்றுநோய்களால் பாதிக்கப்படுவோரில், 10 முதல் 20 சதவீதம் பேருக்கு, இரைப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. புகைபிடிப்பது, புகையிலை பொருட்களை உட்கொள்வது, அளவிற்கு அதிகமாக வறுத்த உணவுகளை உண்பது, "எச் - பைலோரி' எனும் பாக்டீரியா தொற்று ஆகியவற்றால், இரைப்பை புற்றுநோய் உண்டாகிறது.

டாக்டர்ஜீவன்குமார்,
குடல் மருத்துவ நிபுணர்,
அரசு புறநகர் மருத்துவமனை, அண்ணாநகர்,
சென்னை. 93810 10088

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.