சாம்சங் தன் காலக்ஸி ஸ்மார்ட் போன் வரிசையில், சென்ற வாரம், டில்லியில் காலக்ஸி கிராண்ட் என்ற மாடல் மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மிகப் பெரிய அளவில் 5 அங்குல டி.எப்.டி. தொடு திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 எம்.பி. கேமரா, வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக 2 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா தரப்பட்டுள்ளன.
காலக்ஸி எஸ்3, நோட் 2 ஆகியவற்றில் தரப்பட்ட மல்ட்டி விண்டோ, ஆல் ஷேர் பிளே, பாப் அப் வீடியோ, போன்ற சாப்ட்வேர் அம்சங்களும் இதில் காணப்படுகின்றன.
இதன் இரண்டு சிம் இயக்கமும் ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது. இதில் ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருக்கையில், இன்னொரு சிம்மிற்கு அழைப்பு வந்தால், அது உடனே முதல் சிம்மிற்கு பார்வேர்ட் செய்யப்படும். புளுடூத் 4.0, 3ஜி, வைபி, 8 ஜிபி ஸ்டோரேஜ் நினைவகம், நினைவகத்தினை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் ஆகியவை இதன் மற்ற தொழில் நுட்ப அம்சங்கள். வழக்கமான எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2100 mAh திறன் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் இதன் அதிக பட்ச விலை ரூ.21,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் வழியாக வாங்கினால், முதல் இரண்டு மாதங்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளும் சலுகை கிடைக்கிறது. சாம்சங் நிறுவனம் இந்த போனுக்கு பிளிப் கவர் ஒன்றினையும் வழங்குகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.