அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது வெள்ளைக்காரர் காலத்திலேயே நடந்துள்ளது. குப்பண்ணா ஒரு புத்தகத்தை ஓசைப்படாமல் என்னிடம் நீட்டி, "அம்பி... இதப் படிச்சுப் பாருடா!' என்றார்.
அந்த ஞாயிற்றுக்கிழமை, ஒருவர் கண்ணிலும் படாமல், எக்மோர் மியூசியம் சென்று, வாகாக ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
ஜே.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூல் அது.
அதில் —
கப்பத் தொகை, 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் கட்டபொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்சன், எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேயே படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.
இதன்படி, தன்னை ராமநாதபுரத்தில் ஆக., 18, 1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்த கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.
அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்த போது, கட்டப்பொம்மனும், அவரது பரிவாரங்களும், ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.
பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி, 23 நாள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில், ஜாக்சனை சந்தித்தார் கட்டப்பொம்மன்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, 5,000 (1080 பகோடா) ரூபாய் மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டப்பொம்மன், 11 ஆயிரம் ரூபாய் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.
அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது, கட்டப்பொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணி நேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில், ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், கட்டப்பொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப் பட்டார். கட்டப்பொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டப்பொம்மன் தப்பித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின், கட்டப்பொம்மன், சென்னை கவர்னருக்கு, மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்...
இதைப் படித்துக் கொண்டிருக்கும் போது, "செத்' என்ற சப்தத்துடன் காகத்தின் எச்சம் அருகே விழுந்து, கவனத்தை திசை திருப்பியது.
கையோடு வாங்கிச் சென்றிருந்த, "டெட்ரா பேக்' ஜூசை திறந்து, இரண்டு மடக்கு குடித்தேன். அப்போது, சற்றுத் தொலைவில் இருந்த மரத்தடியில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து, முகத்துக்கு முகம் நெருங்கிப் பார்த்து, வாயைத் திறந்து மீன் மூடுவது போல உதடுகளை துருத்தி, "உம்மா' கொடுப்பது போல் பேசிக் கொண்டிருந்தனர்.
"இது என்னடா தலைவலி' என்று நினைத்தபடி, புத்தகத்தில் மீண்டும் கண்ணை பதித்தேன்.
கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கைகலப்பிற்கு, ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம், "டுபாக்கூர்'தானா?)
கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.
இக்குழுவின் விசாரணையில் (டிச.,15,1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது. விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லூசிங்டன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
— இப்படி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிகழ்வுகளுடன் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி எழுந்தேன்... தூரத்தில் இருந்த காதல் ஜோடியை அருங்காட்சியக காவலர் ஒருவர், விரட்டிக் கொண்டிருந்தார்!
***

நம் இந்திய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவு இல்லை; அவர்களை கல்வி அறிவு பெற்றவர்களாக்க, நம் அரசு பெரும் முயற்சி எடுத்து வருவது நாம் அறிந்ததே!
முதியோர் கல்வி, கரும்பலகை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது அர”. இந்தியாவிலேயே, கேரள மாநிலம் தான் முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது; தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழுமையான கல்வி அறிவு பெற்றவர்கள்.
நம் நாட்டு கதை இப்படி இருக்க, முன்னேறிய நாடுகளின் வரிசையில் நிற்கும் கனடா நாட்டின் கதையைக் கேளுங்கள்... கனடா நாட்டு அரசில், "வேர்ல்ட் லிட்டரசி ஆப் கனடா' என்ற அமைப்பில் பணியாற்றும், அந்த தமிழ் அன்பர் ஒருவரை சமீபத்தில் சந்தித்த போது, அவர் கூறக் கேட்ட சமாச்சாரம் இது:
கனடா நாட்டு மக்களில், 50 லட்சம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது! (கனடாவின் மொத்த மக்கள் தொகை, இரண்டு கோடி 70 லட்சம். இவர்களில் படிக்கத் தெரியாதவர்களின் சதவீதம் 19.)
கல்வி அறிவு இல்லாத கனடாக்காரர்களில், 15 லட்சம் பேருக்கு, தம் கார் டிரைவிங் லைசன்ஸ் எப்போது காலாவதியாகிறது என்பதை, லைசன்ஸ் புத்தகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளும் திறமை கிடையாது!
