இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

ஓய்வுக்கு பின்னும் உழைப்பு!


எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி, அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், தினமும் மதிய உணவு தயார் செய்து, பார்சல் கட்டி, தன் ஸ்கூட்டியில் ஒவ்வொரு அலுவலகமாகப் போய், தேவையானவர்களுக்கு விற்க ஆரம்பித்துள்ளார். நியாயமான விலையில், தரமான உணவாகவும் இருப்பதால், இப்போது நிறைய அலுவலகங்களில், அவருக்கு வாடிக்கையாளர்கள் பெருகி விட்டனர்.
சமாளிக்க முடியாமல், உதவிக்கு ஆள் வைத்திருக்கிறார். இது போக, அலுவலர்கள் விரும்பினால், அவர்கள் வீட்டிற்கே போய் சாப்பாடு கொடுத்துவிட்டு, மாலையில் கேரியரை வாங்கி வருவார். இதனால், மாதந்தோறும் கணிசமான தொகை கிடைக்கிறது.
அவருக்கு வரும் பென்ஷன் பணமே போதுமானதாக இருக்க, இதற்கு என்ன அவசியம் என்று அவரிடமே கேட்டேன்.
"முப்பது ஆண்டுகளுக்கு மேல், அலுவலகம் சென்று வேலை பார்த்த பழக்கம் நின்று விட்டதால், உடலும், மனமும் சோர்ந்து போகும். அதற்கு இடம் கொடுக்காமல், ஏதாவது வேலை செய்யும் போது, உற்சாகம் கிடைக்கிறது. வெளியுலகத் தொடர்பும் கிடைக்கிறது. வாழ்க்கையில் சலிப்பு வராது ...' என்றார்.
ஒரு டிகிரி வாங்கிவிட்டு, அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினர் யோசித்தால், இந்த மாதிரி எவ்வளவோ வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. யோசிப்பார்களா?
விஜயலட்சுமி, மதுரை.

"ஜிம்'முக்கு போகிறீர்களா?

என் நண்பர், தன் உடல் எடையை குறைக்க, சில நண்பர்கள் ஆலோசனையை கேட்டு, ஜிம்முக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள, 1,600 ரூபாய் பணம் செலுத்தி உள்ளார். காலை 5:00 மணிக்கே பயிற்சி மேற்கொள்ள சென்றார். அங்கு இருக்கும் பல பயிற்சி எந்திரங்களில், ஆர்வக்கோளாறு காரணமாக, எதற்காக பயிற்சி என தெரியாமலே, அதிக நேரம் பயிற்சி எடுத்துள்ளார்.
இப்படி பத்து தினங்கள் தான் சென்று இருப்பார். கை, கால், உடல் வலி ஏற்பட, ஜிம்மிற்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, படுத்த படுக்கையாகி, பின், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
விவரம் அறிந்து, மருத்துவமனைக்கு சென்று, நண்பரை பார்த்தேன். அப்போது தான் விஷயமே தெரிந்தது. பல பயற்சிகளை, ஒரே நாளில், மிக அதிக நேரம் செய்ததன் விளைவு மற்றும் அதே காலக் கட்டத்தில் உணவு கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்து, உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல், இடுப்பு பிடிப்பு, மூட்டுவலி, தசைவலி என, நண்பர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேற்படி விபரீதத்தை, விளைவை பற்றி, மருத்துவர் சொன்ன பிறகே, நண்பர் புரிந்து கொண்டார். இது, உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, ஒரு எச்சரிக்கை. ஜிம்மிற்கு பயிற்சி மேற்கொள்ள செல்லும் இளைஞர்கள், எதற்காக பயிற்சி எடுக்க போகிறோமோ, அந்த பயிற்சியை அளவோடு, உரிய முறையில் செய்ய வேண்டும். குறுகிய நாளிலேயே, பல பயிற்சிகளை மேற்கொண்டால், நண்பர் கதிதான். புரிகிறதா இளைஞர்களே!
எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.

செல்போன் விஷமம்!


