"இன்ஹேலர்' பயன்படுத்தினால் இருதய நோயா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:00

நான் இன்ஹேலரை தொடர்ந்து ஆறுமாதங்களாக பயன்படுத்துகிறேன். இதனால் இருதயத்தில் பாதிப்பு ஏற்படும் என, கூறுகின்றனர். இது உண்மையா?
இன்ஹேலரை தொடர்ந்து பயன்படுத்துவதால், நெஞ்சுவலி மற்றும் இருதயத்தில் பாதிப்பு ஏற்படாது. உலகளவில் இன்று பல நுரையீரல் நோய்களுக்கு மருத்துவர்கள் "இன்ஹேலரையே' பரிந்துரை செய்கின்றனர். இன்ஹேலரால் நம் நுரையீரலுக்கும், இருதயத்திற்கும் மற்றும் நம் உடலின் எந்த உறுப்புகளுக்கும் ஒருபாதிப்பும் ஏற்படாது. எனவே, உங்கள் ஆயுள்காலம் முழுவதும், பக்கவிளைவுகளே இல்லாமல் இன்ஹேலரை பயன்படுத்தலாம்.

எனது 15 வயது மகனுக்கு, கடந்த 5 நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. அவனை பரிசோதித்த டாக்டர், "நிமோனியா காய்ச்சல்' என்று கூறினார். இதேபோன்ற காய்ச்சல் கடந்த 6 மாதங்கள் மற்றும் ஒரு ஆண்டுக்கு முன் அவனுக்கு வந்தது. நிமோனியா காய்ச்சல் திரும்பத் திரும்ப ஏற்பட என்ன காரணம்?
நுரையீரலில் நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக சுவாசக் குழாய் விரிந்து காணப்படும் நோய் (பிராங்க்கைடீஸ்) உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு, வயதானவர்களுக்கு, நுரையீரலில் ஏதேனும் கட்டி மற்றும் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும், மற்றும் பல காரணங்களாலும் நிமோனியா காய்ச்சல் திரும்ப ஏற்பட, அதிக வாய்ப்பு உள்ளது.
நிமோனியாவின் காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். இதற்கு பிராங்கோஸ்கோப் என்னும் கருவி, உதவியாக உள்ளது. இக்கருவியை சுவாசக்குழாயின் உள்ளே செலுத்தி, நுரையீரலுக்குள் உள்ள பிரச்னையை மிகவும் தெளிவாக கண்டறிய முடியும். மேலும், மார்பக சி.டி., ஸ்கேனும் உதவியாக உள்ளது.
வீசிங் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு, நுரையீரலில் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டால், அது நிமோனியாவின் அறிகுறியாகவே தோன்றும். ஆகையால் நிமோனியா வருவதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், நிமோனியா திரும்ப வருவதை தவிர்க்க முடியும்.

எனது 40 வயது நண்பருக்கு, நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதற்கான நவீன மருத்துவ சிகிச்சை பற்றி கூறுங்களேன்?
உலகளவில், மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, நுரையீரல் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளோர், மாசடைந்த சூழலில் வேலை பார்ப்போர், பிளாஸ்டிக் மற்றும் குப்பையை அதிகம் எரிக்கும் சுற்றுச் சூழலில் வசிப்போர், விறகுஅடுப்பு பயன்படுத்துவோர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்க, அதிக வாய்ப்பு உள்ளது.
நுரையீரல் புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இந்நோயின் தன்மையை கண்டறிந்து, அதற்கு ஏற்ப, சிகிச்சை செய்ய வேண்டும். சிலருக்கு ஹீமோதெரபி தேவைப்படும். சிலருக்கு ரேடியோதெரபி தேவைப்படும். சிலருக்கு இரண்டுமே தேவைப்படும்.
புற்றுநோயின் தீவிரத்திற்கு ஏற்ப அறுவை சிகிச்சை செய்யலாம். புற்றுநோயின் தன்மை "ஸ்டேஜ் 3ஏ' அல்லது அதற்கும் குறைந்த நிலையில் இருந்தால் மட்டுமே, அறுவை சிகிச்சை பலனளிக்கும்.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.