இவர்களில் 26 லட்சம் பேருக்கு, மருந்து, மாத்திரை பாட்டில்களில், அவற்றை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது!
சாலையில் உள்ள வழிகாட்டும் சின்னங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படித்து அறியும் திறன், 28 லட்சம் பேரிடம் இல்லை!
இன்னும் சில லட்சம் பேரிடம் டெலிபோன் பில்லைப் பார்த்து, அதில் பண பாக்கி எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது. இதேபோல, இன்கம்டாக்ஸ் பாக்கி அறிதல், டெலிபோன் டைரக்டரியில், "எல்லோ பேஜ்' பார்த்து, முகவரி அறிதல் போன்றவை தெரியாது, என்றார்.
(என்னடா இது... எழுதப் படிக்க தெரியாதவர் எண்ணிக்கை, 50 லட்சம் தான் என்றார். இவர் சொல்லும் 26 லட்சம், 28 லட்சம் இன்னும் சில லட்சம் என லட்சக்கணக்கில் சொல்லிக்கொண்டே போகிறாரே... அப்படியானால், கனடா நாட்டு மக்கள் எவருக்கும் கல்வி அறிவு இல்லையா அல்லது அந்துமணி, "டுபாக்கூர்' அடிக்கிறாரா என நினைக்கிறீர்கள் தானே! சிறு விளக்கம்: எழுத்து அறிவு இல்லாத, 50 லட்சம் பேரில், இந்த இந்தத் தொகுதிகளில், அதாவது, சாலை விதி அறிவிப்புப் பலகை படிக்கத் தெரியாதவர், மருந்து பாட்டிலில் எழுதியுள்ளதைப் படிக்கத் தெரியாதவர்... என இவை கணக்கிடப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் படிப்பறிவில்லாதவர் எண்ணிக்கை, 50 லட்சம் தான்!)
தமிழ் அன்பர் தொடர்ந்தார்: இன்னொரு ஆச்சரியமான கணக்கெடுப்பு பாருங்கள் அந்துமணி... கனடாவில் குடியேறிய இங்கிலாந்து நாட்டு மக்களை விட, கனடாவில் வசிக்கும் தெற்கு ஆசிய மக்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், முன்னேறியவர்களாகவும் உள்ளனர்.
தெற்கு ஆசிய மக்களில், இந்தியர்கள் சிறப்பான இடத்தை வகிக்கின்றனர். கல்வி அறிவு அற்ற கனடா நாட்டு மக்களால், கனடா அரசுக்கும், வியாபாரிகளுக்கும் தினமும் பல லட்சம் பொருள் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது... கல்வி அறிவை இவர்களிடம் வளர்க்க பெரும் பொருட் செலவு செய்து வருகிறது கனடா அரசு, என முடித்தார்!
"கனடாவிலேயே இந்த நிலை தானே...' என, நம் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம். கல்வி அறிவு அற்றவர்களால் கனடாவுக்கு பல கோடிக்கணக்கில் இழப்பு என்றால், வளர்ந்து வரும் நம் இழப்பு பல விதங்களிலும் எவ்வளவு என நினைத்துப் பாருங்கள்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hallad hallad - Jeddah,சவுதி அரேபியா
08-பிப்-201315:00:55 IST Report Abuse
hallad hallad வெள்ளகார பசங்க தப்பு கெட்டவனுங்க.... போகிற எடமெல்லாம் பொன்னும் பொருளும் மட்டுமே தெரிந்தது.. பிரெஞ்சு காரன் மாதிரி கலாசாராதையும் (legacy) விட்டு போயிருந்தால் நம்ம ஆளுங்க வொழுக்கமா இருந்து இருப்பாங்கலூஊ?
