மொபைல் வழி அவசர கால பாதுகாப்பு என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தகவல் மிக பயனுள்ளதாகும். பொறியாளர் ராஜாராமன் அவர்களின் இந்த சேவை பாராட்டப்படக் கூடியதாகும். இதனை அனைத்து மொபைல் சாதனங்களிலும் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும்.
எஸ். உஷா ராணி, கோவை.
சிறுவர்களுக்கு கம்ப்யூட்டரையும் இணையத்தையும் வழங்குவது பெரிதல்ல. அவர்களை முறையாக வழி நடத்த வேண்டும் என்ற சரியான அறிவுரையையும், அதற்கெனப் பின்பற்ற வேண்டிய நல்ல வழிகளையும் வழங்குகிறது உங்கள் கட்டுரை “இணையமும் குழந்தைகளும்”. எழுதியவருக்கு என் பாராட்டுக்கள்.
என். மீனாட்சி சுந்தரம், திருச்சி.
பி.ஓ.பி. மெயில் குறித்த தங்கள் விளக்கம் பல விஷயங்களைத் தெளிவு படுத்துகிறது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதனைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி இருக்கலாம். இருப்பினும், நீங்கள் காட்டிய வழிப்படி செட் செய்து பெற்று வருகிறேன்.
என். கிருஷ்ணராஜ், மதுரை.
ஜாவா தான் பல விஷயங்களுக்கு அடிப்படை என ஒரு காலத்தில் பேசப்பட்டது. பின் ஏன், இதில் வைரஸ்கள் வரும் வழியை அடைக்க முடியவில்லை? அடிக்கடி ஜாவா குறித்த எச்சரிக்கை, கம்ப்யூட்டர் பயனாளர்களுக்கு விடப்படுகிறதே?
சா. உத்தம் குமார், ஊட்டி.
பேக் அப் இமேஜ், பைல் ரெகவரி குறித்த தகவல் , இரண்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை விளக்கியது. விண்டோஸ் 8 புதியதாகத் தரும் பைல் ரெகவரியைக் காட்டிலும் விண்டோஸ் 7 தரும் பேக் அப் டூல்ஸ் கூடுதல் பயன்களைத் தரும் வகையில் உள்ளதை வழிகாட்டுதலுடன் தந்தது சிறப்பாக உள்ளது.
எம். நிகிலேஷ், திருப்பூர்.
கொரில்லா கிளாஸ் என விளம்பரத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால், அது என்ன என்பதையும் வர இருக்கும் புதிய கிளாஸ் என்ன அம்சங்களுடன் இருக்கும் என்பதையும் விளக்கியது, புதிய தகவலாக இருந்தது.
கே. சிவகுமார், சென்னை.
Native Damage Resistance (NDR) என்ற புதிய தொழில் நுட்ப பெயர் கொரில்லா கிளாஸுக்கு எப்படி பொருந்துகிறது? இந்த கிளாஸ் உருவாக்கத்தில் உள்ள சிறப்பு பொருட்கள் என்ன என்ற தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பேரா. சி. மருதராஜ், விருதுநகர்.
ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து விலை மலிவான போன் என்பது ஒரு கனவே. எப்படியாவது ஒரு வகையில் அதன் விலையை உயர்த்திவிடுவார்கள். காத்திருந்து பார்க்கலாம்.
எஸ். கே. சாமுவேல் பிரகாஷ், கரூர்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பயன்பாடு, பல இலவச பயனுள்ள அப்ளிகேஷன்கள், இயக்க எளிதான இன்டர்பேஸ், அனைத்து தரப்பினருக்குமான விலையில் பல மாடல்கள் என சாம்சங் உழைக்கும்போது, பத்து கோடி என்ன, இன்னும் அதிகமாக விற்பனை செய்து இந்நிறுவனம் சாதனை படைக்கும்.
டாக்டர் ஞானகுருசாமி, மதுரை.
பல பாடப் புத்தகங்களில் தேடியும் கிடைக்காத Form Factor குறித்த தகவலை, புரியும் வகையில் விளக்கயதற்கு மிக மிக நன்றி.
கா. சிவகுமார், ஐ.டி. மாணவர், சிவகாசி.
ஆண்ட்ராய்ட் செல்லினம், இரண்டு வாரத்தில் பத்தாயிரம் பேருக்கு மேலாக டவுண்லோட் செய்திருப்பதில் வியப்பே இல்லை. கை அடக்கக் கருவிகளில் சிறந்த எளிய ஸ்கிரீன் கீபோர்டினைக் கொடுத்து, தமிழை என்ன அருமையாக, எளிதாகக் குழப்பம் இன்றி அமைக்க வழி தந்துள்ளார், அதன் படைப்பாளர். அவருக்கும், இத்தகவலைத் தந்த கம்ப்யூட்டர் மலருக்கும் நன்றி.
எஸ். புவனா கிரிதரன், கோவை.
குழந்தைகளுக்குக் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் தருவது முக்கியமல்ல. தடுமாறும் வயதில் அவர்களை நெறிப்படுத்துவதுதான் மிக முக்கியம். அந்த வகையில் தாங்கள் தந்துள்ள உதவிக் குறிப்புகள் அனைத்து முத்தானவை. மிக்க நன்றி. இளைஞர்களும் இவற்றைப் பின்பற்றலாம்.
டி.கே. லஷ்மி மனோகரன், புதுச்சேரி.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.