அரசு அலுவலகம் ஒன்றில், உதவியாளராக பணி புரியும் முப்பது வயது பெண் நான். அவசர தகவல் தொடர்பாக, நான் போன் பேச முயன்ற போது, என் மொபைலில், "டவர்' கிடைக்க வில்லை. அருகிலிருந்த எங்கள் பிரிவு கண்காணிப்பாளரான, ஐம்பது வயது ஆசாமி, என்னிடம் நம்பர் கேட்டு, தன் போனில் பதிவு செய்து எனக்கு பேசக் கொடுத்தார்.
நான் போன் பேசும் போது, நாசூக்காக எழுந்து வெளியில் சென்று விட்டார். பேசி முடித்த நான், இணைப்பை துண்டிக்க முயன்ற போது தான், அது, "டச் ஸ்கிரீன்' வகை போன் என்பது தெரிந்தது. அத்தகு மொபைலை பயன்படுத்தி பழக்கம் இல்லாத நான், ஸ்கிரீனை, இரண்டு மூன்று முறை தொட்டு, இணைப்பை துண்டிக்க முயன்றேன்.
அப்போது திடீரென, மொபைல் திரையில், நிர்வாணக் காட்சிகளுடன், படு ஆபாசமான ஒரு வீடியோ காட்சி ஓட, அதைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன். நான் மொபைல் திரையை, "டச்' செய்து லைனை, "கட்' செய்ய முயன்ற போது, அது வீடியோ ஆப்ஷனுக்கு போய், அவர் பதிவு செய்து வைத்திருந்த ஆபாசப்படம் இயங்க ஆரம்பித்து விட்டதென புரிந்து கொண்டேன்.
என்ன செய்வது என திகைத்த நான், போனை அப்படியே மேஜை டிராயரில் போட்டு பூட்டி விட்டேன்.
ஆத்திர அவசரத்துக்கு பேசவும், தகவல் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தப்படும் மொபைல் போனில், இப்படியா ஆபாச வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொள்வது? கருமம்டா சாமி!
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காயத்ரி - Chennai,இந்தியா
08-பிப்-201307:28:38 IST Report Abuse
காயத்ரி படித்து விட்டு அரசாங்க வேலைக்கோ அலுவலகங்களுக்கோ தான் செல்லுவேன் என்று அமர்ந்திருக்காமல் சிந்தித்தால் நம்மைச் சுற்றியே வேலை வாய்ப்புகள் தென்படும்..விஜயலெட்சுமியின் பக்கத்து வீட்டுப் பெண் செய்த செயல் வரவேற்கத்தகுந்தது..தம்மை உழைப்பிலும் பரபரப்பாக வைத்துக் கொள்வதிலும் சுகம் இருக்கிறது..அனுபவித்தால் தெரியும்..இதே போல் தையல், பாட்டு, ஓவியம், பாடம் நடத்துதல், சுய தொழில் இப்படி எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன..கடற்கரையோரத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பத்து ரூபாய்க்கு மருதாணி இட்டு பணம் சம்பாதிக்கும் பெண்மணிகளைத் தெரியும்..பொய் சொல்லாமல் கொள்ளையடிக்காமல் பாவம் செய்யாமல் உழைத்துப் பிழைக்கும் எந்தத் தொழிலும் கேவலமில்லை..உன்னதம்.. உடற்பயிற்சி செய்யும் போது மெதுவாக செய்யத் தொடங்கி பிறகே வேகத்தைக் கூட்ட வேண்டும், செய்யும் முன் மருத்துவ ஆலோசனையும் பயிற்சியாளர் யோசனைகளையும் கேட்பது பயன் தரும்..
Rate this:
Share this comment
Cancel
lakshvenky - Madurai,இந்தியா
04-பிப்-201310:56:53 IST Report Abuse
lakshvenky எந்த ஜிம் போனாலும் பயிற்சியாளர் தான் உதவி செய்வார். இது தேவை இல்லாத ஒரு வாதம். நாமே எந்த ஒரு பயிற்சியும் செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
04-பிப்-201302:41:01 IST Report Abuse
GOWSALYA 1வது......அந்தம்மாவின் பணி தொடர நல்வாழ்த்துக்கள்.....2 வது.பாவம்.....3 வது/.....சகாயநாதன் சொன்னது உண்மையே..அந்த மனிதனின் குடும்பத்தார் அந்தபோனைப் பார்த்திருந்தால் கெதி என்னவாகும்?////
