சாமியாவது, பூதமாவது?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

உலகிலுள்ள பொருட்கள் யாவும் பகவானால் படைக்கப்பட்டது. சகல ஜீவராசிகளும் அவனது சிருஷ்டி. புழு, பூச்சி முதல், மனிதன் வரை, யாவுமே அவனால் உண்டாக்கப்பட்டது. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு போன்றவற்றையும் படைத்தான்.
மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க வேண்டாமா? மனதால் அவனை நினைத்து துதிக்கலாம். பூ, பழம் முதலியவற்றை அவனுக்கு அர்ப்பணம் செய்யலாம். அவன் நாமாவளியைச் சொல்லிச் சொல்லி, நன்றி தெரிவிக்கலாம்.
இந்த நன்றியை அவன் எதிர்பார்க்கிறானா, இல்லையா என்பதை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்று காரியங்களையும் அவன் கடமையாகச் செய்கிறான். நன்றியை எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும், நன்றி செலுத்த வேண்டியது மனிதனின் கடமையாகிறது.
பகவான் ரொம்பவும் எளிமையானவன். அவனிடம் பக்தியோடு இருப்பவர்களுக்கு, தன் சுய ரூபத்தை காண்பிக்கிறான். பக்தரல்லாதவருக்கு உக்ரமான ரூபத்தோடு தோன்றுகிறான். பிரகலாதனுக்கு, நாராயணனாகவும், அவனது தந்தையான இரணியனுக்கு, நரசிம்மனாகவும் தோன்றினான். பக்தனை ரட்சித்தான்; துஷ்டனை சம்காரம் செய்தான்.
பகவானுக்கு எந்த சின்ன பொருளை அர்ப்பணம் செய்தாலும், அதை மிகப் பெரியதாக எண்ணி, அவன் ஏற்று சந்தோஷப் படுகிறான். அவன் படைத்த பொருளையே தான், நாம் அவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம். ஆனாலும், இது நாம் படைத்த பொருள் தானே என்று அவன் நினைப்பதில்லை. மனமுவந்து அவனுக்கு எந்த விதத்திலாவது நன்றி செலுத்துபவர்களை, அவன், தன் பக்தனாக பாவிக்கிறான். இந்த பக்தர்களுக்காக, அவன் எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்; செய்கிறான்.
”ரபி என்ற வேடுவ ஸ்த்ரீ, பகவானிடம் பக்தியோடு இருந்தாள். காடுகளிலுள்ள கனிகளை சேகரித்து, பகவானுக்காக வைத்திருந்து, அவனது வரவுக்காக காத்திருந்தாள். அவளது ஆசிரமத்தைத் தேடிச் சென்று, அவள் அளித்த பழங்களை உண்டு மகிழ்ந்து, அவளுக்கு முக்தியும் அளித்தார் ராமன்.
பாண்டவர்களுக்காக தன் பெருமைகளை மறைத்து, தூதுவனாக சென்றான்! பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்தான் பார்த்தசாரதி. என்ன காரணம்? பக்திக்குக் கட்டுப் பட்டான். அவனைப் பொறுத்தவரை, பெரிய தொழில், உயர்ந்த தொழில், மட்ட தொழில், கேவலமான தொழில் என்பதெல்லாம் கிடையாது. பக்தனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்பது தான் அவனது கொள்கை.
இதே நாராயணன் தானே, மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மனாகவும் உருவெடுத்தான். எதற்காக? பக்த ரட்சணம்! ஆகவே, அவன் சிறுமையாகவும் இருப்பான்; பெருமையாகவும் இருப்பான். அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில், நாமும் ஏதாவது ஒரு வழியில் அவனிடம் ஈடுபாடு கொண்டு விட்டால், அவன் அருள் செய்வான்!
"சாமியாவது, பூதமாவது' என்று சொன்னால் சாமி வராது; பூதம் தான் வரும்!
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!


*சிவபக்தி இருப்பவர்கள் கூட, திருடிப் பொருள் சேர்க்கின்றனரே... இவர்களைப் பற்றி இந்து மதம் கூறுவது என்ன?
அவர்களுடைய பக்தியைச் சிவன் ஏற்றுக் கொள்வதில்லை. எனக்கே இதில் கண் கண்ட அனுபவம் உண்டு.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காயத்ரி - Chennai,இந்தியா
08-பிப்-201307:33:31 IST Report Abuse
காயத்ரி சிலர் கடவுளைச் சேவிக்க நேரமில்லை என்று பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள், நாம் அன்றாடம் செய்யும் சாதம், குழம்பு, ரசம், பொரியலையே நைவேத்தியம் செய்யலாம். வேண்டா வெறுப்பாகவோ அவசரமாகவோ சமைக்காமல் சமையல் செய்யும் மேடையை அலம்பித் துடைத்து கோலம் இட்டு சமைக்கும் முன்பு இந்த உணவு நன்றாக அமைய வேண்டும், குடும்ப ஆரோக்கியம் சிறக்க வேண்டும். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற வேண்டும் என்று எண்ணிச் சமைத்து அதையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்து உண்ண வேண்டும்..அன்புடன் நைவேத்தியம் செய்தால் இறைவன் நிச்சயம் உண்ணுவார்.. கற்கண்டு, வெல்லம், அவல், பால், பழங்கள், சர்க்கரை..இப்படி தன்னால் என்ன முடிகிறதோ அதை நைவேத்தியம் செய்தாலே கடவுளின் அருளைப் பெறலாம், அருளை விட, இந்த உணவு நமக்குக் கிடைத்ததற்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த உணவின்றித் தவிப்பவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையாகவும் கொள்ளலாம்..
Rate this:
Share this comment
Cancel
Pon.Elango - coimbatore,இந்தியா
04-பிப்-201310:46:58 IST Report Abuse
Pon.Elango கடந்த இரண்டு வாரமாக, வாரமலரில் வரும் கவிதை அருமை,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.