சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1932ல் இந்திய விமானப் படை நிறுவப்பட்டது. இந்திய விமானப் படையின் முதல் விமானம் 1933 முதல் பறக்கத் துவங்கியது. தற்போது அதி நவீன விமானங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் இந்திய விமானப் படை உலகின் தலை சிறந்த விமானப் படைகளில் ஒன்றாக விளங்குகிறது. இப்படி புகழ் பெற்ற இந்திய விமானப் படையில் வானிலை ஆராய்ச்சிப் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
இந்திய விமானப் படையின் மெட்டியோராலாஜிக்கல் பிராஞ்சுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பட்டப் படிப்பு வரை கணிதம் மற்றும் இயற்பியலை படித்திருந்து குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஏதாவது ஒரு அறிவியல் புலத்தில் முது நிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், அப்ளைடு பிஸிக்ஸ், ஓஷனோகிராபி, மெட்டியோராலஜி, அக்ரிகல்சுரல் மெட்டியோராலஜி, இகாலஜி அண்டு என்விரான்மெண்ட், ஜியோ-பிசிக்ஸ், என்விரான்மெண்டல் பயாலஜி போன்ற பிரிவுகளில் முது நிலை பட்டப் படிப்பு முடித்திருந்து மேலே குறிப்பிட்ட தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். இவற்றுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். பெண்களாக இருந்தால் உயரம் குறைந்த பட்சம் 152 செ.மீ.,ரும் இதற்கு இணையான எடையும் இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் உயரம் குறைந்த பட்சம் 157.5 செ.மி.,ரும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு டேராடூன், மைசூர், காந்தி நகர் அல்லது வாரணாசியில் தேர்ச்சி இருக்கும்.
ஏனைய தகவல்கள்:
இந்தியன் ஏர் போர்சின் வானிலை ஆராய்ச்சிப் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.27/-க்கான சுய விலாசமிட்ட ஒரு கவரை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு 12.02.2013க்குள் கிடைக்குமாறு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
Post Bag No.001, Nirman Bhawan Post Office, New Delhi - 110106
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.