புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Stellar Virtuoso (Mi495) என்ற பெயரில் அண்மையில் ஸ்பைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,499. இந்த போனின் திரை 4.5 அங்குல அகலம் கொண்டதாக, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தன்மையுடன் உள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஐஸ் கிரீம் சாண்ட்விச் இயக்கம், 8 எம்பி ஆட்டோ போகஸ் கொண்ட கேமரா, எல்.இ.டி. பிளாஷ், முன்புறமாக 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா, இரண்டு சிம் இயக்கம், 9.44 மிமீ தடிமன், 512 எம்.பி. திறன் கொண்ட ராம் நினைவகம், 4 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. மெமரி கார்ட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வைபி, புளுடூத் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 1,700 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 6 மணி நேரம் பேசும் நேரம் கிடைக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 200 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இலவசமாக லெதர் கவர் மற்றும் ஸ்கிரீன் கார்ட் தரப்படுகிறது.
நாடெங்கும் உள்ள ஸ்பைஸ் ஹாட் ஸ்பாட் கடைகளிலும், 50 ஆயிரம் சில்லரை மொபைல் விற்பனைக் கடைகளிலும் கிடைக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.