Rate this:
Share this comment
Cancel
John Bose - Toronto,கனடா
06-பிப்-201306:58:47 IST Report Abuse
John Bose Kindly go throught the following website: ://en.wikipedia.org/wiki/List_of_countries_by_literacy_rate (World Litracy Rate BASED ON UN REPORT) ://en.wikipedia.org/wiki/Population_of_Canada_by_year (Population Of Canada) ://en.wikipedia.org/wiki/List_of_countries_by_traffic-related_death_rate (World Accident Rate based on UN REPORT) and etc.... I went throught your article written about CANADA i just want you to let you know the following details 1. The population of canada which you mentioned was in the year 1990. right now it is 34,482,779 - according to 2011. 2. Regarding the litracy rate which you have mentioned is entairly wrong. reffer the link above mentioned. 3. I really laughted when i read about the licence book which you have mentioned in this article. their is no such thing called licence book in canada or in any other developed nations. we have only machine readable license. ( when i showed my indian license to the concerned officers in canada they laughed at me saying that how can they read my licence through their machine which they couldnt able to understand.) Thus one need not know when to renew because we will get a message from the concern department in well advance. 4. As you have mentioned in the traffic signals their are no letters like ( start, go stop) to get a class 5 licence one has to really work hard to pass to obtain licence. and the traffics are well signalled. and one of the best and less accident country in the world 5. Regarding the telephone bill as you said. its all computeraized the bill is paid automatically theough the credit cards or their interac cards, and remember the telephone was invented in canada by Mr. Bell. and remember some great inventions like insulin also was invented by canadian and etc.... 6. From the age of 18 till the death the tax papers are prompt and centralized and everyone one well know about it. (its must because of cpp ) 7. Remember canada is one among the G7, G8, NATO, OECD, UNITED NATION, ETC..and right now the international space station commandor is Mr. Chris Hadfield a candian. 8. And Finally Canada is one the free health care country providing universal standard of health care facilities. you have mentioned that people do not know read the doctors preion, remember each and every one of us make sure to read things before we buy anything (applicable for all purpose including food, medicine, etc...) Conclusion: Next time when you write about other countries make sure of things and publish it please.
Rate this:
Share this comment
Cancel
மண்புழு - Faraway Land,அன்டார்டிகா
04-பிப்-201318:01:02 IST Report Abuse
மண்புழு கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்று தமிழ்வாணன் புஸ்தகமே எழுதியிருக்கிறார் என்று கேள்வி.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
04-பிப்-201312:29:49 IST Report Abuse
G.Prabakaran ஒரு முறை 35 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை பல்கலை நூலகத்தில் நான் கூட ஒரு புத்தகம் கட்ட பொம்முவை பற்றி (அந்த புத்தகம் முழுவதும் கட்ட பொம்மு என்றே குறிபிட்டிரிந்தது) படித்தேன் அதில் நீங்கள் குறிப்பிட்டதை போல் பல சம்பவங்கள் கட்ட பொம்மு மிக சாதாரண பயந்தான் கொள்ளி குறு நில மன்னனாக குறிப்பிட பட்டிருந்தது. அந்த நூல் படித்தவுடன் தெரிந்தது நாடகத்திலும், சினிமாவிலும் சக்தி கிருஷ்ணசுவாமி கதை வசனத்தில் சிவாஜி கணேசன் உணர்ச்சி பிழம்பாக வீர பாண்டிய கட்டபொம்மன் என்கிற பெயரில் அந்த கட்ட பொம்முவை ஓர் வீரம் செறிந்த பாத்திரமாக காட்டி விட்டார்கள். ஆனால் சக்தி கிருஷ்ணசுவாமி அந்த படத்தின் கடைசி காட்சியில் கோழையை போல் தப்பி ஓடிய எனக்கு வேண்டும் இந்த இழிவு சாவு என குறிபிட்டது மட்டுமே உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Jagannathan B - New York,யூ.எஸ்.ஏ
