சீனாவில், ஏற்கனவே, 15 நாட்களில், 30 மாடி கட்டடத்தை கட்டி முடித்து, சாதனை நிகழ்த்தினர். இப்போது, அந்த சாதனையையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளனர். 90 நாட்களில், 450 மாடிகளை உடைய, பெரும் கோபுரத்தை கட்ட, முடிவு செய்துள்ளனர்.
இந்த கட்டடம், சியாங்ஜாங் ஆற்றங்கரையில் உள்ள, சாங்ஷா நகரில், அமையவுள்ளது. ஒரு நாளைக்கு, ஐந்து மாடி என்ற மதிப்பீட்டில், 90 நாட்களுக்குள், முழு கட்டடத்தையும், கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாயின், புர்ஜ் கலிபாவில் உள்ள, உலகின் மிக உயரமான கட்டடத்தை கட்டிய நிறுவனம் தான், இந்த கட்டடத்தையும் கட்டுவதற்கு, பணியமர்த்தப்பட்டுள்ளது.
இதில், 83 சதவீத இடங்கள், குடியிருப்புக்கும், மீதமுள்ளவை, வர்த்தக நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளன. இந்த கட்டடத்துக்கு, "ஸ்கை சிட்டி' என, பெயரிட்டுள்ளனர். எவ்வளவு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டாலும், அதை தாங்கும் வகையில், அதி நவீன தொழில்நுட்பத்தில், இந்த கட்டடம், கட்டப்படவுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.