தியாகராஜராக மாறிய கோபி பாகவதர்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
00:00

முத்ரா சபாவின் பதினெட்டாவது பைன் ஆர்ட்ஸ் பெஸ்டிவல், இவ்வாண்டு ஒரு மாத காலம் இசை, நடனம், நாடகம் என, அனைத்து துறைகளிலும் மிக பிரம்மாண்டமாய், மிக கோலாகலமாக நடைபெற்றது.
இதைத்தவிர, இளங்கலைஞர்களுக்காக, பிரத்யேகமாக நான்கு நாட்கள் பன்னிரெண்டு மிகச் சிறந்த கருத்துக் கச்சேரிகளாக தொகுத்து வழங்கப்பட்டது. முத்ராவில் இவ்வாண்டு, மிகச்சிறப்பாக பக்கவாத்ய கலைஞர்களை அழைத்து சிறப்பித்தனர். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் மீண்டும் பங்கேற்காமல் புதிய கலைஞர்களை கொடுத்து நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி ரசிகர்களையும், மாறுபட்ட கோணத்தில் ரசிக்க வைத்தனர்.
இவ்வாண்டு, சிறப்பான இசை நிகழ்ச்சிகளுக்கு, மணி மகுடம் வைத்தது போல் கடலூர் கோபி பாகவதரின் தியாகராஜ சரித்திரம் நடைபெற்றது. கோபியின் இசைச்சித்திரம் பொதுவாகவே, மிக உணர்வு பூர்வமாக நடைபெறும். பார்க்கும் ரசிகர்கள் அவர்கள் குழுவினருடன் ஒன்றிப்போய் கதாபாத்திரத்துடன் கலந்து விடுவர்.
அந்த வகையில் இசைத்துறை, நடனத்துறை என, அனைத்திலும் தியாகராஜரின் கீர்த்தனை இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை. ஆனால் தியாகராஜர் எளிமையான குலத்தில் பிறந்து, இயற்கையிலே சங்கீத ஞானம் பெற்று ராமனை தன் ஆதர்ச தெய்வமாக ஏற்று, அவர் நினைவால் உருகி உருகி, பலகீர்த்தனைங்கள் இயற்றி உள்ளார். ராமனின் சேவையை, எப்படி விடாப்பிடியாக செய்தார் என்பதற்கு வாழ்க்கை சரித்திரத்தில் பல இடங்களை கோடிட்டுக்காட்டி, அதற்கேற்ற தியாகராஜ கீர்த்தனைகளையும், நெக்குருக பாடினார்.
குறிப்பாக ராமன், சீதா தன் பெற்றோர் என்பதற்கு சீதம்மா மாயம்மா, ராமனுக்கு ஆராதனை செய்யும் போது பாடிய வந்தனமும், சரபோஜி மன்னர் அழைப்பை மறுத்த போது பாடிய, "நிதிசால', வீட்டை சகோதரன் இரண்டாக பிரித்து பாகம் போட்ட போது உபசாரமுலனு, ஹெச்சரிக ராமா நீ எனக்கு தரிசனம் கொடு என்று மன்றாடி, அவர் தரிசனம் கிடைத்த போது, பாடிய பால கனகமய என பஞ்சரத்ன கீர்த்தனைகள் எல்லாவற்றையும் மாலையாக கோர்த்து கதை, நடிப்பு, பாட்டு என்று தியாகராஜராக மாறி கோபி பாகவதர் சிறப்பாக இதை அமைத்திருந்தார். இந்த நிகழ்ச்சி, மிகவும் மன நெகிழ்வை தந்தது.
- ரசிகப்ரியா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan Deekshithar - Chidambaram,இந்தியா
03-பிப்-201311:59:41 IST Report Abuse
Venkatesan Deekshithar இந்த உணர்சிகரமான விஷயம் வளர வேண்டும்.வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.