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
03-பிப்-201322:49:16 IST Report Abuse
VELAN S ஜிம் இல் புதிதாக சேரும் பொது , டாக்டரிடம் சர்டிபிகட் வாங்கி வர வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
03-பிப்-201313:54:25 IST Report Abuse
kumaresan.m " வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வீட்டில் முடங்கி கிடக்காமல் உழைக்கும் அந்த பெண்மணிக்கு தலை வணங்குகிறேன் " இன்றைய அவசர உலகத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளார் ,தொலைகட்சியே கதி என்று கிடக்கும் மற்றும் வீண் வம்புகள் செய்யும் பெண்மணிகளுக்கு ஒரு எடுத்துகாட்டு உழைத்தால் வரும் சந்தோசம் அலாதியானது
Rate this:
Share this comment
Cancel
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
03-பிப்-201310:46:30 IST Report Abuse
sulochana kannan ஜிம்மில் பயிற்சியாளர்களும் ஆலோசனை வழங்குபவர்களும் இருக்க மாட்டார்களா?
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
03-பிப்-201310:44:01 IST Report Abuse
p.manimaran அருமையான கருத்துகள்.
Rate this:
Share this comment
Cancel
Gobinathan Baladhandapani - Madurai,இந்தியா
03-பிப்-201308:59:46 IST Report Abuse
Gobinathan Baladhandapani ஓசி மொபைல் வாங்கி பேசுனதும் இல்லாம ...அவரையே குறை சொல்லும் இந்த குணத்தை என்ன சொல்வது... மொபைல் என்பது ஒருவருடைய சொந்த பொருள்... அது அடுத்தவர் பார்பதற்கோ உபயோகிபத்ற்கோ அல்ல.. இந்த பெண்கள் பெரும்பாலும் எப்படித்தான்...
Rate this:
Share this comment
pattikkaattaan - Muscat,ஓமன்
03-பிப்-201315:42:15 IST Report Abuse
pattikkaattaan ///மொபைல் என்பது ஒருவருடைய சொந்த பொருள்... அது அடுத்தவர் பார்பதற்கோ உபயோகிபத்ற்கோ அல்ல../// ..இதே மொபைல் போனை அவர் வீட்டிலுள்ள குழந்தைகள், மனைவி பார்க்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது .. அப்போ யாருக்கெல்லாம் பிரச்சினை ஏற்ப்படும் என்று எண்ணிப்பாருங்கள் ... இவர் இந்தப்பெண் பார்க்கட்டும் என்ற ரீதியில்கூட இந்த மாதிரி படம் போட்டு கொடுத்திருக்கலாம் ... எந்த புற்றில் எந்த பாம்போ யார் கண்டார் ?.......
Rate this:
Share this comment
Gobinathan Baladhandapani - Madurai,இந்தியா
03-பிப்-201320:57:25 IST Report Abuse
Gobinathan Baladhandapaniகொலை செய்வது குற்றமா? என்று கேட்டல் ஆம் என்ற பதில்தான் பெரும்பாலும் வரும்...ஆனால் போரிலும் நாட்டின் எல்லையிலும் இதுவரை எத்தனியோ பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.. அதற்கு பெயர் சேவை... அது போல்தான் இதுவும்..சொந்த போரும் என்ற ஒன்றில் மனைவி மற்றும் குழந்தைகள் அடக்கம்.. கல்யாணமான குழந்தைகள் உள்ள ஒருவர் மொபைல் போனில் ஆபாச படம் வைத்து இருந்தால் அது ஒப்புகொள்ள முடியாது ... ஆனால் இந்த வாசகி எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவரா இருக்கு. .அது மட்டும் இல்லாமல் இது போன்ற சந்தர்பங்களில் வேறு பெண்ணின் போன் வாங்கி உபயோகபடுத்துவது நல்லது... இது தேவைற்ற பிரச்சனைகளை தடுக்கும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.