Advertisement
வனிதா குகேந்திரனுக்கு விருது!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2013,00:00 IST

வழுவூர் ராமையா பிள்ளை எனும் ஆலமரம், நடனத்துறையின் தன் விழுதுகளை உலகம் முழுவதும் பரவச்செய்து , தனக்கென்று தனிமுத்திரையை பதித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாண்டு, வழுவூரார் விழா நான்கு நாட்கள் நடைபெற்றது. பாரதீய வித்யாபவன் மயிலை கலையரங்கில், தமிழ்நாடு இசைக் கல்லூரிகளின் இயக்குனர் வீணை காயத்ரி விழாவை துவக்கி வைத்து, வழுவூரார் விருதை ஸ்ரீமதி கனகா சீனிவாசனுக்கு அளித்தார். திருமந்திர செல்வர் டி.வி.வெங்கடராமன் ஐ.ஏ.எஸ்., விருது பெற்றவரைப் பாராட்டிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கனடா நாட்டில் உள்ள டொரண்டோ நகரில், கலைக்கோவில் என்ற பெயரில், கலைப்பள்ளியை நிறுவியுள்ள இலங்கைத் தமிழர்களான வனிதா. குகேந்திரன் மற்றும் குகேந்திரன் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வனிதா வழுவூராரின் மூத்த மாணக்கியரின் சீடர் . இவர் நடன ஆசிரியர். இவரது கணவர் குகேந்திரன் திருவாரூர் பக்தவத்சலத்தின் சீடர்.
இக்கலைத் தம்பதிகளுக்கு, இவ்விழாவில் இவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக, இவர்கள் தங்களது கலை நிறுவனம் மூலம், பல நிகழ்ச்சிகளை கொடுத்து, நம் கலைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
இதில், வனிதாவிற்கு நாட்டியகலா குலநிதி என்ற நடனத்துறைக்கான விருதினையும். குகேந்திரனுக்கு லயகலாகுலநிதி என்ற விருதினையும் விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் வா.வே.சு மற்றும் மோகினி ஆட்டக்கலைஞர் கோபிகா வர்மா இருவரும் இணைந்து வழங்கினர்.
டாக்டர் வா.வே.சு பேசுகையில் தமிழ்க்கலையையும், கலாசாரத்தையும் மேலைநாடுகளில் வேரூன்றச் செய்வதில், இலங்கைத் தமிழர்களின் பங்கை பாராட்டி பேசினார்.

 

மேலும் கலை மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.