காயத்ரிக்கு குரல் வரப்பிரசாதம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
00:00

காயத்ரி வெங்கட்ராகவனுக்கு நயமும், தாபமும் இழைந்தோடும் ஒரு சிறந்த குரல் உள்ளது. இவருடைய குருமார்கள் எல்லோருமே, மிக உயர்ந்த ஞானம் உடையவர்கள். அதிலும் குறிப்பாக அமரர் ஏ.சுந்தரேசனின், உயர்ந்த பாடாந்திரம், காயத்ரியின் புகழ் அத்தனைக்கும் முக்கிய காரணம்.
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில் நடந்த இந்த நிகழ்ச்சியிலும், துவக்கத்திலேயே மனம் கவர்ந்தது, காயத்ரி பாடிய கமல மனோகரி ராக வர்ணம் ஒன்று. இதனை இயற்றியவர் ராசிபுரம் வெங்கடபதியென்று அறியப்படுகிறது.
இந்த வர்ணமே நிகழ்ச்சிக்கு, நல்ல ராசியாக அமைந்து களைகட்ட வைத்தது. நிறைய பாடாந்திரங்களை கேட்க விரும்பும் ரசிகர்களுக்கு, நல்ல விருந்தாக இந்த வர்ணம் அமைந்திருந்தது. தொடர்ந்து கஜமுகனை தொழுது பாடிய வாரணமுக (அம்தச்வனி - கோடீசுவரய்யர்) (ரூபகம்) கீர்த்தனையின் ஸ்வரங்கள் படு நயமாக அமைந்திருந்தன.
ஸ்ரீ ரஞ்சனி ராக ஆலாபனை கேட்க சுவையாக இருந்தது. ஸ்ரீ தியாகராஜருடைய சிறப்பான மாருபல்க கீர்த்தனையும், ஸ்வரங்ரஸ்தாரமும் உயர்வான கற்பனையுடன் இருந்தன. காயத்ரி பிரதானமாக கையாண்ட சங்கராபரண ராக ஆலோபனை, தூய பளிங்கு சுத்தம் போன்று சுருதி துல்லியம் தெளிந்த நீரோடை போன்று இதத்தை ஏற்படுத்துகிறது.
எதுகுல காம்போதி ராக ஆலாபனை சற்று நெருடலானது. சற்றே முள் படுக்கையாக இருக்கும் இந்த ராகத்தை, அல்வா சாப்பிடுவது போல அனாயாசமாக கையாண்டார்.
தியாகராஜனின் புகழ் பெற்ற ஸ்வர ராகசுதா கிருதியை, அவர் இந்த கிருதியில் எப்படியெல்லாம் குறிப்பிட்டுள்ளாரோ, அதன்படியே மிக உயர்வாகப் பாடியது ரசிகர்களுக்கு மட்டமற்ற மகிழ்ச்சியை அளித்தது.
குறிப்பாக மூலாதார இடத்தின், நிரவலில் உலகப்புகழ் பெற்ற மூத்த இசை விதூஷியின் குரலை நினைவுபடுத்தி, உருகிப்பாடியது நெஞ்சத்தை நெகிழ வைத்தது. இவர் போட்ட ஸ்வர பந்தல் அமர்களமாக அமைந்திருந்தது இதற்கு குரல் ஒரு நல்ல வரப்பிரசாதம்.
கனம் கிருஷ்ணய்யர் பைரவி ராகத்தில் இயற்றியதாக கூறப்படும் ஜெகத்ஜனனீ தற்போது, ரதிபதிப்ரியா ராகத்தில் பாடப்பட்டு பிரபலமாகி வருகிறது. காயத்ரியும் ரசிகர்கள் மகிழ, இதைப் பாடிய பின்னர் அமரர் கல்கியின், பூங்குயில் கூவும் சோலையில் ஒரு நாள் என்று துவங்கும் அருமையான பாடலை, ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் பாடினார்.
சாருமதி ரகுமானின் வயலின் வாசிப்பு மதுரம், கச்சிதம், நயம் என்று மூன்றே வார்த்தைகளில் கூறி விடலாம். மிகத் திறமையான தொரு வயலின் கலைஞர் இவர். மனோஜ் சிவா (மிருதங்கம்), சந்திரசேகர சர்மா(கடகம்), வாசிப்புகள் நேர்த்தியாக இருந்தன.

- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shasith UAE Ruwais - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-பிப்-201314:36:00 IST Report Abuse
shasith UAE  Ruwais மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
01-பிப்-201315:56:05 IST Report Abuse
p.saravanan இசையால் வசம் ஆக இதயம் எது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.