இந்தியாவின் மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்புவதில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் செயல்பட்டு வருகிறது. புதுடில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பின் சார்பாக 39 மருத்துவ அதிகாரிகளையும், 57 அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் (சென்ட்ரல்)/அசிஸ்டன்ட் காலி இடங்களையும் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
யு.பி.எஸ்.சி.,யின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் 3வது ஷெட்யூலின் 2ம் பகுதியின் முதல் அல்லது 2வது ஷெட்யூலின் கீழ் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையத்திலிருந்து அறியவும். அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். சோசியல் ஒர்க், லேபர் வெல்பேர், இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், பெர்சனல் மேனேஜ்மென்ட், லேபர் லா சட்டம் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மற்றவை:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.25/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பாங்கிங் முறையிலோ செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை தவறாமல் அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.