மத்திய ரிசர்வ் போலீஸ் பணிவாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
00:00

சி.ஆர்.பி.எப்., எனப்படும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படையைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்தப் படை 1939லேயே துவங்கப்பட்டு இருந்தாலும், 1949 முதல் இந்தப் பெயரைப் பெற்றது. தற்போது இந்தியாவின் உள் நாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தப் பாதுகாப்புப் படை 60 ஆண்டுகளைத் தாண்டி சிறப்புற செயலாற்றி வருகிறது. இந்தப் படைக்கு தற்போது 207 பட்டாலியன்கள் உள்ளன. இவ்வளவு பிரசித்தி பெற்ற சி.ஆர்.பி.எப்., பாதுகாப்புப் படையில் 54 துணை ஆய்வாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:


சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படையின் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2013 அடிப்படையில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்துவிட்டு, 3 ஆண்டு படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இந்தியாவின் எந்த பகுதியிலும் பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படுகிறது. உயரம் குறைந்த பட்சம் 170 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ.,ரும், 5 செ.மீ., விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. அதே போல் வண்ணக் குறைபாடு உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் இதர தொடர் தேர்ச்சி முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

பிற தகவல்கள்:


சி.ஆர்.பி.எப்.,பின் மேற்கண்ட பதவிக்கு ரூ.50/- ஐ போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி., மூலமாக ஈஐஎக என்ற பெயரில் விண்ணப்பிக்கும் மையத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. முறையான படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் புகைப்படம், சான்றிதழ் நகல்கள் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து 13.02.2013க்குள் கிடைக்குமாறு உரிய மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் மையத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முன்னர் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும்.

முகவரி:

Dy. Inspector General of Police,
Group Centre, CRPF, Chandrayan Gutta,
P.O., Keshogiri, Hyderabad,
Andhra Pradesh - 500 005

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்:


13.02.2013

இணையதள முகவரி:


http://crpf.nic.in/RECRUITMENT/197512.pdf

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.