04-பிப்-201305:25:25 IST Report Abuse
Jagannathan B கட்ட பொம்மனும் ஊமைத்துரையும்(அவரர் தம்பீ) யும் தோல்விக்கு பிறகு திருமயம் கோட்டையில் ஒளிந்து கொண்டார்கள் பிறகு புதுக்கோட்டை மன்னர் கொடுத்த துப்பினால் அவர்கள் கைது செய்ய பட்டார்கள் பிறகு தூக்கு இந்த துப்புகொடுத்த குற்றம் மன்னர்களை( பின்னால் வந்தவர்களை) வருத்தப்பட செய்தது தங்கள் குடும்பத்தில் சாபம் வரும் என்று அஞ்சி ஒருமுறை சதாசிவ பிரம்மேன்றால் என்ற மகான் புதுவைக்கு வந்தபோது அவரிடம் கேட்டபோது அவரும் விஜயதசமி அன்று பெண்களுக்கு சீயக்காய் நல்லெண்ணை மற்றும் ஒரு அம்மன் காசு ( இந்த ஒரு பழைய வெள்ளையன் காலத்து பைசாவில் மூன்றில் ஒரு பங்கு) தானமாக கொடுக்கும் படி பணித்தார் இந்த வழக்கம் 1947 வரை தொடர்ந்தது ( சமஸ்தானம் 1948 மார்ச் தான் இந்தியாவுடன் இணைந்தது
Rate this:
Share this comment
Cancel
Jagannathan B - New York,யூ.எஸ்.ஏ
04-பிப்-201303:49:05 IST Report Abuse
Jagannathan B The Collector who took over from Mr. Jackson under the orders of the East India company was named as Mr. Loushington He wrote to the Governor " the conduct of Mr. Jackson was unnecessarily harsh on the Poligars" The letter was the basis for taking action. This information I read from the Serial " Veerapandiya kattabomman Varalaru" published in Ananda Vikatan some 50 to 55 years back. I quote from my memory
Rate this:
Share this comment
Cancel
suresh kanyakumari - Nagercoil,இந்தியா
03-பிப்-201323:47:02 IST Report Abuse
suresh kanyakumari கனடா மிகவும் பெரிய நாடு. ஆனால் மக்கள் தொகை 3.5 கோடி மட்டுமே. இவர்கள் natural resources நம்பி தான் இவர்களுடய பொருளாதாரம். இங்கு படிப்பு என்பது முக்கியம் கிடயாது. படித்தவர்களை விட படிக்காதவர்கள் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். கஷ்டமான வேலை என்றால் அதற்கு சம்பளம் அதிகம், என்ன வேலையா இருந்தாலும் சரி. கடன் வாங்கி படித்து கொண்டு கடனை கட்டுவதை விட சிறு வயதில் இருந்து வேலைக்கே சென்று விடுகிறார்கள். இயற்கையை சார்ந்து இருப்பதால் பல தொழில்சாலைகள் இங்கு உள்ளது. எந்த வேலை செய்தாலும் யாரையும் பிரித்து பார்க்க மாட்டார்கள். ஒரு truck driver or taxi டிரைவர் மாதம் 6-10 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார்கள் ஆனால் எவ்வளவு உயர்ந்த படிப்பு படிதிருந்தாலும் இதை விட மாத சம்பளம் குறைவாக தான் இருக்கும். நம் நாட்டில் அப்படி கிடயாது. வறுமையில் இருந்து வெளியில் வருவதற்கு படிப்பு ஒரு பெரிய சொத்தாக உள்ளது. கனடாவில் உள்ள கலாசாரம் நம் நாட்டை விட மிகவும் மாறு பட்டது. அதனால் கல்வியை அவர்களிடம் ஒப்பிடுவது உகர்ந்ததாக தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
suresh kanyakumari - Nagercoil,இந்தியா
03-பிப்-201323:45:06 IST Report Abuse
suresh kanyakumari இன்றும் வெள்ளைக்காரர்களிடம் தவறு என்றால் நிச்சயம் தண்டனை உண்டு. உள் நாட்டு சட்டங்களை மிகவும் சிறப்பாக கடைபிடிப்பர். ஆனால் வெளி நாடுகளிலோ Divide and rule policy இவர்களுக்கு கை வந்த கலை. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்த பொழுது கட்டிய அணைகள், கட்டடங்கள் இன்றும் சிறப்பாக உள்ளது. அவர்களுடைய ஆங்கிலம் மொழி தான் நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.////
Rate this:
Share this comment
Cancel
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
03-பிப்-201314:09:30 IST Report Abuse
sulochana kannan ஆங்கிலம் பேசும் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் அன்னாட்டுக்காரர்களை விடவும் அவர்களுக்கு சமமாகவும். இந்திய சீன மக்கள் சிறந்து விளங்குகிறார்கள். ஒரு வேடிக்கை. ஒரு ஆஸ்திரேலியர் என்னிடம் நீங்கள் ஆஸ்திரேலிய வந்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்று என்றார் ஏன் இரண்டு வருடம் இருக்கும் என்றேன் பரவயில்லையே இவ்வளவு சீக்கிரம் ஆங்கிலம் நன்றாக பேசுகிறீர்கள் என்றார் , நான் சொன்னேன் இந்தியாவிலேயே நாங்கள் நன்றாக பேசுவோம் என்றேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.