E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மத்திய அரசில் கிளரிக்கல் பணியிடங்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
00:00

கோல் மைன்ஸ் பிராவிடண்ட் பண்டு ஆர்கனிசேஷன் என்பது இந்திய அரசின் எரிபொருள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் உள்ள 15 பி.எப்., இன்ஸ்பெக்டர் காலி இடங்களையும், 281 லோயர் டிவிஷன் கிளரிக்கல் இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:






நிலக்கரி சுரங்க வைப்பு நிதி நிறுவனத்தின் வைப்பு நிதி ஆய்வாளர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், கீழ் நிலை எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பி.எப்., இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் இருந்தால் முன்னுரிமை உள்ளது.
லோயர் டிவிஷன் கிளார்க் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருப்பதுடன் இந்தி அல்லது ஆங்கில டைப்பிங்கை ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறமை உடையவராக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய அடிப்படை அறிவு இருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

மற்றவை:






சி.எம்.பி.எப்.ஓ., நிறுவனத்தின் பி.எப்., இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.500/-ம், லோயர் டிவிஷன் கிளார்க் பதவிக்கு ரூ.300/-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு சலுகை உள்ளது. கட்டணத்தை ஆப்-லைன் மற்றும் ஆன்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் செலுத்தலாம்.
கட்டணத்தை ஆன்-லைன் முறையில் பதிவு செய்த பின்னர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலுத்த முடியும், இந்தப் பணி இடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அல்லது டைப்பிங் தேர்வு என்ற முறையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இணையதளத்திற்கு சென்று இந்தப் பதவிகள் குறித்த முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்:






12.02.2013

இணையதள முகவரி:






http://cmpfo.gov.in/CMPFO&ADVR.pdf

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.