இசைக்கருவிகளில் எத்தனை வகைகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:00

ஆப்பிரிக்க மக்களின் ரத்தத்தோடு கலந்தது இசை. ஒரு அம்மா பாடும் தாலாட்டிலிருந்து, கிராம பண்டிகைகள் வரை இசைக் கருவிகளும், பாடலும் ஆப்பிரிக்க வழி வாழ்வின் அடிப்படை நாதமாகும். அன்றாட வாழ்வின் அலுப்பை உடைக்கும் சிறப்பு வழியாக இசையை மக்கள் பயன்படுத்தினர். மிக பிரமாண்டமாக குடையப்பட்ட இசைக்கருவி யிலிருந்து, சில தகடுகளால் உருவான சாதாரண இசைக் கருவி வரை ஆப்பிரிக்கா முழுவதும் எண்ணற்ற இசை கருவிகள் இருக்கின்றன.

கையிலே பியானோ!


சான்சா எனப்படும் இந்த இசை கருவி சிறிய பியானோ. ஆனால், இதனை கைகளில் ஏந்தி இசைக்கலாம். சத்தம் எழுப்பும் பலகை, ஒலியை கூட்டி காட்டும் அமைப்பு ஆகியவைகளோடு குறுகிய மரத்துண்டுகள் அல்லது இரும்பு துண்டுகள் இணைக்கப்படும். ஒவ்வொரு துண்டையும் இசையாளர் இசைத்து குறிப்பிட்ட ஒலிதனை எழுப்பச் செய்வர். இதற்கு அவரது கட்டை விரலை பயன்படுத்துவர். இந்த "கட்டை விரல்-பியானோக்கள்', "பயணியர் நண்பன்' என அழைக்கப்படுகின்றன. ஏனெனில், மக்கள் இதனை இடம் விட்டு இடம் போகும் போது இசைத்தப் படி போகலாம். இதனை அங்கோலாவின் உம்பன்டூ மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆரம்பகால ஆம்பிளிபையர்!


இந்த சைலோபோனின் இசை தரும் கீ-க்களின் கீழே இருப்பவை, பானை போல செய்யப்பட்ட கொடிகளில் வளரும் காய் வகை தாவரத்தின் பழங்களாகும். இந்த பழம் நன்றாக காய வைக்கப் பட்டு இப்படி கட்டப்படுகிறது. இவை கீ-க்கள் அடிக்கப்படும்போது உயர்வான நல்லிசையை தருகின்றன. இந்த சைலோபோன்கள் பிற கருவிகளோடு அல்லது தனியாக வாசிக்கப்படும். வட-மேற்கு கானாவில் உள்ள கிராமத்தில் முக்கிய அறிவிப்புகளை செய்ய இசைக்கப்படுகிறது.

இரட்டை மணிகள்!


இசை கலைஞர்கள் இந்த இரட்டை மணியை கையில் பிடித்தபடி இசைப்பர். இந்த உலோக குடுவைகளை குச்சி, இரும்பு தடி அல்லது கொம்புகளை வைத்து அடித்து இசைப்பர். இது போன்ற சத்தம் எழுப்பும் இசை கருவி கள் திருவிழாக்களிலும், முகமூடி நடனங்களிலும் பயன்படுத்தப்படும். இந்த இரட்டை மணிகள் மேற்கு ஆப்பிரிக்காவின் காமரூனிலிருந்து வருகிறது.

ஹை லைப் இசை!


"ஹை லைப் இசை' என்பது ஆப்பிரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பா முழுவதும் பிரபலமானது. இது கானா மற்றும் சிபாரா லியோனி ஆகிய பகுதிகளின் பாரம்பரிய இசையை அடிப்படையாக கொண்டதாகும். ஆனால், படை அணிவகுப்பு இசை, இறைவனை துதிக்கும் பாடல் இசை, கடலோடிகள் சேர்ந்து பாடும் பாடல் இசை மற்றும் லத்தீன் அமெரிக்க இசை ஆகிய இசைகளின் பாதிப்பும், "ஹை லைப்' இசையில் உண்டு. இவ்விசையில் முக்கிய அங்கம் வகிப்பது கிடாரும், பாடகர்களும்தான்.

எல்லாவிதமான டிரம்கள்!


சமையல் பானையின் மேல் பரப்பப்பட்ட தோலினால் அமைந்த சாதாரண டிரம் முதல் முகமூடி நடனத்தில் பயன் படுத்தப்படும் டிரம் வரை ஆப்பிரிக்காவில் எண்ணற்ற விதமான டிரம்கள் உள்ளன. சில டிரம்கள் கைகளுக்கு கீழே வைத்து கொள்ளுமளவு சிறியதாக இருக்கும். வேறு சில டிரம்களோ வாசிப்பவர் உயரத்திற்கு இருக்கும். ஒரே மரத்திலோ, மரக் கட்டைகள் இரும்பு வளையத்தால் பிணைக்கப்பட்டோ டிரம் செய்யப்படும். பழைய டின்கள், எண்ணெய் டிரம்கள் அல்லது கொட்டாங்குச்சிகளில் விளையாட்டு டிரம்களை வாசிப்பது, வாண்டுகளின் வேலை.

லூட்!


இது நரம்பால் இசைக்கப்படும் யாழ் போன்ற கருவியாகும். ஆப்பிரிக்காவின் அழகான இசை கருவிகளில் இதுவும் ஒன்று. மாலி பகுதியின் முக்கிய இசை கருவியாகும். காய வைக்கப்பட்ட காய், பாதியாய் வெட்டப்பட்டு மாட்டு தோலால் மூடப்படும். இது ஒலியை கூட்டச் செய்யும். இந்த லூட் அல்லது கோரா எனப்படும் இசை கருவியை உடம்பினோடு அணைத்தப்படி நரம்புகளை விரல்களால் மீட்டி இசைப்பர்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.