தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்த அனைவரும் விரும்புகின்றனர். இவற்றின் விலை வழக்கமான மொபைல் போன்களின் விலையைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பது, இதனை வாங்குவதில் பலருக்குத் தயக்கத்தினைத் தந்து வருகிறது. இதனைத் தீர்க்கும் வகையில் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
அந்த வரிசையில், அண்மையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்டி 3,0 ஏ30 மொபைல் வந்துள்ளது. 3 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், இரண்டு சிம் இயக்கம், இரண்டு பேண்ட் அலைவரிசை இயக்கம், 3ஜி, 2 எம்பி திறன் கொண்ட கேமரா, 2 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், எல்.இ.டி. பிளாஷ், 832 மெகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், 256 எம்பி ராம் நினைவகம் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இரண்டு சிம்களில் ஒன்று 3ஜி போனாக நல்ல வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினை வழங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட். இதில் கூகுள் பிளே, Mi! ஸோன், எம் ஸ்டோர், மொபைல் ட்ரேக்கர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. வைபி, புளுடூத் 2, யு.எஸ்.பி.2 ஆகியவையும் கிடைக்கின்றன. கிராவிட்டி சென்ஸார் உள்ளது. ஆனால், ஜி.பி.எஸ். இல்லை. இதில் 1500 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது.
இதன் பரிமாணம் 4.4 x 2.3x0.57 (14.5 மிமீ)அங்குலமாக உள்ளது.
3ஜி, இரண்டு சிம், 3 அங்குல திரை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக உள்ளன. போன் பெட்டியில் அதிக பட்ச விலை ரூ.5,500 என காட்டப்பட்டாலும், இது ரூ. 3,900 க்குக் கிடைக்கிறது. இதற்கு முன் வந்த ஸ்மார்ட்டி 2.5 ஏ 25 மைக்ரோமேக்ஸ் மொபைல் அதிக திறன் கொண்ட (1 கிகா ஹெர்ட்ஸ்) சிறிய திரையுடன் (2.8 அங்குலம்) ரூ.3,200க்குக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.